Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: 2G scam

ஆர்.கே. நகர்: மு.க.ஸ்டாலின் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்!

ஆர்.கே. நகர்: மு.க.ஸ்டாலின் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தேர்தல் அரசியல் களத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்பதையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவருடைய வியூகங்களும் களப்பணிகளும் காட்டுகின்றன. சமூக வலைத்தளங்களிலும் அவருடைய செயல்பாடுகள் ரொம்பவே கேலிக்குள்ளாகி இருக்கின்றன.  திராவிட இயக்கத்தின் சித்தாந்தங்களை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச்செல்லக்கூடிய தலைவராக மு.க.ஸ்டாலின் பார்க்கப்படுகிறார். மேயர், எம்எல்ஏ, எதிர்க்கட்சித் தலைவர் என அரசியல் படிநிலைகளிலும், இளைஞரணி செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என கட்சிக்குள்ளும் அவருடைய வளர்ச்சி நின்று நிதானமாகவே இருந்து வந்திருக்கிறது. சசிகலாவை உடன்பிறவா சகோதரியாக ஏற்றுக்கொண்டதாலேயே அவர் கைக்காட்டிய மன்னார்குடி பரிவாரங்களுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் பதவிகளை வாரிக்கொடுத்த ஜெயலலிதா போல், இந்திய அரசியலின் ஆகப்பெரும் தலைவரான கருணாநிதி தன் மகன் மு.க.ஸ்டாலினுக்கு அப
அரசியல் அரங்கை தெறிக்கவிட்ட மோடி – கருணாநிதி சந்திப்பு!

அரசியல் அரங்கை தெறிக்கவிட்ட மோடி – கருணாநிதி சந்திப்பு!

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் விரைவில் தீர்ப்பு, நிலைகுலைந்த அதிமுக அரசாங்கம் போன்ற சூழலில் பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று திமுக தலைவர் கருணாநிதியை இன்று (நவம்பர் 6, 2017) கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து இருப்பது அரசியல் அரங்கில் பல்வேறு யூகங்களை எழுப்பி இருக்கிறது. தமிழக சட்டப்பேரவைக்குள் எந்த வகையிலாவது நுழைந்து விட வேண்டும் என்பதுதான் பாஜகவின் ஒரே குறிக்கோள். கிட்டத்தட்ட இந்தியாவின் 75 சதவீத பகுதிகளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்துவிட்ட பாஜகவுக்கு தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு கடுமையான சவால்களை கொடுத்து வருகிறது. ஆட்சியைப் பிடிப்பது பெருங்கனவு; இப்போதைக்கு ஒன்றிரண்டு பேரையாவது எம்எல்ஏ ஆக்குவோம் என்பதுதான் அ க்கட்சியின் திட்டம். செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியில் இருந்தே இன்னும் எவ்வளவு நாள்தான் கூவிக்கொண்டிருக்க முடியும்?. பாஜகவின் திட்டங்களை செயல்படுத்த