Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Income Tax

பணமதிப்பிழப்பு காலத்தில் சொத்துகளை வாங்கி குவித்த சசிகலா! 

பணமதிப்பிழப்பு காலத்தில் சொத்துகளை வாங்கி குவித்த சசிகலா! 

அரசியல், முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட காலத்தில், ஜெயலலிதான் தோழி சசிகலா, 1674.5 கோடிக்கு சொத்துகளை வாங்கி குவித்துள்ளதை வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு, இந்தியாவில் அதுவரை புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று அறிவித்தார்.   கருப்புப்பணத்தை ஒழிப்பது, தீவிரவாதிகளுக்கு பணம் கைமாறுவதை தடுப்பது, ஊழலை ஒழிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அப்போது அவர் சொன்னார்.   பிறகு, 2017 ஜனவரி மாதம் முதல் புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் தாள்களை அச்சிட்டு புழக்கத்திற்கு கொண்டு வந்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மாபெரும் முட்டாள்தனம் என்று பாஜகவினரைத் தவிர உலகின் எல்லா பொருளாதார வல்லுநர்களும...
மன்னார்குடி கும்பலிடம் வருமான வரித்துறை சோதனை ஏன்?; பூனைக்குட்டி வெளியே வந்தது!; நமது எம்ஜிஆர் நாளேடு அம்பலம்!!

மன்னார்குடி கும்பலிடம் வருமான வரித்துறை சோதனை ஏன்?; பூனைக்குட்டி வெளியே வந்தது!; நமது எம்ஜிஆர் நாளேடு அம்பலம்!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சசிகலா, தினகரன் மற்றும் அவருடைய நெருங்கிய வட்டாரங்களைக் குறிவைத்து வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் (நவம்பர் 11, 2017) சோதனை நடத்தி வருகிறது. இதற்கு முன், எத்தனையோ முறை இதுபோன்ற சோதனைகளை மன்னார்குடி கும்பல் சந்தித்து இருந்தாலும், இப்போது போன்ற மெகா சோதனையை எதிர்கொண்டதில்லை. முதல் நாளில் பத்திரிகையாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இரண்டாவது நாளான நேற்று ஊடகங்களைச் சந்திப்பதை தவிர்த்தார். இதற்கிடையே, ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கிடைத்ததாகவும், பாஸ்கரன் வீட்டில் இருந்து 15 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தத் தகவல்கள் எதுவுமே வருமானவரித்துறையின் அதிகாரப்பூர்வ தகவல்களாகச் சொல்லப்படவில்லை. ஊடகங்கள் தங்களுக்குக் கிடைத்த தகவல்கள் அடிப்படையிலும், யூகங்கள் அடிப்படையிலும் இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு ...
“ஆபரேஷன் மன்னார்குடி” – ஐடி ரெய்டின் திடுக்கிடும் பின்னணி!

“ஆபரேஷன் மன்னார்குடி” – ஐடி ரெய்டின் திடுக்கிடும் பின்னணி!

அரசியல், இந்தியா, கோயம்பத்தூர், சென்னை, தஞ்சாவூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியா இதுவரை கண்டிராத மிகப்பெரிய வருமானவரி சோதனையை இன்றைய (நவம்பர் 9, 2017) தினம் சந்தித்திருக்கிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, டிடிவி தினகரன் உறவுகளை குறி வைத்து நடத்தப்பட்டுள்ள இந்த சோதனைதான் அனைத்து ஊடகங்களிலும் 'பிக் பிரேக்கிங்' சேதி. சசிகலாவின் நேரடி உறவுகளான நடராஜன், திவாகரன், மகாதேவன், சுந்தரவதனம், டிடிவி தினகரன், விவேக் ஜெயராமன், ஜெயானந்த், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மருத்துவர் வெங்கடேஷ், மருத்துவர் சிவக்குமார் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் பிரதான சோதனைக் களங்களாகின. இவற்றுடன் ஜெயா டிவி, டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழ், ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் மதுபான ஆலை, கிருஷ்ணபிரியாவின் என்ஜிஓ அலுவலகங்களும் தப்பவில்லை. மன்னார்குடி கும்பலின் ஆதரவாளர்களான பெங்களூர் புகழேந்தி, டிஎன்பிஎஸ்சி உறுப்பினரும் வழக்கறிருமான நாமக்கல் செந்தில், கோவை மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி, ஜெயலலிதாவின் உதவி...
தமிழகம்: அடுத்தது ஆட்சி கலைப்புதான்!; காவிகள் திட்டம் தயார்

தமிழகம்: அடுத்தது ஆட்சி கலைப்புதான்!; காவிகள் திட்டம் தயார்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், உள்கட்சி பூசல் உள்ளிட்ட பிரச்னைகளால் தமிழகத்தில் ஆளும் கட்சி ஸ்திரமற்ற நிலையில் இருப்பதை தொடர்ந்து, இந்த ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் வேலைகளில் காவி கோஷ்டி மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவை கைப்பற்றுவதில் 'பணிவு புகழ்' ஓ.பன்னீர்செல்வத்துக்கும், மன்னார்குடி கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட போட்டியால் அக்கட்சிக்குள் கடும் பூசல்கள் உருவாயின. ஒருகட்டத்தில், கட்சிக்கு சம்பந்தமே இல்லாத ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூட அதிமுகவுக்கு சொந்தம் கொண்டாடும் காமெடிகளும் அரங்கேறின. இப்படி நாளொரு பரபரப்பும், மணிக்கொரு 'பிரேக்கிங் நியூஸ்'களுமாக தமிழக அரசியல் களம் இருந்த நிலையில், ஊழல் வழக்கில் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். கிடைத்த 'கேப்'பில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரா...