Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: மோசடி

5 லட்சம் ரூபாய்க்கு அரசு வேலை!; ஆசை வலை விரித்து மோசடி செய்த அரசுப்பள்ளி பெண் ஆசிரியர்கள் இருவர் கைது!!

5 லட்சம் ரூபாய்க்கு அரசு வேலை!; ஆசை வலை விரித்து மோசடி செய்த அரசுப்பள்ளி பெண் ஆசிரியர்கள் இருவர் கைது!!

குற்றம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ் வளர்ச்சித்துறையில், வேலை வாங்கிக் கொடுப்பதாக ஆசை வலை விரித்து, காவலரின் மனைவியிடமே 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த அரசுப்பள்ளி பெண் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.   சென்னை புது வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ரேணியல். காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அனிதா கார்மெல் (43). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயில் மூலம் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.   அப்போது, அதே ரயிலில் பயணம் செய்த திருப்பாச்சூரைச் சேர்ந்த அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர் மேகலா (59) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போது மேகலா, ''அரசுத் துறைகளில் பல உயர் அதிகாரிகளுடன் எனக்கு நெருக்கமான நட்பு உள்ளது. யாருக்காவது அரசு வேலை வேண்டுமானால் சொல்லுங்கள். இப்போது கூட தமிழ் வளர்ச்சித்துறையில் காலிப்பணியிடம் இருக்கிறது. யாராவது வ
சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நூதன மோசடி! கஞ்சிக்கே வழியில்லாத நெசவாளர்கள் வயிற்றில் அடித்த நிர்வாகம்!!

சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நூதன மோசடி! கஞ்சிக்கே வழியில்லாத நெசவாளர்கள் வயிற்றில் அடித்த நிர்வாகம்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு வேளை கஞ்சிக்கே வழியில்லாமல் திண்டாடிய கைத்தறி நெசவாளர்களை நூதன முறையில் சுரண்டி மோசடியில் ஈடுபட்டுள்ளது, சேலம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம்.   சேலம் 2ஆம் அக்ரஹாரத்தில், 1956ம் ஆண்டு முதல் சேலம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.   இக்கூட்டுறவு சங்கத்தில் 1558 கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் வெண்பட்டு வேஷ்டி, சட்டைத்துணி, அங்கவஸ்திரம் ஆகியவற்றை சங்கம் நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது.   இதற்காக சங்க உறுப்பினர்களுக்கு மாதத்திற்கு ஒரு பாவு, அதற்குரிய கோரா பட்டு நூல் ஆகியவற்றை வழங்குகிறது. ஒரு பாவு மூலம் பத்து வெண்பட்டு வேஷ்டிகளை உற்பத்தி செய்ய முடியும். ஒரு வேஷ்டியின் கொள்முதல் விலை 750 ரூபாய்.   ஒரு கு
சேலம் பெரியார் பல்கலை பேராசிரியர் திடீர் பணியிடைநீக்கம்! 8 நாளில் ஓய்வு பெற இருந்தார்!!

சேலம் பெரியார் பல்கலை பேராசிரியர் திடீர் பணியிடைநீக்கம்! 8 நாளில் ஓய்வு பெற இருந்தார்!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலை டீன் கிருஷ்ணகுமார், இன்னும் 8 நாளில் ஓய்வு பெற இருந்த நிலையில், ஊழல் புகாரின்பேரில் திடீரென்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். சேலம் பெரியார் பல்கலையில் இயற்பியல் துறைத்தலைவராகவும், பல்கலை டீன் ஆகவும் பணியாற்றி வந்தவர் கிருஷ்ணகுமார். இவர், கடந்த 2010ம் ஆண்டு சிறிது காலம் பெரியார் பல்கலை துணைவேந்தராகவும் பொறுப்பு வகித்தார். அதன்பிறகு, புதிய துணைவேந்தராக முத்துச்செழியன் நியமிக்கப்பட்டார். பேராசிரியர் கிருஷ்ணகுமார், துணைவேந்தர் பொறுப்பில் இருந்தபோது, பல்கலை விருந்தினர் மாளிகையை புதுப்பிப்பதற்காக குளிர்சாதன உபகரணங்கள், அறைகலன்கள் கொள்முதல் செய்ததில் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார்கள் எழுந்தன.   மேலும், எழுதுபொருள்கள் கொள்முதல் செய்ததிலும் இல்லாத நிறுவனங்களின் பெயரில் போலியாக ரசீதுகளை தயாரித்து மோசடியில
சேலம் மாநகராட்சி ஊழியர் ரூ.88 லட்சம் சுருட்டல்! பரபரப்பு தகவல்கள் அம்பலம்!!

சேலம் மாநகராட்சி ஊழியர் ரூ.88 லட்சம் சுருட்டல்! பரபரப்பு தகவல்கள் அம்பலம்!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சி துப்புரவு ஊழியர் ஒருவர், போலி காசோலைகள் மூலம் 88 லட்சம் ரூபாய் சுருட்டியிருக்கும் பகீர் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.   சேலம் கருங்கல்பட்டி கலைஞர் நகர் மூன்றாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். இவருடைய மகன் வெங்கடேஷ் (38). சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில், கடந்த 2000ம் ஆண்டு முதல் துப்புரவு ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் சம்பள பட்டியல் தயாரிக்கும் பிரிவில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கொண்டலாம்பட்டி மண்டலத்தில் முதல்நிலை அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள், குப்பை வண்டி ஓட்டுநர்கள் என 1500 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்காக மாதம் 3 கோடி ரூபாய் வரை சம்பள செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மண்டல ஊழியர