Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Dharmapuri

தர்மபுரி: கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு! 3 பெண் உள்பட 4 பேர் கைது!!

தர்மபுரி: கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு! 3 பெண் உள்பட 4 பேர் கைது!!

தர்மபுரி, முக்கிய செய்திகள்
தர்மபுரி அரசு மருத்துவமனையில், பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை கடத்தியதாக மூன்று பெண்கள் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தப்பட்ட குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாச்சனூரைச் சேர்ந்தவர் அருள்மணி (35). மரத்தச்சு வேலை செய்பவர். இவருடைய மனைவி மாலினி (19). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாலினி, கடந்த 18ம் தேதி மாலை 4 மணியளவில், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் (ஜூன் 19) இரவு 7 மணியளவில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.   அதற்கு அடுத்த நாள் காலையில் மாலினி, பிரசவ அறை அருகே உள்ள கழிப்பறைக்குச் சென்று விட்டு மீண்டும் தன் அறைக்கு வந்து பார்த்தார். அப்போது, தன்னுடைய குழந்தை திடீரென்று மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி
தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தை கடத்தல்! பட்டப்பகலில் மர்மப்பெண் கைவரிசை! வடமாநில கும்பலுக்கு தொடர்பு?

தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தை கடத்தல்! பட்டப்பகலில் மர்மப்பெண் கைவரிசை! வடமாநில கும்பலுக்கு தொடர்பு?

தர்மபுரி, முக்கிய செய்திகள்
தர்மபுரி அரசு மருத்துவமனையில், பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியில் ஹிந்தி அல்லது உருது மொழி பேசிய பெண்ணின் கைவரிசை உள்ளதால், வடமாநில கும்பலுக்கு தொடர்பு இருக்கலாமோ என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாச்சானூரைச் சேர்ந்தவர் அருள்மணி (35). மரத்தச்சரான இவருடைய மனைவி மாலினி (19). இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டாகிறது.   நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாலினி, கடந்த 18ம் தேதி மாலை 4 மணியளவில், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் (ஜூன் 19) இரவு 7 மணியளவில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.   அதற்கு அடுத்த நாள் காலையில் குழந்தை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் மாலினி கழிப்பறைக்குச் சென்றிருந்தார். பின்னர் அவர் படுக்கைக்
தர்மபுரி: காட்டுக்குள் வந்தால் கபளீகரம்! காதலர்களுடன் வரும் இளம்பெண்களுக்கு குறி! துப்பாக்கிக்கு இரையான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள்

தர்மபுரி: காட்டுக்குள் வந்தால் கபளீகரம்! காதலர்களுடன் வரும் இளம்பெண்களுக்கு குறி! துப்பாக்கிக்கு இரையான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள்

குற்றம், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
  ஒகேனக்கல் அருகே காட்டுப்பகுதிக்குள் காதலனுடன் ஒதுங்கிய இளம்பெண்ணை சீரழிக்க முயன்றபோது ஏற்பட்ட தகராறில் காதலனை கருணையே இல்லாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து நான்கு கி.மீ. தொலைவில் பண்ணப்பட்டி பிரிவு சாலையில் ஒரு காப்புக்காடு இருக்கிறது. இந்தக் காட்டுப்பகுதிக்குள் அந்நியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்றாலும், ஒகேனக்கல்லுக்கு ஜோடியாக சுற்றுலா வரும் இளசுகள், இந்த காட்டுப்பகுதியில் ஒதுங்குவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆளரவமற்ற பகுதி என்பதால், எது நடந்தாலும் வெளி உலகுக்குத் தெரியாது. இந்நிலையில், கடந்த மே 1ம் தேதியன்று, தொப்பூர் அருகே உள்ள ஜருகு குரும்பட்டியான் கொட்டாயைச் சேர்ந்த பாலு மகன் முனுசாமி (25), தனது அக்காள் மகள் ரஞ்சனி (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடன் ஒ
எங்கள் பிணங்களின் மீது எட்டுவழிச்சாலை போடுங்கள்!; கொதிக்கும் விவசாயிகள்; தகிக்கும் சேலம்!!

எங்கள் பிணங்களின் மீது எட்டுவழிச்சாலை போடுங்கள்!; கொதிக்கும் விவசாயிகள்; தகிக்கும் சேலம்!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
எட்டு வழிச்சாலை விவகாரத்தில், அக்னி நட்சத்திரம் அடங்கிய பின்னும் கடும் கொதிநிலையில் இருக்கிறது மாங்கனி மாவட்டம். 'ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு, இழப்பீடு தருகிறோம் என்பதை எப்படி ஏற்க முடியும்? எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோடி தருகிறோம். உயிரைக் கொடுப்பாரா?,' என வெடித்துக் கிளம்பியுள்ளனர் விவசாயிகள். சேலத்தில் இருந்து சென்னைக்குச் செல்ல மூன்று வழித்தடங்கள் உள்ளன. இதனூடாக 334 கி.மீ., தொலைவு பயணிக்க வேண்டும். இதற்கான பயண நேரம் 5.24 மணி. ஆனால், புதிதாக அமையவிருக்கும் எட்டு வழிச்சாலை / பசுமைவழிச்சாலைத் திட்டத்தால், இந்தப் பயண தூரம் 57 கி.மீ., வரை குறைகிறது. அதாவது, 277.3 கி.மீ. தூரமாக பயணத்தொலைவு குறைகிறது. இதனால், வெறும் 3 மணி நேரத்தில், சேலத்தில் இருந்து சென்னைக்கு சாலை மார்க்கமாக பயணித்துவிட முடியும்.   எட்டு வழிச்சாலைத் திட்டத்தின் நோக்கம் குறித்து அரசுத்தரப்ப
ஒரு குடும்பம்; 6 பிள்ளைகள்; 5 பேருக்கு பார்வை இல்லை; ஒளி கொடுக்குமா அரசாங்கம்?

ஒரு குடும்பம்; 6 பிள்ளைகள்; 5 பேருக்கு பார்வை இல்லை; ஒளி கொடுக்குமா அரசாங்கம்?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள், வேலூர்
சி-ற-ப்-பு-க்-க-ட்-டு-ரை ''ஒரு ஊர்ல ஓர் அப்பா அம்மா இருந்தாங்களாம். அவங்களுக்கு 6 பிள்ளைகளாம். அதுல, அஞ்சு பிள்ளைகளுக்கு கண் பார்வை தெரியாதாம்....'' எதிர்காலத்தில் இப்படி ஒரு கதை குழந்தைகளிடம் சொல்லப்படலாம். இது கதை அல்ல. நிஜம். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ராச்சமங்கலம் அருகே உள்ளது புறத்தார் வட்டம். இந்த ஊரைச் சேர்ந்த தண்டபாணி - சரஸ்வதி தம்பதிக்கு கோவிந்தம்மாள் (28), காஞ்சனா (27), ஏழுமலை (26), வெங்கடேசன் (24), பவித்ரா (22), இசை தீபா (19) ஆகிய பிள்ளைகள். இவர்களில் பவித்ரா தவிர, மற்ற ஐந்து பேருக்கும் காதுகளே கண்கள். எந்த பாவமும் செய்திராதபோதும் இயற்கை அந்த ஒரு குடும்பத்தை அப்படி சபித்திருக்கக் கூடாது. இங்குதான் கடவுளின் மீதான நம்பகத்தன்மையும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. கோவிந்தம்மாள், சரஸ்வதி தம்பதி இன்றைக்கு உயிருடன் இல்லை. பிள்ளைகள் எல்லோரும் வளர்ந்து ஆளாகிவிட்ட நிலையில், இத