Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: farmers protest

விவசாயிகள் என்ன பயங்கரவாதிகளா?; இபிஎஸ் அரசின் தலைகீழ் விகிதங்கள்!!

விவசாயிகள் என்ன பயங்கரவாதிகளா?; இபிஎஸ் அரசின் தலைகீழ் விகிதங்கள்!!

காஞ்சிபுரம், சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
  எட்டுவழிச்சாலைக்கு எதிராக கிளர்ந்தெழும் விவசாயிகளிடம் திட்டத்தின் நோக்கம் குறித்து வெளிப்படையாக பேச மறுக்கும் அரசு, வெடிகுண்டு தடுப்புப்பிரிவு, கியூ பிரிவுகள் மூலம் உளவியல் ரீதியில் ஒடுக்குவதன் மூலம், அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயல்கிறதோ என்ற அய்யம் எழுந்துள்ளது. சேலம் முதல் சென்னை வரையில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் எட்டுவழிச்சாலை அமைப்பதற்கான வேலைகளில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியுள்ளன. இத்திட்டத்திற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் கையகப்படுத்தப்பட உள்ள தனியார் நிலங்களில் பெரும் பகுதி இருபோகம் விளைச்சலைத் தரக்கூடிய விளைநிலங்கள் ஆகும்.   இதனால் ஆரம்பத்தில் இருந்தே எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு மேற்சொன்ன ஐந்து மாவட்டங்களிலும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ...
எட்டு வழிச்சாலை: ஒரு மாதத்தில் நல்ல தீர்ப்பு வரும்!; அருள்வாக்கு சொன்ன விவசாயி

எட்டு வழிச்சாலை: ஒரு மாதத்தில் நல்ல தீர்ப்பு வரும்!; அருள்வாக்கு சொன்ன விவசாயி

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், இன்னும் ஒரு மாதத்திற்குள் நல்ல தீர்ப்பு வரும் என்று விவசாயி அருள்வாக்கு கூறினார்.   சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை 36.3 கிலோமீட்டர் தொலைவுக்கு எட்டு வழிச்சாலை வழித்தடம் அமைகிறது. இதற்காக 248 ஹெக்டேர் நிலம் கையப்படுத்தப்பட உள்ளது. இதில் 90 சதவீதம் சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் ஆகும். இதனால் விவசாயிகள் நிலத்தை விட்டுத்தர மறுப்பதுடன், சாமானிய மக்களுக்கு பயன் அளிக்காத எட்டு வழிச்சாலைத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று போராடி வருகின்றனர்.   மின்னாம்பள்ளி, குள்ளம்பட்டி விவசாயிகள் குலதெய்வமான பெரியாண்...
எட்டு வழிச்சாலையை எதிர்த்து அம்மன் கோயிலில் நோன்பு இருக்கவும் போலீசார் தடை! 15 விவசாயிகள் திடீர் கைது!!

எட்டு வழிச்சாலையை எதிர்த்து அம்மன் கோயிலில் நோன்பு இருக்கவும் போலீசார் தடை! 15 விவசாயிகள் திடீர் கைது!!

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, எட்டு வழிச்சாலையை எதிர்த்து அம்மன் கோயிலில் உண்ணாநோன்பு இருக்க முயன்ற 15 விவசாயிகளை போலீசார் இன்று (ஆகஸ்ட் 5, 2018) கைது செய்தனர்.   சேலம் - சென்னை இடையே அமையவுள்ள எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைக்கு எதிராக சேலம் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, ராமலிங்கபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கறவை மாடுகளுக்கு கருப்புக்கொடி கட்டியும், அம்மனுக்கு பொங்கலிட்டு கோரிக்கை மனு கொடுத்தும் பண்பாட்டுத் தளத்தில் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குள்ளம்பட்டியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயில் வளாகத்தில் இன்று காலை 10.15 மணியளவில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றுகூடினர். எட்டு வழிச்சாலையை வரவிடாமல் தடுக்க வேண்டும் என்றும், விவசாயிகளையும், விவசாயத்தையும் காக்க வேண்டும் என்று...
”ஈழத்தைப் பற்றி பேச இங்கே நான் ஒருவன்தான் இருக்கிறேன்!” – வெடிக்கும் சீமான்!! #Seeman

