Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Hosur

கொரோனா சுனாமியால் நிலைகுலைந்த குடும்பம்; தாய், தந்தையை இழந்து வாடும் 5 பிள்ளைகள்!

கொரோனா சுனாமியால் நிலைகுலைந்த குடும்பம்; தாய், தந்தையை இழந்து வாடும் 5 பிள்ளைகள்!

கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஓசூரில், கொரோனா சுனாமியால் ஒரே ஆதரவாக இருந்த தாயையும் பறிகொடுத்துவிட்டு 4 மகள்கள் உள்பட 5 பிள்ளைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.   கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையால் ஏற்பட்ட கடுமையான ஊரடங்கால் மற்றெந்த பிரிவினரையும் விட தினக்கூலித் தொழிலாளர் வர்க்கத்தினரும், சொற்ப ஊதியத்திற்கு பணியாற்றி வரும் தனியார் ஊழியர்களும் வேலையிழப்பு, பொருளாதார இழப்பால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். அதையெல்லாம் கவனத்தில் கொண்ட தமிழக அரசு, இந்தமுறை கொரோனா இரண்டாவது அலையின்போது, சற்று தளர்வுகளுடனேயே ஊரடங்கு விதிகளை அமல்படுத்தியது. ஆனாலும், கடந்த ஆண்டு ஏற்பட்ட முடக்கத்தில் இருந்தே மீளாத சாமானியர்களில் பலரை இரண்டாம் அலை கருணையின்றி காவு வாங்கிவிட்டது.   இந்த அலையில் சிக்கி சின்னாபின்னமான ஆயிரக்கணக்கான குடும்பங்களில் ஒன்றுதான், நிவிதாவின் குடும்பமும். கிருஷ்ணகி
கருவை சிதைத்து… முடியை மழித்து… காதல் தம்பதி கொடூர ஆணவக்கொலை! அடங்காத சாதித்திமிர்!!

கருவை சிதைத்து… முடியை மழித்து… காதல் தம்பதி கொடூர ஆணவக்கொலை! அடங்காத சாதித்திமிர்!!

கிருஷ்ணகிரி, குற்றம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞனை கைப்பிடித்த ஒரே குற்றத்திற்காக பெற்ற மகளென்றும் பாராமல் இளம்பெண்ணின் தலைமுடியை மழித்தும், வயிற்றில் வளர்ந்த ஒன்றரை மாத கருவை உருக்குலைத்தும், அரிவாளால் வெட்டியும் ஓசூர் அருகே கொடூரமாக அரங்கேறி இருக்கிறது சாதி ஆணவக்கொலை.   காவிரி ஆற்றில் சடலம்   கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம், சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சி அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒரு வாலிபரின் சடலமும், இளம்பெண் சடலமும் வெள்ளியன்று (நவம்பர் 16, 2018) மிதந்து வந்தது. சடலங்களின் முகங்கள் சிதைக்கப்பட்டு இருந்தன. உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்களும் கிடந்தன. சடலங்களின் கை, கால்கள் வயரால் கட்டப்பட்டிருந்தன.   இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் பெலகவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் மற்றும் போலீசார் சடலங்களைக் கைப்பற்றி விசாரித்தனர். சடலமாகக் கிடந்த வாலிபர்,
3000 பாம்புகளை காப்பாற்றிய ஓசூர் ‘ஸ்னேக்’ டேவிட்!;  ”விரலை இழந்த பின்னும்  தணியாத ஆர்வம்”

3000 பாம்புகளை காப்பாற்றிய ஓசூர் ‘ஸ்னேக்’ டேவிட்!; ”விரலை இழந்த பின்னும் தணியாத ஆர்வம்”

கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
சி-ற-ப்-பு-க்-க-ட்-டு-ரை ''பாம்புகள் பற்றிய தவறான அபிப்ராயங்களால்தான் அவற்றை மனிதர்கள் கொல்லத் துடிக்கின்றனர். அதைப் புரிந்து கொண்டால் வீட்டுக்கு வீடு நாய் வளர்ப்பதுபோல் பாம்புகளை வளர்க்க ஆரம்பித்து விடுவோம்,'' என்கிறார் டேவிட் மாறன். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் டேவிட் மாறன். அசோக் லேலன்ட் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மனைவி அழகேஸ்வரி. ஹைம் ஸ்கை, வெண்ணிலா என இரண்டு பெண் குழந்தைகள். டேவிட் மாறன் என்று சொன்னால்கூட பலர் ஒரு கணம் யோசிக்கக் கூடும். ஆனால், 'ஸ்னேக்' டேவிட் என்ற அடைமொழியுடன் கேட்டால், சின்னக் குழந்தைகூட அவருடைய வீட்டுக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடும். இந்தக் காலத்தில் சக மனிதர் ஒருவர் சாலையில் அடிபட்டுக் கிடந்தால்கூட 'உச்' கொட்டிவிட்டு கடந்து சென்று விடுவோர்தான் அதிகம். ஆனால், பாம்புகளுக்கு ஏதேனும் சிக்கல் என்றால் முதல் ஆளாக பறந்து சென்று மீட்பதில் தனிக்க
பள்ளி சிறுமிகளின் வாழ்வை மாற்றும் காயலான் கடை சைக்கிள்!; ஓசூர் இளைஞர்கள் புதிய முயற்சி!!

பள்ளி சிறுமிகளின் வாழ்வை மாற்றும் காயலான் கடை சைக்கிள்!; ஓசூர் இளைஞர்கள் புதிய முயற்சி!!

கல்வி, கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சேவை, தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
எதற்கும் உதவாது என வீட்டில் அடைத்து வைத்திருக்கும் பழைய சைக்கிள்களை, பழுது பார்த்து மலைக்கிராம பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர் ஓசூர் இளைஞர்கள். அவர்களின் புதிய முயற்சிக்கு பரவலாக வரவேற்பு கிடைக்கவே, அதை இதர ஏழை மாணவர்களுக்கும் விரிவு படுத்தியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது நாட்றாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி. 192 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி அமைவிடம் என்னவோ, சமதளப் பரப்பில்தான் இருக்கிறது. எனினும், பிலிகுண்டு, சிவபுரம், பூமரத்துக்குழி, அட்டப்பள்ளம், பஞ்சல்துணை ஆகிய அடர்ந்த மலைக்கிராமங்களில் இருந்தும் கணிசமான மாணவ, மாணவிகள் வந்து படிக்கின்றனர். மலைப்பகுதி என்பதால் நகர்ப்புறம்போல் அடிக்கடி பேருந்துகளும் செல்லாது. அதனால் மாலை 4.15 மணிக்கு பள்ளி முடிந்தால் பல மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு நடந்தே செல்கின்றனர். மாணவிகளின் நிலை இன்னும் மோசம
கல்விப்புரட்சி செய்யும் ஓசூர் இளைஞர்கள்…!

கல்விப்புரட்சி செய்யும் ஓசூர் இளைஞர்கள்…!

கல்வி, கிருஷ்ணகிரி, சேவை, முக்கிய செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் குக்கிராமங்களில் ஒன்று, பூதொட்டிக்கொட்டாய். இந்த ஊரைச்சேர்ந்த சங்கீதா, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் 470 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்றாள். அடுத்தடுத்து மேல்நிலை வகுப்பு, கல்லூரிக்குச் செல்ல வேண்டியவள், நேராகச்சென்ற இடம் எது தெரியுமா? வயல்வெளி. ஆமாம். தினசரி 60 ரூபாய் கூலிக்கு களைப்பறிக்கச் சென்று வந்தாள். தோழிகள் புத்தகப்பையைச் சுமந்து செல்ல, இவளோ மதிய உணவுக்கான தூக்குச்சட்டியையும், களைக்கொத்தையும் சுமந்து சென்றாள்.   கடும் பொருளாதார நெருக்கடி சங்கீதாவை கூலி வேலைக்குச்செல்லவே நிர்ப்பந்தித்தது. இனி புத்தக வாசனையே கிடைக்காது என்றிருந்த நிலையில், 'ஓசூர் வித்யூ கல்வி, சமூக அறக்கட்டளை'யின் கண்களில் படுகிறாள். அந்த நாள், தன் கனவுகளை நனவாக்கும் என்று அப்போது அவள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அதன்பிறகு அவள் வாழ்வு