Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: double life imprisonment

சேலம் சிறுமியை சின்னாபின்னமாக்கி கொன்ற ஐவர் கும்பல்! இரட்டை ஆயுள் தண்டனை விதித்த மகளிர் நீதிமன்றம்!!

சேலம் சிறுமியை சின்னாபின்னமாக்கி கொன்ற ஐவர் கும்பல்! இரட்டை ஆயுள் தண்டனை விதித்த மகளிர் நீதிமன்றம்!!

சேலம், முக்கிய செய்திகள்
சேலம் சிறுமியை ஐந்து பேர் கொண்ட கும்பல் துடிக்க துடிக்க கூட்டு வன்புணர்வு செய்து, கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம், வியாழனன்று (மார்ச் 21, 2019) பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.   சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சென்றாயன்பாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். தறித்தொழிலாளி. இவருடைய மகள் பூங்கொடி (10). அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த, 14.2.2014ம் தேதி இரவு, சிறுமி பூங்கொடி தனது பெற்றோர், சகோதரிகளுடன் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். மறுநாள் காலையில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. பரமசிவமும் அவருடைய மனைவியும் பல இடங்களிலும் தேடிப்பார்த்தனர். சென்றாயன்பாளையம் பெருமாள் மலைக்கரடு பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில், சிறுமி தூக்கில் சடலமாக தொங்கிக் க
சாதி ஆணவப் படுகொலையும் நீதிமன்ற தீர்ப்பும்!

சாதி ஆணவப் படுகொலையும் நீதிமன்ற தீர்ப்பும்!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, திண்டுக்கல், திருப்பூர், முக்கிய செய்திகள்
உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, வரலாற்றின் பக்கங்களில் நீடித்து நிலைத்து நிற்கும். ஆனால், இந்த தீர்ப்பு சமூக அடுக்குகளில் படிந்திருக்கும் சாதிய உணர்வுகளுக்கு சாவு மணி அடித்திருக்கிறதா என்றால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ''கேளடா மானிடாவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை'' என்று சாதிக்கு எதிராக புரட்சி கீதம் பாடிய பாரதியின் பிறந்த நாளுக்கு மறுநாள் (டிசம்பர் 12, 2017), இந்திய திருநாடே அதுவரை எதிர்பார்த்திராத ஒரு தீர்ப்பை, திருப்பூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் வழங்கினார். உடுமலை சங்கரின் காதல் மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் தண்டனையும் வழங்கினார் நீதிபதி. அதுவும், ஒரு பெண் நீதிபதியே இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க
தாயின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு!; கவுசல்யா

தாயின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு!; கவுசல்யா

தமிழ்நாடு, திருப்பூர், முக்கிய செய்திகள்
உடுமலை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கில் தாய் அன்னலட்சுமி உள்பட மூன்று பேரின் விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சங்கரின் மனைவி கவுசல்யா கூறியுள்ளார். உடுமலை சங்கரும், பழனியைச் சேர்ந்த கவுசல்யாவும் கடந்த ஆண்டு சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதலுக்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையை ஏவி, கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதி சங்கரை பட்டப்பகலில் பலர் முன்னிலையில் வெட்டிப் படுகொலை செய்தனர். கவுசல்யாவையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. எனினும், தீவிர சிகிச்சை காரணமாக அவர் உயிர் பிழைத்தார். இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை, கொலை வழக்கில் உதவியாக இருந்ததாக பிரசன்னா உள்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வழக்கை விசாரித்த திருப்பூர் வன்கொடு