
கொரோனா தொற்று அதிகரிப்பு; இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்!
கொரோனா நோய்த்தொற்றைத் தடுக்க, ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் இன்று (ஆக. 9) முதல் கூடுதலாக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில் மாலை 6 மணி வரை மட்டுமே ஜவுளிக்கடைகள், வணிக வளாகங்கள், பேரங்காடிகள் செயல்பட அனுமதித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா
நோய்த்தொற்று தடுப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
கட்டுப்பாடுகளுடன் கூடிய
ஊரடங்கு உத்தரவு
ஆக. 23ம் தேதி வரை
நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், நோய்த்தொற்றின்
தாக்கம் அதிகமாக உள்ள
இடங்களில் அந்தந்த
மாவட்ட ஆட்சியர்களே
சூழ்நிலைக்கு ஏற்ப
கட்டுப்பாடுகளை அதிமாக்கிக்
கொள்ளவும் அரசு அனுமதி
வழங்கியுள்ளது.
கேரளா மாநிலத்தில்
கொரோனோ நோய்த்தொற்று
சரிந்திருந்த நிலையில்,
கடந்த ஒரு வாரமாக மேலும்
கணிசமாக அதிகரிக்கத்
தொடங்கி உள்ளது.
இதையடுத்து எல்லையோர
மாவட்டங்களான கோவை,
திருப்பூர் ஆகிய மாவட்டங்களில...