ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமா?; விசாரணை ஆணையத்திடம் சொல்லலாம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தங்களிடம் உள்ள தகவல்களை எழுத்து மூலமாக வரும் 30ம் தேதி முதல் நவம்பர் 22ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என விசாரணை ஆணையத் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப். 22ம் தேதி, உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாள்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த அவர், டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மற்றும் வேறு சிலரும் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
கடந்த செப்டம்பர் 25ம் தேதி இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. மூன்று மாத காலத்திற்குள் விசாரணை அ...