கொரோனா சுனாமியால் நிலைகுலைந்த குடும்பம்; தாய், தந்தையை இழந்து வாடும் 5 பிள்ளைகள்!
ஓசூரில், கொரோனா சுனாமியால் ஒரே ஆதரவாக இருந்த தாயையும் பறிகொடுத்துவிட்டு 4 மகள்கள் உள்பட 5 பிள்ளைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு
கொரோனா முதல் அலையால்
ஏற்பட்ட கடுமையான
ஊரடங்கால் மற்றெந்த
பிரிவினரையும் விட
தினக்கூலித் தொழிலாளர்
வர்க்கத்தினரும், சொற்ப
ஊதியத்திற்கு பணியாற்றி வரும்
தனியார் ஊழியர்களும்
வேலையிழப்பு, பொருளாதார
இழப்பால் பெரும் பாதிப்புக்கு
உள்ளாகினர்.
அதையெல்லாம் கவனத்தில்
கொண்ட தமிழக அரசு,
இந்தமுறை கொரோனா
இரண்டாவது அலையின்போது,
சற்று தளர்வுகளுடனேயே
ஊரடங்கு விதிகளை அமல்படுத்தியது.
ஆனாலும், கடந்த ஆண்டு
ஏற்பட்ட முடக்கத்தில் இருந்தே
மீளாத சாமானியர்களில் பலரை
இரண்டாம் அலை கருணையின்றி
காவு வாங்கிவிட்டது.
இந்த அலையில் சிக்கி
சின்னாபின்னமான
ஆயிரக்கணக்கான குடும்பங்களில்
ஒன்றுதான், நிவிதாவின் குடும்பமும்.
கிருஷ்ணகி...