Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Reserve Bank

அடேங்கப்பா…! கல்யாணச் சந்தையில் புழங்கும் 6 லட்சம் கோடி ரூபாய்!

அடேங்கப்பா…! கல்யாணச் சந்தையில் புழங்கும் 6 லட்சம் கோடி ரூபாய்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
''கல்யாணம் பண்ணிப்பார்; வீட்டைக் கட்டிப்பார்!'' ஆகிய இரண்டுமே அனுபவித்து, ஆய்ந்து சொன்ன மொழிகள். இவ்விரண்டு திட்டங்களிலும் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது. மட்டுமின்றி, உறவுகளை ஒன்றிணைப்பதும் முக்கியமாகிறது. எப்போது, எது கைகூடும்? எது உடையும்? எப்போது இத்திட்டங்கள் நிறைவேறும்? என்று கடைசித் தருணம் வரை திக்… திக்… நிமிடங்களாகவே கடந்து போக வேண்டியதிருக்கிறது. இரண்டுமே உணர்வுப்பூர்வமானது. என்றாலும்கூட, கல்யாண வைபவம் என்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது என்பதால் மனதிற்கு நெருக்கமானதாகிறது. ஒரு காலத்தில் மணமகள் அல்லது மணமகன் வீட்டிலேயே தென்னங்கீற்றுப் பந்தல் போட்டு, திருமண விழாக்களும், விருந்து உபசரிப்பும் களைகட்டின. நாகரிக மாற்றத்தால் இப்போது அவரவர் சக்திக்கு ஏற்ப மண்டபம் பிடிக்கின்றனர். மண்டபத்தை உறுதி செய்த பிறகு அழைப்பிதழ் அச்சடிப்பதில் இருந்து தொடங்குகிறது கல்யாண வ...
தங்கப்பத்திரம் வெளியீடு பிப். 12ம் தேதி தொடங்குகிறது; மலிவு விலையில் தங்கம் வாங்கலாம்…

தங்கப்பத்திரம் வெளியீடு பிப். 12ம் தேதி தொடங்குகிறது; மலிவு விலையில் தங்கம் வாங்கலாம்…

முக்கிய செய்திகள், வர்த்தகம்
இந்தியப் பாரம்பரியத்தில் தங்கத்திற்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. சேமிப்பு என்றாலே வெகுமக்களின் சிந்தனையில் முதலிடம் பிடிப்பது தங்கத்தில் முதலீடு செய்வதுதான். அதற்கு அடுத்து வங்கிகளில் டெபாசிட், நிலம், இன்சூரன்ஸ், பங்குகளில் முதலீடு செய்கின்றனர். தங்கத்தில் முதலீடு என்றாலே நகைகளாக வாங்குவதுதான் என்ற மனவோட்டத்தில் மக்கள் இருக்கின்றனர். நகை அல்லது நாணயங்களாக வாங்கும்போது அவசரத் தேவைக்காக உடனடியாக அடகு வைத்தோ அல்லது அன்றைய சந்தை மதிப்பிற்கு விற்றோ எளிதில் பணமாக்கிக் கொள்ள முடியும். அதேநேரம், செய்கூலி, சேதாரம் கணக்கில் கணிசமான இழப்பையும் சந்திக்க நேரிடுகிறது. ஆனால், தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்வது அப்படியானது அல்ல. இங்கு எல்லாமே காகித வடிவம்தான். அதாவது, டிஜிட்டல் வர்த்தகம்தான். ஆபரணங்களில் முதலீடு செய்வதைக் காட்டிலும் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது, கணிசமா...
ரூ.6 கோடி ரயில் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கியது சிபிசிஐடி! #TrainRobbery #Salem

ரூ.6 கோடி ரயில் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கியது சிபிசிஐடி! #TrainRobbery #Salem

இந்தியா, குற்றம், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சேலத்தில் இருந்து சென்னை சென்ற எக்மோர் எக்ஸ்பிரஸ் ரயிலில், வங்கிகளில் இருந்து கொண்டு செல்லப்பட்ட ரூ.5.78 கோடி ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் நெருங்கிவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுத்துறை வங்கிகளில் சேகரமாகும் பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட இடைவெளியில் திரும்பப் பெற்றுக்கொள்வது நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி, சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சில பொதுத்துறை வங்கிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட ரூ.342.75 கோடி பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை சேலத்தில் இருந்து சென்னை செல்லும் எக்மோர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது.   இதைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி, ரூ.342.75 கோடியை 226 அட்டைப...
இந்திய வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 9.50 லட்சம் கோடியாம்!

இந்திய வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 9.50 லட்சம் கோடியாம்!

இந்தியா, முக்கிய செய்திகள்
இந்திய வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 9.50 லட்சம் கோடியாக உயரும் என்று அசோசெம் எனப்படும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அசோசெம் அறிக்கையில் மேலே சொல்லப்பட்ட ஒரு வரி தகவல்தான், புதிய செய்தி. அதற்கு முன்பாக செயல்படாத சொத்துக்கள் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியதாகிறது. வாராக்கடன் (Bad Debt) மற்றும் வாரா அய்யக்கடன் (Bad and Doubtful Debt) என்ற சொற்கள் எல்லாம் கணக்குப்பதிவியலை ஒரு பாடமாக படித்தவர்கள் நன்கு அறிவர். அந்த வாராக்கடன் சொல்லுக்குதான் புதிய மூலாம் பூசி, 'செயல்படாத சொத்துக்கள்' (NPA - Non Performing Asset) என்கின்றனர். இந்த புதிய சொல்லாடல் எல்லாமே 1991க்கு பிறகுதான் நடைமுறைக்கு வருகிறது. அதாவது, உலகமயம் கொள்கையை கையில் எடுத்த பிறகு. அப்போது இருந்துதான் தாராளமயம், தனியார்மய கொள்கைகளும் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டன. ...
10 ரூபாய் நாணயங்கள் செல்லும்!; ஆர்பிஐ அறிவிப்பு

10 ரூபாய் நாணயங்கள் செல்லும்!; ஆர்பிஐ அறிவிப்பு

இந்தியா, முக்கிய செய்திகள்
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 14 வகையான பத்து ரூபாய் நாணயங்களும் செல்லுபடியாகும் என்றும், வங்கிகள் அவற்றை வாங்காமல் புறக்கணிக்கக்கூடாது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய பணச்சந்தையில் 5 ரூபாய், 10 ரூபாய், 2 ரூபாய், 1 ரூபாய் நாணயங்கள் பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிடப்பட்டன. இவற்றில், 10 ரூபாய் மதிப்பில் போலி நாணயங்கள் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று வதந்தி பரவியது. பாகிஸ்தான் நாட்டில் இருந்து இவ்வாறு போலி நாணயங்கள் அச்சிட்டு, இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதை இந்திய அரசும் பலமுறை மறுத்துள்ளது. எனினும், சாலையோர வியாபாரிகள், சாமானியர்கள் முதல் வங்கியாளர்கள் வரை பத்து ரூபாய் நாணயங்களை பட்டுவாடாவுக்கு ஏற்க மறுத்தனர். பத்து ரூபாய் நாணயங்களை யாரும் வாங்காமல் ...
”நம்புங்கள் பிரதமரே!  முயலுக்கு நான்கு கால்கள்தான்!!”

”நம்புங்கள் பிரதமரே! முயலுக்கு நான்கு கால்கள்தான்!!”

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்பு  (Demonetisation) நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில், சமூகவலைத்தளங்களில் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பலர் கேலி, கிண்டலாக மீம்ஸ்கள் மூலம் கருத்துகளை பதிவிட்டு உள்ளனர். இரவு நேரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த வயதிலும் அப்படி என்னதான் பற்றுதலோ தெரியவில்லை. இப்படிச் சொல்வது கொஞ்சம் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஸ்டைல் போலத் தோன்றினாலும் யாரும் அனர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். அவர் நாட்டை உலுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் இரவில்தான் அறிவிக்கிறார். பணமதிப்பிழப்பு முதல் ஜிஎஸ்டி வரை எல்லாமே இரவில்தான் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 1000 ரூபாய், 500 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவிக்கப்படுவது குறித்து எனக்குக்கூட தெரியாது என அப்பாவியாகச் சொன்னார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி. ரிசர்வர் வங்கி ஆளுநருக்கே கூட அறிவிப்புக்கு சற்று முன்னர்தான் தெரி...
”பணமதிப்பு நீக்கத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை” – ரங்கராஜன்

”பணமதிப்பு நீக்கத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை” – ரங்கராஜன்

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள், வர்த்தகம்
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கருப்பு பண நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் கூறினார். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு முதல் இந்தியாவில் அதுவரை புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அதிரடியாக குண்டை தூக்கிப் போட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இது அபாயகரமான நடவடிக்கை என்று அப்போதே எதிர்க்கட்சிகள், பொருளாதார நிபுணர்கள் பலரும் எச்சரித்தனர். அகலமான மார்பை விரித்துப் பேசும் நரேந்திர மோடி இதையெல்லாம் கேட்பாரா?. நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கவும், தீவிரவாத கும்பலுக்கு கள்ளத்தனமாக பணம் போய்ச்சேர்வதைத் தடுக்கவும் உயர்மதிப்பு கொண்ட ரூபாய் தாள்களை செல்லாததாக்குகிறோம் என்றார். சில நாள்கள் கழித்து, கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவும், டிஜிட்டல் வர்த்தகத்தை ஊக்குவிக்கவும்தான் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்ட...
பணமதிப்பிழப்பு: காவிகளின் பெரும் தோல்வி

பணமதிப்பிழப்பு: காவிகளின் பெரும் தோல்வி

அரசியல், இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்
கருப்பு பணம் - ஊழல் ஒழிப்பு கோஷங்களை, தேர்தல் சுலோகமாக பயன்படுத்தி, அரியணையேறிய மோடி உள்ளிட்ட காவி கும்பலின், பணமதிப்பிழப்பு நடவடிக்கை பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு, பிரதமர் நரேந்திர மோடி டிவியில் தோன்றி, அதுவரை புழக்கத்தில் இருந்து வந்த ரூ.1000, ரூ.500 பணத்தாள்கள் இனி செல்லாது என்று ஓர் அறிவிப்பை திடீரென்று வெளியிட்டார். இந்திய தேசத்தின் மீது இந்திய அரசாங்கமே நடத்தியிராத மிகப்பெரும் தாக்குதல் அது. மோடியின் பாணியில் சொல்வதென்றால் சொந்த நாட்டினர் மீதான 'சர்ஜிகல் ஸ்டிரைக்'. இந்த அறிவிப்பினால் சாமானியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அடுக்களையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒளித்து வைத்திருக்கும் 1000, 500 பணத்தாள்களை உடனடியாக மாற்றியாக வேண்டுமே. அவர்களின் கவலை அவர்களுக்கு. அடுத்த நாளே வங்கிகளில் தங்களிடம் உள்ள உயர்மதிப்பு பணத்தாள்களை டெபாசிட்...