Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: திரை விமர்சனம்

திரவுபதி – திரை விமர்சனம்! சரக்கு முறுக்கு பசங்க மட்டும்தான் நாடகக்காதல் செய்கிறார்களா?

திரவுபதி – திரை விமர்சனம்! சரக்கு முறுக்கு பசங்க மட்டும்தான் நாடகக்காதல் செய்கிறார்களா?

சினிமா, சேலம், முக்கிய செய்திகள்
கிராமத்தில் செல்வாக்குடன் விளங்கும் ஒரு குடும்பத்தை பழிவாங்குவதற்காக அந்த வீட்டுப் பெண்ணுக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடந்ததாக போலியாக பதிவுச்சான்றிதழ் பெற்று சமூக வலைத்தளங்களில் உலாவவிடுகிறது ஒரு கும்பல். அதைப்பார்த்த பெண்ணின் தந்தை, அவமானம் தாளாமல் தற்கொலை செய்து கொள்கிறார். அந்தப்பெண்ணையும் அவருடைய அக்காவையும் அந்த கும்பல் கொன்றுவிட்டு, கொலைப்பழியை பெண்ணின் அக்காள் கணவர் மீது போட்டு விடுகிறது. கொலை முயற்சியில் தப்பிக்கும் அப்பெண்ணின் அக்கா திரவுபதி, தன் கணவர் மூலம் கொலைகாரர்களை பழி வாங்கினாரா? இல்லையா? என்பதுதான் திரவுபதி படத்தின் மையக்கதை.   'சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற மகாகவி பாரதியின் வரிகளை மறுதலித்து, 'சாதிகள் உள்ளதடி பாப்பா' என்று திரவுபதி படத்தின் டிரைலரில் குறிப்பிட்டு இருந்தார் இயக்குநர் மோகன். டிரைலரில் வந்த சில வசனங்கள
‘அரங்கேற்றம்’ லலிதாக்கள் இன்னும் இருக்கிறார்கள்! – திரை விமர்சனம்

‘அரங்கேற்றம்’ லலிதாக்கள் இன்னும் இருக்கிறார்கள்! – திரை விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அடுத்தடுத்து 'வதவத' என்று பிள்ளைக்குட்டிகளை பெற்றுப் போட்டதைத் தவிர வேறு எந்த சாதனையும் செய்யாத தந்தை, கஞ்சிக்கே வக்கற்ற நிலையிலும் மனசு முழுக்க இலட்சம் கனவுகளை சுமந்து கொண்டு வாழும் தங்கைகள், தம்பிகளுக்காக தன்னையே தியாகம் செய்யும் லலிதாவின் வாழ்வில் ஏற்பட்ட துயரங்களையும், ஏமாற்றங்களையும் பட்டவர்த்தனமாக முகத்தில் அறைந்தாற்போல் பேசுகிறது அரங்கேற்றம்.   என்னதான் நாம் ஸ்விக்கி, ஸோமாட்டோ நாகரீகத்திற்குள் நுழைந்துவிட்டாலும், மூன்றாம் நபரின் அந்தரங்க செயல்பாடுகளை கூச்சமே இல்லாமல் முதுகுக்குப் பின்னால் கிசுகிசுப்பது இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதனாலேயே நாம் அந்த நாலு பேரைக் கண்டு சில வேளைகளில் அஞ்சவும் வேண்டியதிருக்கிறது. கதைதான் என்றாலும், 46 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண்ணை மையமாக வைத்து, காலவெளியை உடைத்துக்கொண்டு முழு கதையையும் திரையில் விவரிக்க மு
உறியடி 2 – திரை விமர்சனம்! ‘சாமானியனின் அரசியல் பங்கெடுப்பை பேசுகிறது’

உறியடி 2 – திரை விமர்சனம்! ‘சாமானியனின் அரசியல் பங்கெடுப்பை பேசுகிறது’

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்தின் லாப வெறியால் மலைவாழ் மக்கள் சூறையாடப்படுவதையும், பெருமுதலாளியிடம் லாபம் அடையும் ஆளுங்கட்சி எம்பி, சாதிக்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல்வாதிகளையும் நையப்புடைக்கும் படமாக ஏப்ரல் 5ல் வெளிவந்திருக்கிறது, உறியடி 2. மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி ஒரு படம் தமிழில் வெளிவந்திருப்பதை நோக்கும்போது, கருத்துச்சுதந்திரம் இன்னும் இந்த தேசத்தில் உயிர்ப்புடன் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அல்லது சமகால அரசியல் பிரச்னைகளையும், அரசியல்வாதிகளையும் துகிலுறியும் காட்சிகள் இருப்பதை அறியாமல் படத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு விட்டதோ என்றும் கருத வேண்டியதிருக்கிறது.   நடிகர்கள்:   விஜய்குமார் விஸ்மயா சுதாகர் மற்றும் பலர்   ஒளிப்பதிவு: பிரவீண்குமார் இசை: கோவிந்த் வசந்தா எடிட்டிங்: லினு.எம் தயாரிப்ப
‘மெர்சல்’ – படம் எப்படி இருக்கு?

‘மெர்சல்’ – படம் எப்படி இருக்கு?

இந்தியா, சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இன்று (அக். 18, 2017) 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது 'மெர்சல்'. நடிப்பு: விஜய், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா, 'யோகி' பாபு. இசை: ஏ.ஆர்.ரஹ்மான்; ஒளிப்பதிவு: விஷ்ணு; தயாரிப்பு; ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ்; இயக்கம்: அட்லீ. படத்தின் துவக்கத்தில் சென்னையில் அடையாறு, திருவல்லிக்கேணி, போட் கிளப் ஆகிய இடங்களில் மருத்துவத்துறை தொடர்பான ஆட்கள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் கடத்திக் கொல்லப்படுகின்றனர். இதற்கிடைய பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லும் விஜய், அங்கு ஒரு மேஜிக் நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த அரங்கிலும் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இதைத் தொடர்ந்து சத்யராஜ், இந்த கொலைகளுக்குக் காரணம் விஜய்தான் என்ற சந்தேகத்தின்பேரில் அவரை கைது செய்கிறார். உண்மையில் இ
‘கருப்பன்’ – திரை விமர்சனம்!

‘கருப்பன்’ – திரை விமர்சனம்!

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆயுதபூஜை விடுமுறையைக் குறிவைத்து (செப். 29) வெளி வந்திருக்கும் படம் 'கருப்பன்'. நடிகர்கள்: விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா, பசுபதி, கிஷோர், சரத் லோகித்ஷ்வா, சிங்கம் புலி, ரேணுகா, காவேரி மற்றும் பலர். இயக்கம்: ஆர்.பன்னீர்செல்வம். இசை: டி.இமான். ஒளிப்பதிவு: சக்திவேல். தயாரிப்பு: ஏ.எம்.ரத்னம். 'ரேணிகுண்டா' படத்தின் மூலம் இளம் குற்றவாளிகளின் கதையைச் சொல்லி, கவனம் ஈர்த்த இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விஜய் சேதுபதியின் தோளில் சவாரி செய்துள்ள படம்தான் 'கருப்பன்'. கிராமத்து மாடுபிடி வீரனின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள்தான் இந்தப் படத்தின் ஒரு வரி கதை. ஆனால், தனக்குக் கிடைக்க வேண்டிய பெண், வேறு ஒருவருக்கு கிடைத்து விட்ட ஆற்றாமையில், ஓர் இளைஞன் என்னவெல்லாம் செய்கிறான் என்ற கோணத்தில் திரைக்கதை நகர்கிறது. அப்படி தான் ஆசைப்பட்ட கதாநாயகியை பறிகொடுத்த வில்லன்தா