Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Massacre

கோகுல்ராஜ் ஆணவக்கொலை: யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள்! மதுரை நீதிமன்றம் தீர்ப்பு!!

கோகுல்ராஜ் ஆணவக்கொலை: யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள்! மதுரை நீதிமன்றம் தீர்ப்பு!!

சேலம், தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என்று மதுரை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை (மார்ச் 5) பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. யுவராஜின் தம்பி தங்கதுரை உள்ளிட்ட 5 பேரை விடுதலை செய்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). திருச்செங்கோட்டில் உள்ள கேஎஸ்ஆர் கல்லூரியில் பி.இ., படித்திருந்தார். கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதியன்று காலையில் வீட்டில் இருந்து கல்லூரி பேருந்தில் ஏறிச்சென்றவர் அன்றிரவு வீடு திரும்பவில்லை.   இரவில் பல இடங்களிலும், நண்பர்கள் வீடுகளிலும் தேடிப்பார்த்துள்ளனர். கோகுல்ராஜை பற்றிய தகவல் இல்லை. அவருடைய செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் தாயாருக்கு சந்தேகம் வலுத்தது.   மறுநாள் காலையில் கோகுல்ராஜின் நண்பர் கார்த்திக்கிடம் விசாரித்தபோது
சாதி ஆணவப் படுகொலையும் நீதிமன்ற தீர்ப்பும்!

சாதி ஆணவப் படுகொலையும் நீதிமன்ற தீர்ப்பும்!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, திண்டுக்கல், திருப்பூர், முக்கிய செய்திகள்
உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, வரலாற்றின் பக்கங்களில் நீடித்து நிலைத்து நிற்கும். ஆனால், இந்த தீர்ப்பு சமூக அடுக்குகளில் படிந்திருக்கும் சாதிய உணர்வுகளுக்கு சாவு மணி அடித்திருக்கிறதா என்றால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ''கேளடா மானிடாவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை'' என்று சாதிக்கு எதிராக புரட்சி கீதம் பாடிய பாரதியின் பிறந்த நாளுக்கு மறுநாள் (டிசம்பர் 12, 2017), இந்திய திருநாடே அதுவரை எதிர்பார்த்திராத ஒரு தீர்ப்பை, திருப்பூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் வழங்கினார். உடுமலை சங்கரின் காதல் மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் தண்டனையும் வழங்கினார் நீதிபதி. அதுவும், ஒரு பெண் நீதிபதியே இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க
திரிபுரா: பத்திரிகையாளர் படுகொலை; தொடரும் துயரம்

திரிபுரா: பத்திரிகையாளர் படுகொலை; தொடரும் துயரம்

இந்தியா, முக்கிய செய்திகள்
திரிபுரா மாநிலத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் ஒருவர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். திரிபுரா மாநிலம் மேற்கு மாவட்டம் கோவாய் பகுதியில் இன்று (செப். 20) இரு பிரிவினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. பின்னர், கலவரமாக வெடித்தது. இது குறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஒரு பத்திரிகையாளரை, மர்ம கும்பல் படுகொலை செய்துள்ளது. எனினும், கொலையுண்ட பத்திரிகையாளர் யார் என்ற முழு தகவலும் வெளியாகவில்லை. கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. தொடரும் துயரம்: கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த லங்கேஷ் பத்ரிகே என்ற பத்திரிகையின் முதன்மை செய்தி ஆசிரியரான கவுரி லங்கேஷ், கடந்த 5ம் தேதி அவருடைய வீட்டு வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில நாள்களுக்குள், பீஹார் மாந