Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: budget

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு; இனி 12 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது!

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு; இனி 12 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது!

இந்தியா, முக்கிய செய்திகள்
மாதச் சம்பளதாரர்கள், மத்திய தர வர்க்கத்தினரை மகிழ்ச்சிப் படுத்தும் விதமாக, ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய அரசின் 2025-2026ஆம்ஆண்டுக்கான நிதிநிலைஅறிக்கையை பிப். 1ஆம் தேதி(சனிக்கிழமை) நிதித்துறைஅமைச்சர் நிர்மலா சீதாராமன்நாடாளுமன்றத்தில்தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு: புதிய வருமான வரி முறையில்,வருமான வரி விலக்கிற்கானஉச்ச வரம்பு 7 லட்சம் ரூபாயில்இருந்து 12 லட்சம் ரூபாயாகஉயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி,ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரைவருமானம் பெறுவோர், வருமான வரிசெலுத்துவதில் இருந்து விலக்குஅளிக்கப்படுவதாக அமைச்சர்நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கடந்த 2019ல் 5 லட்சமாகவும்,2023ல் 7 லட்சமாகவும் உயர்த்தப்பட்டவரு...
அடேங்கப்பா…! கல்யாணச் சந்தையில் புழங்கும் 6 லட்சம் கோடி ரூபாய்!

அடேங்கப்பா…! கல்யாணச் சந்தையில் புழங்கும் 6 லட்சம் கோடி ரூபாய்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
''கல்யாணம் பண்ணிப்பார்; வீட்டைக் கட்டிப்பார்!'' ஆகிய இரண்டுமே அனுபவித்து, ஆய்ந்து சொன்ன மொழிகள். இவ்விரண்டு திட்டங்களிலும் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது. மட்டுமின்றி, உறவுகளை ஒன்றிணைப்பதும் முக்கியமாகிறது. எப்போது, எது கைகூடும்? எது உடையும்? எப்போது இத்திட்டங்கள் நிறைவேறும்? என்று கடைசித் தருணம் வரை திக்… திக்… நிமிடங்களாகவே கடந்து போக வேண்டியதிருக்கிறது. இரண்டுமே உணர்வுப்பூர்வமானது. என்றாலும்கூட, கல்யாண வைபவம் என்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது என்பதால் மனதிற்கு நெருக்கமானதாகிறது. ஒரு காலத்தில் மணமகள் அல்லது மணமகன் வீட்டிலேயே தென்னங்கீற்றுப் பந்தல் போட்டு, திருமண விழாக்களும், விருந்து உபசரிப்பும் களைகட்டின. நாகரிக மாற்றத்தால் இப்போது அவரவர் சக்திக்கு ஏற்ப மண்டபம் பிடிக்கின்றனர். மண்டபத்தை உறுதி செய்த பிறகு அழைப்பிதழ் அச்சடிப்பதில் இருந்து தொடங்குகிறது கல்யாண வ...
தமிழக பட்ஜெட்: குடிசை இல்லா தமிழகம் உருவாக்க இலக்கு; சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

தமிழக பட்ஜெட்: குடிசை இல்லா தமிழகம் உருவாக்க இலக்கு; சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு முதன்முதலாக 2021-2022ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) வெள்ளிக்கிழமை (ஆக. 13), சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கையை தாக்கல் செய்து, உரையாற்றினார். வழக்கமாக பட்ஜெட் அறிக்கை, காகிதங்களில் அச்சிட்டு அனைத்து எம்எல்ஏக்களுக்கும் வழங்கப்படும். காகிதங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கும் நோக்கில், முதன்முதலில் காகிதமில்லா பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் அறிக்கையை அறிந்து கொள்வதற்காக அனைத்து எம்எல்ஏக்களின் இருக்கையிலும் கணினித் திரை வைக்கப்பட்டது.   பட்ஜெட் 2021 சிறப்பு அம்சங்கள்:   இலவச வீடுகள்:   நடப்பு 2021 - 2022ம் நிதியாண்டில் 8017 கோடி ரூபாய் செலவில் சுமார் 2 லட்சம் இலவச வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். கிராமப்புற ...
ரேஷன் கார்டில் குடும்பத்தலைவர் பெயரை மாற்ற வேண்டாம்! தமிழக அரசு விளக்கம்!

ரேஷன் கார்டில் குடும்பத்தலைவர் பெயரை மாற்ற வேண்டாம்! தமிழக அரசு விளக்கம்!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக அரசின் 2021 - 2022ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஆக. 13) தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் வரலாற்றில் முதன்முதலாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் ஆனது.   நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட் உரையை தாக்கல் செய்து உரையாற்றினார்.   திமுக தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. இதையடுத்து, ரேஷன் கார்டுகளில் ஆண்களை குடும்பத் தலைவராக பதிவு செய்திருந்த பலர், பெண்களை குடும்பத்தலைவராக குறிப்பிட்டு ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்யத் தொடங்கினர்.   இதனால் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பெண்கள் பெயரில் புதிய ரேஷன் கார்டுக்காக பதிவு செய்வோர் கூட்டம் அலைமோதி...
பட்ஜெட் 2021-2022: பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடிவு: நிர்மலா

பட்ஜெட் 2021-2022: பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடிவு: நிர்மலா

