Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: விஷ வாயு.

ஆத்தூர் அருகே சேகோ ஆலையில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி!

ஆத்தூர் அருகே சேகோ ஆலையில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆத்தூர் அருகே, சேகோ ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொட்டியின் மேல் மூடியை திறந்தபோது விஷ வாயு தாக்கியதில் கூலித்தொழிலாளி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.   சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கெங்கவல்லி பள்ளக்காட்டைச் சேர்ந்தவர் மாணிக்கம் (65). அப்பகுதியில் சண்முகா சேகோ பேக்டரி என்ற பெயரில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் அம்மம்பாளையம் கண்ணகி நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் மணி என்கிற ஜெயச்சந்திரன் (35) கூலி வேலை செய்து வந்தார். அவருடன், பள்ளக்காட்டைச் சேர்ந்த மாது (55), காங்கமுத்து (50), கலியன் (48) ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.   ஜவ்வரிசி, ஸ்டார்ச் தயாரிப்பதற்கான மரவள்ளிக் கிழங்குகளை அரைத்த பின்னர் வெளியேற்றப்படும் கழிவு நீரை தேக்கி வைக்க, 6
“சாதியை ஒழிக்காமல் மலக்குழி சாவுகளை தடுக்க முடியாது” -‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யா

“சாதியை ஒழிக்காமல் மலக்குழி சாவுகளை தடுக்க முடியாது” -‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யா

அரசியல், கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
(ஏப்ரல்-2017, "புதிய அகராதி" இதழில்...)   ‘கக்கூஸ்’ அவணப்படத்தின் மூலம் மனிதக்கழிவு அகற்றும் தூய்மைப் பணியாளர்களின் துயர நிலையை, அவர்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார் திவ்யபாரதி. அவருடனான உரையாடலில் இருந்து…   புதிய அகராதி: துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் நோக்கம் எப்போது வந்தது?   திவ்யா: கடந்த 2015ம் ஆண்டு மதுரையில், மலக்குழியில் இறங்கி வேலை செய்த இரண்டு தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி இறந்து விட்டனர். இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, உரிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு, அலட்சியமாக இருந்த அதிகாரிகளை கைது செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி எங்கள் அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகளும் போராடின.   அப்போது, இறந்த ஒரு தொழிலாளியின் இளம் மனைவி 'வா மாமா வ