கொரோனா: வங்கிகள் கடன் வசூலிக்க தடை!
கொரோனா வைரஸ் காரணமாக
ஊரடங்கு உத்தரவு அமலில்
உள்ள நிலையில், மறு உத்தரவு
வரும் வரை வங்கிகள்,
நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழு
நிறுவனங்கள் உறுப்பினர்கள்,
வாடிக்கையாளர்களிடம் இருந்து
கடன் அசல், வட்டி
வசூலிக்கக்கூடாது என்று
தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
கோரோனா வைரஸ்
நோய்த் தொற்றைத் தடுக்க
தீவிர நடவடிக்கைகளை
தமிழக அரசு போர்க்கால
அடிப்படையில் எடுத்து வருகிறது.
இதற்கென பொது மக்களின்
நன்மை கருதி, குற்றவியல்
நடைமுறைச் சட்டம் பிரிவு
144ன் படி, ஊரடங்கு உத்தரவு
உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை
விதித்து வருகின்றது.
இந்த உத்தரவுகளை அனைத்து
மாவட்டங்களிலும் முறையாக
நடைமுறைப்படுத்திட உத்தரவுகள்
வழங்கப்பட்டன. இதன்மீது
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்,
மாவட்ட காவல்துறை
கண்காணிப்பாளர்கள்,
பொது சுகாதாரத்துறை
துணை இயக்குநர்கள்
ஆகிய...