Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Department

மன்னார்குடி கும்பலிடம் வருமான வரித்துறை சோதனை ஏன்?; பூனைக்குட்டி வெளியே வந்தது!; நமது எம்ஜிஆர் நாளேடு அம்பலம்!!

மன்னார்குடி கும்பலிடம் வருமான வரித்துறை சோதனை ஏன்?; பூனைக்குட்டி வெளியே வந்தது!; நமது எம்ஜிஆர் நாளேடு அம்பலம்!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சசிகலா, தினகரன் மற்றும் அவருடைய நெருங்கிய வட்டாரங்களைக் குறிவைத்து வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் (நவம்பர் 11, 2017) சோதனை நடத்தி வருகிறது. இதற்கு முன், எத்தனையோ முறை இதுபோன்ற சோதனைகளை மன்னார்குடி கும்பல் சந்தித்து இருந்தாலும், இப்போது போன்ற மெகா சோதனையை எதிர்கொண்டதில்லை. முதல் நாளில் பத்திரிகையாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இரண்டாவது நாளான நேற்று ஊடகங்களைச் சந்திப்பதை தவிர்த்தார். இதற்கிடையே, ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கிடைத்ததாகவும், பாஸ்கரன் வீட்டில் இருந்து 15 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தத் தகவல்கள் எதுவுமே வருமானவரித்துறையின் அதிகாரப்பூர்வ தகவல்களாகச் சொல்லப்படவில்லை. ஊடகங்கள் தங்களுக்குக் கிடைத்த தகவல்கள் அடிப்படையிலும், யூகங்கள் அடிப்படையிலும் இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு ...
சேலம்: 414 ரூபாய்தான் கூலி; அதுவும் 14 மாசமா கொடுக்கல! தற்கொலைக்கு தள்ளும் மாவட்ட நிர்வாகம்

சேலம்: 414 ரூபாய்தான் கூலி; அதுவும் 14 மாசமா கொடுக்கல! தற்கொலைக்கு தள்ளும் மாவட்ட நிர்வாகம்

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
சேலத்தில், உழைக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சொற்ப கூலியைக்கூட 14 மாதமாக வழங்காமல் போக்குக் காட்டிவரும் மாவட்ட நிர்வாகத்தால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.   சமூகநலத்துறையின் கீழ் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகங்கள் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் இயங்கி வருகிறது. சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்புக்கு எதிரில் அய்யந்திருமாளிகையிலும், பெத்தநாயக்கன்பாளையத்திலும் செயல்பட்டு வருகிறது. பெற்றோரில் யாராவது ஒருவரை இழந்த அல்லது இருவரையும் இழந்த பெண் குழந்தைகள் இந்தக் காப்பகத்தில் தங்க வை க்கப்படுகின்றனர். 5 வயது முதல் 18 வரை இந்தக் காப்பகத்தில் தங்க வைத்துப் பாதுகாப்பதுடன், அரசுப்பள்ளியில் படிக்க வைத்தும் வருகிறது. தாய், தந்தை இருவரையும் இழந்த பெண் குழந்தை எனில், அவர்களுக்கு 21 வய...
சேலம்: 10 ரூபாய்க்கு 5 தோசை; ரூ.30க்கு முழு சாப்பாடே கிடைக்கும்!

சேலம்: 10 ரூபாய்க்கு 5 தோசை; ரூ.30க்கு முழு சாப்பாடே கிடைக்கும்!

உணவு, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-சி-ற-ப்-பு-க்-க-ட்-டு-ரை- சட்டைப்பையில் வெறும் 20 ரூபாய் இருந்தால்போதும் வயிறார சாப்பிடலாம். முப்பது ரூபாயில் பொரியல், அப்பளம் சகிதமாக முழு சாப்பாடே சாப்பிட முடியும். இதெல்லாம் அனேகமாக சேலத்தில் மட்டுமே சாத்தியமாகக்கூடும் என்பதே நிதர்சனம்.     சேலம் நகராட்சி, தமிழ்நாட்டின் ஐந்தாவது பெரிய மாநகராட்சியாக 1994ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. ஆனாலும், தனிநபர் வருவாய் அடிப்படையில் பெரிய முன்னேற்றங்கள் இல்லை. தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் ஆய்வில், சேலம் மக்களின் தனிநபர் வருவாய் 2004-05 காலக்கட்டத்தில் ஆண்டுக்கு ரூ.29271 ஆக இருந்தது.     இந்த வருவாய் ஐந்து ஆண்டுகளில், 2010-11 காலக்கட்டத்தில் ஆண்டுக்கு ரூ.48802 ஆக உயர்ந்திருக்கிறது. அதாவது சேலம் மக்கள் மாதத்திற்கு சராசரியாக ரூ.4067 பொருளீட்டுகின்றனர். இதை இப்படியும் சொல்லலாம்...
சாரணர் தேர்தல்: ஹெச்.ராஜாவை வறுத்தெடுக்கும் நெட்டிஸன்கள்!

சாரணர் தேர்தல்: ஹெச்.ராஜாவை வறுத்தெடுக்கும் நெட்டிஸன்கள்!

அரசியல், கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சாரணர் இயக்கத் தலைவர் தேர்தலில் படுதோல்வி அடைந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை, நெட்டிஸன்கள் டுவிட்டர் பக்கத்தில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். தமிழக சாரண, சாரணியர் இயக்கத்திற்கு கடந்த 12 ஆண்டுக்கும் மேலாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், சாரணர் அமைப்பை முழு வீச்சில் கட்டமைக்கும் நோக்குடன், இந்தாண்டு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று தேசிய தலைமையகம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, தேர்தல் நடத்துவதற்கான பணிகள் சமீப காலமாக நடந்து வந்தது. வழக்கமாக சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்தவர்களே போட்டியிடுவர். இந்தமுறை பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, அப்பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முன்னாள் இயக்குநர் மணி, போட்டியிட்டார். ஹெச்.ராஜா, போட்டியிடுகிறார் என்றதுமே, இந்த தேர்தல் மிகுந்த பரபரப்புக்கு உ...