கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: கர்ஜித்த நீதிபதி…! பம்மிய வழக்கறிஞர்கள்!! #Gokulraj #Day11
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணையின்போது, எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் அடிக்கடி குறுக்கீடு செய்ததால் நீதிபதி அவர்களை பலமுறை கடுமையாக எச்சரித்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த எதிர்தரப்பினர், குறுக்கு விசாரணை நடத்தாமல் வாய்தா வாங்கினர்.
தண்டவாளத்தில் சடலம்
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் சித்ரா. ஏழைக்கூலித்தொழிலாளி. இவருடைய இளைய மகன் கோகுல்ராஜ் (23). திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் பி.இ. படிப்பை நிறைவு செய்திருந்தார்.
கடந்த 23.6.2015ம் தேதியன்று தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த தோழி சுவாதியை பார்க்கச் சென்றார். அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை.
மறுநாள் (24.6.2015) மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே காவேரி ஆர்எஸ் - ஆனங்கூர் இடையே ரயில் தண...