Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: killed

பாஜக 100 சதவீதம் மதவாத கட்சியேதான்!: திருமாவளவன்

பாஜக 100 சதவீதம் மதவாத கட்சியேதான்!: திருமாவளவன்

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திராவிட கட்சிகளிடம் சாதிய உணர்வு இருந்தாலும், ஜனநாயகத் தன்மை கொண்டது; ஆனால் பாஜக அப்படி அல்ல. அது முழுக்க முழுக்க மதவாதம் பேசக்கூடிய கட்சி என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இன்று (நவம்பர் 5, 2017) ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். திராவிடக் கட்சிகள், பாஜக, தலித் அரசியல், ரஜினி, கமல் அரசியல், மதவாதம், சாதியம் என பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அவருடைய பேட்டியில் இருந்து... பாஜக தலித் கட்சிகளை வளைக்கும் திட்டத்துடன்தான் செயல்பட்டு வருகிறது. ராம்விலாஸ் பாஸ்வான் முதல் மாயாவதி வரை அதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும். தமிழ்நாட்டிலும் அதற்கு முயற்சித்தார்கள். அதை குறிப்பிடும் வகையில்தான் என்னை வளைக்க முடியாமல் தோற்றுப்போன வருத்தத்தில் என் மீது பாஜக தலைவர் தமிழிசை விமர்சனங்களை முன்வ
”பணமதிப்பு நீக்கத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை” – ரங்கராஜன்

”பணமதிப்பு நீக்கத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை” – ரங்கராஜன்

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள், வர்த்தகம்
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கருப்பு பண நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் கூறினார். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு முதல் இந்தியாவில் அதுவரை புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அதிரடியாக குண்டை தூக்கிப் போட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இது அபாயகரமான நடவடிக்கை என்று அப்போதே எதிர்க்கட்சிகள், பொருளாதார நிபுணர்கள் பலரும் எச்சரித்தனர். அகலமான மார்பை விரித்துப் பேசும் நரேந்திர மோடி இதையெல்லாம் கேட்பாரா?. நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கவும், தீவிரவாத கும்பலுக்கு கள்ளத்தனமாக பணம் போய்ச்சேர்வதைத் தடுக்கவும் உயர்மதிப்பு கொண்ட ரூபாய் தாள்களை செல்லாததாக்குகிறோம் என்றார். சில நாள்கள் கழித்து, கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவும், டிஜிட்டல் வர்த்தகத்தை ஊக்குவிக்கவும்தான் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்ட
கல்விப்புரட்சி செய்யும் ஓசூர் இளைஞர்கள்…!

கல்விப்புரட்சி செய்யும் ஓசூர் இளைஞர்கள்…!

கல்வி, கிருஷ்ணகிரி, சேவை, முக்கிய செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் குக்கிராமங்களில் ஒன்று, பூதொட்டிக்கொட்டாய். இந்த ஊரைச்சேர்ந்த சங்கீதா, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் 470 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்றாள். அடுத்தடுத்து மேல்நிலை வகுப்பு, கல்லூரிக்குச் செல்ல வேண்டியவள், நேராகச்சென்ற இடம் எது தெரியுமா? வயல்வெளி. ஆமாம். தினசரி 60 ரூபாய் கூலிக்கு களைப்பறிக்கச் சென்று வந்தாள். தோழிகள் புத்தகப்பையைச் சுமந்து செல்ல, இவளோ மதிய உணவுக்கான தூக்குச்சட்டியையும், களைக்கொத்தையும் சுமந்து சென்றாள்.   கடும் பொருளாதார நெருக்கடி சங்கீதாவை கூலி வேலைக்குச்செல்லவே நிர்ப்பந்தித்தது. இனி புத்தக வாசனையே கிடைக்காது என்றிருந்த நிலையில், 'ஓசூர் வித்யூ கல்வி, சமூக அறக்கட்டளை'யின் கண்களில் படுகிறாள். அந்த நாள், தன் கனவுகளை நனவாக்கும் என்று அப்போது அவள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அதன்பிறகு அவள் வாழ்வு