அரசு ஊழியர்கள் காட்டில் பணமழை!; இரண்டரை மடங்கு ஊதிய உயர்வு
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, இரண்டரை மடங்கு ஊதிய உயர்வு வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராமப் பஞ்சாயத்துச் செயலர் ஆகியோரின் ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் நேற்று (அக். 11, 2017) வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு ஊழியர்களின் ஊதியம் 2.57 மடங்கு உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச ஊதியம் 6,100 ரூபாயிலிருந்து 15,700 ரூபாயாகவும், அதிகபட்ச ஊதியம் 77 ஆயிரம் ரூபாயிலிருந்து 2.25 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவையும் 2.57 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. ஓய்வுபெறும்போது வழங்கப்படும் அதிகபட்ச பணத்தின் மதிப்பு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூ...