Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: மறைமுக தேர்தல்

சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியை இரண்டாம் முறையாக கைப்பற்றியது பாமக!

சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியை இரண்டாம் முறையாக கைப்பற்றியது பாமக!

அரசியல், சேலம், தமிழ்நாடு
சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பதவியை பாமக இரண்டாவது முறையாக கைப்பற்றியது. அக்கட்சியின் வேட்பாளர் ரேவதி, தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவின் ராஜேந்திரன், துணைத்தலைவராக வெற்றி பெற்றார். ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. ஊராட்சி ஒன்றியக்குழு, மாவட்ட ஊராட்சிக்குழுக்களின் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11ம் தேதி (சனிக்கிழமை) நடந்தது.   சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுவில் மொத்தம் 29 உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதில், அதிமுக 18 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான பாமக 4, தேமுதிக 1 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. எஞ்சியுள்ள 6 இடங்களையும் திமுக கைப்பற்றி இருந்தது. மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பதவிக்கு போதிய பெரும்பான்மையை அதிமுக தனித்தே பெற்றிருக்கிறது. என்றாலும், ஒன்றிய
சேலம் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆளுங்கட்சியே தலைவர் பதவியை கைப்பற்றியது!

சேலம் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆளுங்கட்சியே தலைவர் பதவியை கைப்பற்றியது!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றியக்குழு, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு சனிக்கிழமை (ஜன. 11) மறைமுகத் தேர்தல் நடந்தது. சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் ஒன்றியத்தில் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலும், கொளத்தூர் ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கான தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.   தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட ஒன்றியங்கள் தவிர, மற்ற ஒன்றியங்களில் அனைத்திலும் தலைவர் பதவியை ஆளுங்கட்சியே கைப்பற்றியது. சில இடங்களில் பாமகவுக்கும், ஒரே ஒரு ஒன்றியத்தில் தேமுதிகவுக்கும் துணைத்தலைவர் பதவியை விட்டுக்கொடுத்துள்ளது, ஆளுங்கட்சி. மூன்று ஒன்றியங்களில், துணைத்தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக தலைவர் துணைத்தலைவர் பதவிகளைக் கைப்பற்றியவர்கள் விவரம்:   1. ஆத்தூர் ஒன்றியம்: தலைவர்: லிங்கம்மாள் (அதிமுக) துணைத்தலைவர்: கன்ன
மறைமுக தேர்தலை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்; உயர்நீதிமன்றம் உத்தரவு!

மறைமுக தேர்தலை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்; உயர்நீதிமன்றம் உத்தரவு!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நாளை (11.1.2020) நடைபெற இருக்கும் ஒன்றியக்குழு, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடவடிக்கைகளை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜன. 10,2020) உத்தரவிட்டுள்ளது.   சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி புவனேஸ்வரி (47) திமுக பிரமுகர். அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட உடையாப்பட்டி கிராம ஊராட்சி 14வது வார்டு உறுப்பினராக திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர், உயர்நீதிமன்றத்தில் கடந்த 8ம் தேதி, மாநில தேர்தல் ஆணையம், சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி, சேலம் மாநகர காவல்துறை ஆணையர், அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு எதிராக ஒரு ர
ஒரு சுயேச்சையின் விலை 50 லட்சம்! அதிமுக, திமுக குதிரை பேரம்!!

ஒரு சுயேச்சையின் விலை 50 லட்சம்! அதிமுக, திமுக குதிரை பேரம்!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவிக்கு பெரும்பான்மை கிடைக்காத இடங்களில் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற, அவர்களிடம் ஆளும் அதிமுகவும், திமுகவும் குதிரை பேரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் கடைசியாக 2011ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு 2016ல் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் பல வழக்குகளைக் கடந்து, ஒருவழியாக கடந்த டிசம்பர் 27, 2019 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. அதாவது, 8 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடந்துள்ளது. அதுவும், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள், சென்னை நீங்கலாக, 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது.   இந்த உள்ளாட்சித் தேர்தலில், மாநில அளவில் திமுக அதிக இடங்களை அறுவடை செய்திருக்கிறது. அதேநேரம், எடப்பாடி
சேலம்: உள்ளாட்சி தேர்தலில் 17216 பேர் வேட்புமனு; இன்று பரிசீலனை!

சேலம்: உள்ளாட்சி தேர்தலில் 17216 பேர் வேட்புமனு; இன்று பரிசீலனை!

சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மொத்தம் 17216 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் மீது இன்று (டிச. 17) பரிசீலனை நடக்கிறது. கடைசி நாளான நேற்று ஒரே நாளில், 8219 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.   தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 30ம் தேதியும் நடக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை நீங்கலாக எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் இத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, கடந்த 9ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, கடைசி நாளான நேற்று (டிசம்பர் 16, 2019) மட்டும் 29 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 163 பேரும், 20 ஒன்றியங்களில் உள்ள 288 ஊராட