Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ignorance

“சிதம்பரம்னா சும்மா கூப்பிட்டு கலாய்க்கிற  ஹெச்.ராஜானு நினைச்சியா…சிதம்பரம்டா…!” – ட்விட்டர் வறுவல்

“சிதம்பரம்னா சும்மா கூப்பிட்டு கலாய்க்கிற ஹெச்.ராஜானு நினைச்சியா…சிதம்பரம்டா…!” – ட்விட்டர் வறுவல்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள், அமைப்புகள் மட்டுமே ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி மக்களிடமும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. அதேநேரம் கருப்புப் பணம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. பாஜக அரசின் திட்டமிடப்படாத பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து, கடந்த 8ம் தேதி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள கருப்பு தினம் கடைப்பிடித்தது. அதற்கு போட்டியாக களமிறங்கிய பாஜக, அன்றைய தினத்தை கருப்புப்பண ஒழிப்பு தினமாகக் கொண்டாடியது. முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை சட்டப்பூர்வ கொள்ளை என்றும் திட்டமிட்ட மோசடி என்றும் கடுமையாக வர்ணித்தார். முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும், பாஜக அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், கடந்த 11 தே
வதந்தி பரப்பும் ஊடகங்கள்; நெட்டிஸன்கள் பொளேர்!

வதந்தி பரப்பும் ஊடகங்கள்; நெட்டிஸன்கள் பொளேர்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வெறுமனே பரபரப்புக்காக செய்திகளை வெளியிடும் ஊடகங்களின் பின்னணியில் அபரிமிதமான லாப வேட்கையும், மனித உணர்வுகளை அலட்சியப்படுத்துவதில் அசட்டுத்தனமான துணிச்சலுமே மலிந்திருக்கிறது என்பதைத்தான் ஊடகங்களின் அண்மைக்கால போக்குகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஊடகம் (மீடியா) என்ற சொல்லே பொதுப்பெயர்தான். இதனுள் அச்சு, காட்சி ஊடகங்கள்¢ இரண்டும் அடங்கும். பொதுவெளியை விடுவோம்; ஊடகத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னும் 'மீடியா' என்றால் காட்சி ஊடகம் என்றே புரிந்து வைத்திருக்கிறார்கள். கோச்சிங் அளிப்பவரை 'கோச்சர்' என்பதுபோல. இப்படிச் சொன்ன பிறகு, இந்தக் கட்டுரை எழுதியதற்காக என் சமகால நண்பர்கள் என்னையும் பகடி செய்யக்கூடும். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்ற புரிதலோடுதான் எழுதுகிறேன். அச்சு ஊடகங்கள் மட்டுமே கோலோச்சிய காலங்களில் அவற்றினூடாக வதந்திகள் பரவியதில்லையா எனக் கேட்கலாம்.
கல்விப்புரட்சி செய்யும் ஓசூர் இளைஞர்கள்…!

கல்விப்புரட்சி செய்யும் ஓசூர் இளைஞர்கள்…!

கல்வி, கிருஷ்ணகிரி, சேவை, முக்கிய செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் குக்கிராமங்களில் ஒன்று, பூதொட்டிக்கொட்டாய். இந்த ஊரைச்சேர்ந்த சங்கீதா, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் 470 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்றாள். அடுத்தடுத்து மேல்நிலை வகுப்பு, கல்லூரிக்குச் செல்ல வேண்டியவள், நேராகச்சென்ற இடம் எது தெரியுமா? வயல்வெளி. ஆமாம். தினசரி 60 ரூபாய் கூலிக்கு களைப்பறிக்கச் சென்று வந்தாள். தோழிகள் புத்தகப்பையைச் சுமந்து செல்ல, இவளோ மதிய உணவுக்கான தூக்குச்சட்டியையும், களைக்கொத்தையும் சுமந்து சென்றாள்.   கடும் பொருளாதார நெருக்கடி சங்கீதாவை கூலி வேலைக்குச்செல்லவே நிர்ப்பந்தித்தது. இனி புத்தக வாசனையே கிடைக்காது என்றிருந்த நிலையில், 'ஓசூர் வித்யூ கல்வி, சமூக அறக்கட்டளை'யின் கண்களில் படுகிறாள். அந்த நாள், தன் கனவுகளை நனவாக்கும் என்று அப்போது அவள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அதன்பிறகு அவள் வாழ்வு