Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Police Commissioner

சேலத்தில் சாராய சாம்ராஜ்யம்தான் நடக்குது!; போலீஸ் கமிஷனர் டென்ஷன்

சேலத்தில் சாராய சாம்ராஜ்யம்தான் நடக்குது!; போலீஸ் கமிஷனர் டென்ஷன்

சேலம், திண்ணை, முக்கிய செய்திகள்
  ''சேலத்தில் ராம ராஜ்ஜியம் நடப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் சந்துக்கடைகள் மூலமாக மது விற்பனை நடப்பதாக மக்களிடம் இருந்து புகார்களை பார்க்கும்போது என் நம்பிக்கை பொய்த்துவிட்டது. குற்றங்களை தடுக்காத இன்ஸ்பெக்டர்கள் மீது கடுமையான ஆக்ஷன் எடுக்கப்படும்,'' என்று சேலம் போலீஸ் கமிஷனர் சங்கர் எச்சரித்துள்ளார்.   சேலம் மாநகரில் ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்குவதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து கடந்த பத்து நாள்களாக போலீசார் ரவுடிகளை கைது செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த பரபர ஆக்ஷனில் கடந்த 9ம் தேதி 37 ரவுடிகள் உள்பட 57 பேரும், 12ம் தேதி 39 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் ஜவஹர், அறிவு என்கிற அறிவழகன், மணியனூர் வைத்தி, கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சுலைமான், ஜான், டெனிப
அரசை விமர்சித்து கேலிச்சித்திரம்:  கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

அரசை விமர்சித்து கேலிச்சித்திரம்: கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

சென்னை, தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
நெல்லை தீக்குளிப்பு நிகழ்வை சித்தரிக்கும் விதமாக முதல்வர், நெல்லை ஆட்சியர், காவல்துறை ஆணையர் ஆகியோரை கேலிச்சித்திரமாக வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவை காவல்துறையினர் இன்று (நவம்பர் 5, 2017) கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் காசிதர்மத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. கந்துவட்டி கொடுமை குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல்துறையினரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் தனது மனைவி, இரு பெண் குழந்தைகளுடன் கடந்த அக்டோபர் 23ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கந்து வட்டி கொடுமைக்கு ஒரு குடும்பமே பரிதாபமாக பலியானது குறித்து சென்னை கோவூரைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் பாலா, தனது லைன்ஸ் மீடியா இணையதளத்தில் ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டு இருந்தார். அத்துடன் ஒரு கட்டுரையும் வெளியிட்டு இருந்தார்.
எஸ்மா: மீண்டும் திரும்புகிறது 2003?

எஸ்மா: மீண்டும் திரும்புகிறது 2003?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை, எஸ்மா / டெஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆறாவது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ எனப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் கடந்த 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான அரசு அலுவலகங்கள், அமைச்சுப்பணி ஊழியர்களின்றி முடங்கிக் கிடக்கின்றன. அனைத்து மாவட்டங்களிலும், திங்கள் கிழமைகளில் பல்வேறு பணிகளுக்காக அரசு அலுவலக