Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Law

சாமானியர்கள் மீது மற்றுமொரு வெடிகுண்டு வீச்சு!; என்னங்க சார் உங்க சட்டம்…?

சாமானியர்கள் மீது மற்றுமொரு வெடிகுண்டு வீச்சு!; என்னங்க சார் உங்க சட்டம்…?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பாஜக தலைமையிலான மத்திய அரசை எதிர்ப்பவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அக்கட்சிக்கு முட்டுக்கொடுப்போர் கருப்பு பணம், ஊழலை ஒழிக்க வந்த ஒரே கட்சி என்ற ஒரே நிலைப்பாட்டையே முன்வைப்பர். நாம் சொல்ல விழைவது, பாஜக ஒருபோதும் சாமான்ய மக்களுக்கான அரசு அல்ல; அது, 100 சதவீதம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கானது என்பதைத்தான். அதற்கு இன்னுமொரு உதாரணம்தான், 'நிதி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்பீடு மசோதா-2017' (Financial Resolution and Deposit Insurance Bill - 2017). ஆங்கிலத்தில் சுருக்கமாக, எப்ஆர்டிஐ (FRDI). அப்படி என்ன சொல்கிறது எப்ஆர்டிஐ மசோதா? சொல்கிறோம். கடந்த ஆகஸ்ட் மாதம்தான் இந்த மசோதா மக்களவையில் சமர்ப்பி க்கப்பட்டது. விரைவில் இந்த மசோதா சட்ட வடிவம் பெறக்கூடும். வாராக்கடன் காரணமாக வங்கிகள் திவால் ஆனால், நஷ்டத்தை சமாளிக்க வங்கியில் உள்ள மக்களின் சேமிப்புத்தொகையை கபளீகரம் ச
சட்டம் அறிவோம்: உயில்…  “மூன்றே சொல்லில் ஓர் ஆவணம்”  – சுரேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

சட்டம் அறிவோம்: உயில்… “மூன்றே சொல்லில் ஓர் ஆவணம்” – சுரேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

முக்கிய செய்திகள்
ஒவ்வோர் அரசாங்கமும் நிர்வாகத்திற்காகவும், மக்கள் நலனுக்காகவும் சட்டங்களை இயற்றுகின்றன. ஆனாலும் அதைப் பற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் தொடர்ந்து அவற்றை நாம் கடந்து சென்று கொண்டே இருக்கிறோம். அப்படி செய்வதால் ஏற்படும் விதி மீறல்களே குற்றங்கள். "கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான்?" என்று அதிதீவிரமாக அறிந்து கொள்ள ஆசைப்படும் நாம், சட்டங்களின் அடிப்படையையாவது அறிந்து வைத்துக்கொள்ளல் அவசியமன்றோ! மாவீரன் என்றவுடன் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது, நெப்போலியன் தான். உலக நாடுகளை எல்லாம் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஏறக்குறைய பாதி ஐரோப்பாவையே வெற்றி கொண்டவன். ஆனாலும் 1815ம் ஆண்டு நடந்த வாட்டர்லூ போரில் ஆங்கிலேயர்களிடம் தோல்வியுற்று சிறைக் கைதியாக்கப்பட்டு, தன் வாழ்நாளின் இறுதி நாட்களை செயிண்ட் ஹெலினா தீவில் கழித்தார் என்பது வரலாறு. ஆனால் நெப்போலியன் எழுதிய உயில் பற்றி தெரியுமா..? அத
சட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா? – சுரேஷ், வழக்கறிஞர்

சட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா? – சுரேஷ், வழக்கறிஞர்

கல்வி, சென்னை, தகவல், மகளிர்
மனித சமுதாயத்தின் சட்ட திட்டங்களைக் கொண்டு அந்த மனித சமுதாயம் எப்படிப்பட்ட இலக்கை நோக்கிச் செல்கின்றது என்பதை கணித்து விடலாம். நாம் மனித வரலாற்றைப் புரட்டினால் சமுதாயம் மாற்றம் அடைய அடைய அதன் சட்டத்திட்டங்களும் மாற்றம் அடைந்து கொண்டே வந்திருக்கின்றது என்பதை அறியலாம். சமூகம் மாற ஆரம்பித்ததும் குற்றங்களும் நடைபெற ஆரம்பித்தன. சமூகத்தை ஒருங்கிணைக்கவும் பாதுகாக்கவும் சட்டங்கள் வரையறுக்கப்பட்டன. ஆனால் சட்ட விழிப்புணர்வு மட்டும் இன்றும் தோன்றவே இல்லை. குறிப்பாக பெண்கள், அடிப்படை சட்டங்களை அறிந்து கொள்வதின் மூலம் தன்னம்பிக்கையும், எதையும் எதிர் கொள்ளும் துணிவும் பக்குவமும் அதிகரிக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. சொத்தில் பங்கு உண்டா..? ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று சில பேருக்கு பொதுவாய் தெரிகிறது. "மகிழ்ச்சி”. ஆனால் பெண்களுக்கு என்னென்ன உரிமை இருக்கி