Thursday, December 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: development

இந்தியாவில் அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு! – கோ.விசுவநாதன்

இந்தியாவில் அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு! – கோ.விசுவநாதன்

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியைப் பொருத்துதான் இருக்கும். உலகில் உள்ள நாடுகளில் சுமார் 70 நாடுகள் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளாக கருதப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சி என்பது, தனிநபர் வருமானத்தை வைத்துதான் கணக்கிடப்படுகிறது. தனிநபர் வருமானம் 15 ஆயிரம் டாலர்கள் உள்ள நாடுகளை வளர்ந்த நாடுகள் என்று அழைக்கிறோம். மீதமுள்ள நாடுகளை வளரும் நாடுகள், வளர்ச்சி பெறாத நாடுகள் என்று இரு வகையாகப் பிரித்து வைத்திருக்கிறோம். அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே உலகில் பெரிய பொருளாதார நாடுகளாக கருதப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அளவீட்டை வைத்துதான் தன்னிறைவு பெற்ற நாடு, வளர்ந்த நாடு, வளர்கின்றன நாடுகள் என்றெல்லாம் வகைப்படுத்தப்படுகின்றன. நடப்பு 2023ம் ஆண்டில், அமெரிக்காவின் ஜிடிபி 26 டிரில்லியன் டாலர். சீனா 19 டிரில்லியன் டாலர். ஜெர்ம...
”ஈழத்தைப் பற்றி பேச இங்கே நான் ஒருவன்தான் இருக்கிறேன்!” – வெடிக்கும் சீமான்!! #Seeman

”ஈழத்தைப் பற்றி பேச இங்கே நான் ஒருவன்தான் இருக்கிறேன்!” – வெடிக்கும் சீமான்!! #Seeman

அரசியல், இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  - சிறப்பு நேர்காணல் -   சேலம் அருகே எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் மக்களிடம் நேரில் கருத்து கேட்கச் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, ஜூலை 18ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். ஜாமின் கோரி வழக்கு தொடர்ந்ததில், 'இந்த கைதே சட்ட விரோதமானது,' என்று கண்டித்த சேலம் மாவட்ட நீதிமன்றம், மறுநாள் மாலையில் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜூலை 20ம் தேதி காலையில், சேலம் மத்திய சிறையில் இருந்து சீமான் வெளியே வந்தார்.   அன்று இரவு, சேலத்தில் சீமான் தங்கியிருந்த ஹோட்டலில் அவரை சந்தித்தோம். நாம் சென்ற நோக்கம் குறித்து, ஹோட்டல் லாபியில் உள்ள இன்டர்காம் மூலம் தகவல் தெரிவித்தோம்.   அவருடைய வழக்கறிஞரின் ஆலோசனையின்பேரில் நம்மை சந்தித்தார் சீமான். நேர்காணலின் துவக்கம் முதல் இறுதிவரை கொஞ்சமும் அவரிடம் எனர்ஜி குறையவில்லை. வார்த்தைகள் ஒவ்வ...
மனித மூலதனக் குறியீடு: இந்தியாவின் நிலை மோசம்!

மனித மூலதனக் குறியீடு: இந்தியாவின் நிலை மோசம்!

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
வல்லரசு கனவை முன்னெடுத்துச் செல்வதாக பிரதமர் நரேந்திர மோடி கர்ஜனை செய்தாலும், மனித மூலதனக் குறியீட்டில் இந்தியாவின் நிலை மிகவும் பின்தங்கி இருப்பது உலக பொருளாதார மன்றத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் மனித வளத்தைப் பயன்படுத்தும் விதம், மனிதர்களின் உற்பத்திறன் குறித்து உலகப் பொருளாதார மன்றம் (WORLD ECONOMIC FORUM) என்ற அமைப்பு அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது. அந்த அமைப்பு, உலகம் முழுவதும் 130 நாடுகளில் உள்ள மனித மூலதன பயன்பாட்டை ஆய்வு செய்து நேற்று (செப். 13) அறிக்கை (GLOBAL HUMAN CAPITAL  REPORT-2017) வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில், இந்தியாவுக்கு 103-வது இடமே கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. அதென்ன மனித மூலதனம்?: உலகப் பொருளாதாரத்தில் ஆக்கப்பூர்வ தாக்கத்தையும், மதிப்புக் கூட்டும் வல்லமையையும் மக்களுக்கு அளிக்கும் அறிவும், திறமையுமே மனித மூலதனம் என்று அந்த அமைப்...
அரசுப்பள்ளிகள் மேம்பட என்ன செய்ய வேண்டும்? – டான்சீன் யோசனை

அரசுப்பள்ளிகள் மேம்பட என்ன செய்ய வேண்டும்? – டான்சீன் யோசனை

கல்வி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிலையங்கள் சங்கம் (டான்சீன் - TANCEAN-Tamilnadu Catholic Educational Association ), தமிழ்வழிப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக சில யோசனைகளை தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் கீழ், தமிழகம், புதுவையில் 2630 கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன. டான்சீன் கல்வியாளர்கள் கூட்டம் கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகம், புதுவையில் நடந்தது. தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, கலாச்சாரம் காக்கப்பட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர். அந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் முக்கிய அம்சங்கள்: தமிழ்வழிப் பள்ளிகளின் இன்றைய நிலை: பொதுமக்களிடையே ஆங்கிலவழிக் கல்வி மீதான மோகம் அதிகரித்துள்ளது. ஆங்கிலத்தில் பேசுவது, படிப்பது பெருமை என மக்கள் எண்ணுகிறார்கள். மிகவும் ஏழை குழந்தைகளின் தேர்வாக மட...