இந்தியா, முக்கிய செய்திகள்
பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளதாக மத்திய பட்ஜெட் அறிக்கையின்போது நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.   கொரோனா பெருந்தொற்றால் ஒட்டுமொத்த துறைகளும் கிட்டத்தட்ட ஓராண்டாக பெரும் சரிவைச் சந்தித்திருந்த நிலையில், மத்திய அரசின் நடப்பு 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், திங்கள் கிழமை (பிப். 1) தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது நிதி நிலை அறிக்கை இது. இந்த பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே, பெரும்பாலும் தனியார்மயம் ஊக்குவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேப பங்கு விலக்கல் குறித்த அறிவிப்பும் வெளியானது. நிதி பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை பங்குகளை ஐபிஓ எனப்படும் ஆரம்பநிலை பங்கு விற்ப...
பட்ஜெட் தாக்கம்: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 580 புள்ளிகள் சரிவு

பட்ஜெட் தாக்கம்: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 580 புள்ளிகள் சரிவு

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
மத்திய பட்ஜெட்டில் பங்குச்சந்தைக்கு சாதகமான அம்சங்கள் இல்லாததால், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (பிப்ரவரி 2, 2018) கடும் வீழ்ச்சி அடைந்தது. முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை 11000 புள்ளிகளைக் கடந்தது. இந்நிலையில், மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் முதலீட்டாளர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டுக்கு ரூ.250 கோடிக்கு மேல் வருமானம் பெறும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதம் குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் கவனம் கார்ப்பரேட் நிறுவன வருமானத்தின் மீது திரும்பி உள்ளது. இதன் தாக்கம் நேற்று பகலிலேயே பங்குச்சந்தையில் எதிரொலித்தது. நேற்று ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கிய நிலையில், பெரும் சரிவுடன் நேற்றைய வர்த்தகம் மு...
மத்திய பட்ஜெட்: கார்ப்பரேட்டுக்கு கம்பளம்; சாமானியருக்கு நொம்பளம்!

மத்திய பட்ஜெட்: கார்ப்பரேட்டுக்கு கம்பளம்; சாமானியருக்கு நொம்பளம்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மக்களவையில் இன்று (பிப்ரவரி 1, 2018) தாக்கலான மத்திய பட்ஜெட், கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளையும், நடுத்தரவர்க்கத்தினரை ஏழைகளாகவும் மாற்றும் வகையில் இருப்பதாக மக்களிடம் அதிருப்தி கிளம்பியுள்ளன. 2018&2019ம் ஆண்டுக்கான பட்ஜெட், மக்களவையில் இன்று தாக்கலானது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். கடந்த 2014ல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு தாக்கல் செய்யும் அதன் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். ஒரு பட்ஜெட் அறிக்கை என்பது, எப்போதும் அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தியதாக வராற்றுச் சான்றுகள் இல்லை. மக்கள் நலனை மையப்படுத்திய பட்ஜெட்டாகவே இருந்தாலும் அதை எதிர்ப்பதுதான் எதிர்க்கட்சிகளிடையே நிலவும் பொதுவான போக்குகள். இன்று சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட், ஒட்டுமொத்தமாக மக்களுக்கு விரோதமானது என்று சொல்லிவிடலாகாது. ஆனால், அடுத்து வரவுள்ள சில மாநில சட்டப்பேரவை தேர்தல், அடு...
‘மெர்சல்’ படத்திற்கு மீண்டும் சிக்கல்; தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?

‘மெர்சல்’ படத்திற்கு மீண்டும் சிக்கல்; தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?

இந்தியா, உலகம், சினிமா, முக்கிய செய்திகள்
'மெர்சல்' படத்திற்கு விலங்குகள் நலவாரியத்திடம் இருந்து ஆட்சேபனையில்லா சான்றிதழ் இன்னும் பெறப்படாததால், திட்டமிட்டபடி தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதில் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் - இயக்குநர் அட்லி கூட்டணியில் சுமார் ரூ.135 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது 'மெர்சல்'. ஸ்ரீதேனாண்டால் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் முரளி ராமசாமி படத்தை தயாரித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் விஜய் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேஜிக் கலைஞராகவும் முதன்முதலாக நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏற்கனவே பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வரும் 18ம் தேதி வெளியிடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்...
மெர்சல் படத்தின் டைட்டில் மாறுகிறதா?

மெர்சல் படத்தின் டைட்டில் மாறுகிறதா?

சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'சண்டையில கிழியாத சட்டை எங்கிட்டு இருக்கு?' என்ற 'கைப்புள்ள' வடிவேலு காமெடி போல, 'சர்ச்சையில் சிக்காமல் விஜய் படம் எப்போது ரிலீஸ் ஆகியிருக்கு?' என்று சொல்லும் காலம் வந்தாலும் ஆச்சர்யமில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் நடித்த படங்கள் ரிலீசுக்கு முன்னரோ அல்லது வெளியான பின்னரோ ஏதோ ஒரு வகையில் சர்ச்சையில் சிக்கி வருகிறது. 'தலைவா' படம் ரிலீசுக்கு முன்பே பிரச்னைகளை சந்தித்தது. அந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழ், 'பார்ன் டு லீட்' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கும். அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவினர், அந்த வார்த்தைகளுக்கு அதிருப்தி தெரிவித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின. கத்தி, துப்பாக்கி போன்ற படங்களும் நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்த பின்னரே திரைக்கு வந்தன. இந்நிலையில், சுமார் ரூ.135 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ள மெர்சல் படமும் தற்போது நீதிமன்ற வழக்கில் சிக்கி இருக்கிறது. மெர...