”ஈழத்தைப் பற்றி பேச இங்கே நான் ஒருவன்தான் இருக்கிறேன்!” – வெடிக்கும் சீமான்!! #Seeman

அரசியல், இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  - சிறப்பு நேர்காணல் -   சேலம் அருகே எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் மக்களிடம் நேரில் கருத்து கேட்கச் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, ஜூலை 18ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். ஜாமின் கோரி வழக்கு தொடர்ந்ததில், 'இந்த கைதே சட்ட விரோதமானது,' என்று கண்டித்த சேலம் மாவட்ட நீதிமன்றம், மறுநாள் மாலையில் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜூலை 20ம் தேதி காலையில், சேலம் மத்திய சிறையில் இருந்து சீமான் வெளியே வந்தார்.   அன்று இரவு, சேலத்தில் சீமான் தங்கியிருந்த ஹோட்டலில் அவரை சந்தித்தோம். நாம் சென்ற நோக்கம் குறித்து, ஹோட்டல் லாபியில் உள்ள இன்டர்காம் மூலம் தகவல் தெரிவித்தோம்.   அவருடைய வழக்கறிஞரின் ஆலோசனையின்பேரில் நம்மை சந்தித்தார் சீமான். நேர்காணலின் துவக்கம் முதல் இறுதிவரை கொஞ்சமும் அவரிடம் எனர்ஜி குறையவில்லை. வார்த்தைகள் ஒவ்வ...
தொடரும் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு: சேலம் விவசாயிகள் அம்மனிடம் கோரிக்கை மனு கொடுத்து நூதன போராட்டம்! ”சேலத்தில் கலவரம் வெடிக்கும்!!”

தொடரும் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு: சேலம் விவசாயிகள் அம்மனிடம் கோரிக்கை மனு கொடுத்து நூதன போராட்டம்! ”சேலத்தில் கலவரம் வெடிக்கும்!!”

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
''எடப்பாடியும் கண்டுக்கல....மோடியும் கண்டுக்கல.... அதனால் எங்கள் கோரிக்கையை பெரியாண்டிச்சி அம்மனிடம் பொங்கலிட்டு மனு கொடுக்கிறோம்," என்று நூதன போராட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள் குள்ளம்பட்டி விவசாயிகள். எதிர்பாராத விதமாக அந்த இடத்தில் திடீரென்று பெண்கள் அருள் வந்து ஆட, கோயில் திடலே பெரும் களேபரத்தில் ஆழ்ந்தது.   சென்னை - சேலம் பசுமைவழி விரைவுச்சாலைக்காக சேலம் மாவட்டத்தில் 18 கிராமங்களில் 36.3 கி.மீ. தொலைவுக்கு விளை நிலங்கள், குடியிருப்பு நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கான நில அளவீட்டுப்பணிகள் ஜூன் 18ம் தேதி தொடங்கி, 25ம் தேதி வரை நடந்தது. கையகப்படுத்தப்பட வேண்டிய நிலங்கள் சேட்டிலைட் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அளந்து, முட்டுக்கற்கள் நடப்பட்டன.     சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி, ஹெக்டேருக்கு 21.3 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 9.04 கோடி ரூபாய் ...
தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல… அராஜகம்! சேலம் விவசாயிகள் கொதிப்பு!!

தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல… அராஜகம்! சேலம் விவசாயிகள் கொதிப்பு!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வயல்வெளிகளில் கருப்புக்கொடி நட்டு நூதன போராட்டம் நடத்தினர். சென்னை - சேலம் இடையில் புதிதாக எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 277.30 கி.மீ. அமைய உள்ள இந்த வழித்தடத்தில், சேலம் மாவட்டத்தில் மட்டும் 36.3 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளது.   இதற்காக தனியார் பட்டா நிலங்கள், விளை நிலங்களை அளவீடு செய்து முட்டுக்கல் நடும் பணிகள் கடந்த 18ம் தேதி தொடங்கி, நேற்று நிறைவு பெற்றது. இரு போகம் விளையக்கூடிய நிலம், 50 அடி ஆழத்தில் நிலத்தடி நீர் கிடைக்கும் வற்றாத கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், தென்னை, மா, கொய்யா தோப்புகள் என மீட்டெடுக்க முடியாத இயற்கை வளங்களும் இந்த சாலைக்கு இரையாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   இதனால் சேலம் மாவட்டம் முழுவதும் ...