கோகுல்ராஜ் கொலை வழக்கு: குறைந்தபட்ச பலப்பிரயோகம் என்றால் தெரியுமா? தெரியாதா?; சாட்சியிடம் ‘கிடுக்கிப்பிடி! #Gokulraj #Day19
கோகுல்ராஜ் கொலை வழக்கில்
எதிரி பிரபுவை காவல்துறையினர்
கைது செய்தபோது குறைந்தபட்ச
பலத்தை பிரயோகித்தார்களா இல்லையா?
உங்களுக்கு அந்தச் சொல்லுக்கு
அர்த்தம் தெரியுமா? தெரியாதா?
என்று அரசுத்தரப்பு சாட்சியிடம்,
யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்
கிடுக்கிப்பிடியாக கேள்விகள் கேட்டதால்,
சாட்சி குழப்பம் அடைந்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்ராவின் மகன் கோகுல்ராஜ் (23). கடந்த 23.6.2015ம் தேதி கழுத்து அறுத்து கொல்லப்பட்டார். அவருடைய சடலம், மறுநாள் மாலையில், நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் கைப்பற்றினர்.
கோகுல்ராஜ், தன்னுடன் படித்து வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்ததால், அவர் சாதி ஆணவ ரீதியில் கொல்லப்பட்டதாக அப்போது பல்வேறு தலித் அமைப்ப...