Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: தணிக்கை சான்றிதழ்

சேலத்தில் வன்னியர்களை ஒடுக்கும் எடப்பாடி!; ‘சர்கார்’ வேட்பாளர் தாக்கு!!

சேலத்தில் வன்னியர்களை ஒடுக்கும் எடப்பாடி!; ‘சர்கார்’ வேட்பாளர் தாக்கு!!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சர்கார் படத்தில் தேனி தொகுதி சுயேட்சை வேட்பாளராக நடித்துள்ள வேங்கை அய்யனார், சேலம் மாவட்டத்தில் வன்னியர்களை ஒடுக்கும் வேலைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளதாக கூறினார்.   உதவிய வரலட்சுமி:   சேலம் மாவட்டம் மல்லூர் பேரூராட்சியில் சுயேட்சையாக போட்டியிட்டு, தொடர்ந்து நான்கு முறை தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிகளில் வகித்திருப்பவர் வேங்கை அய்யனார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த வேங்காம்பட்டி பூவாயம்மன் கோயில் திருவிழாவிற்கு நடிகை வரலட்சுமி சரத்குமாரை சிறப்பு அழைப்பாளராக அழைத்து வந்தார். அப்போது ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் வரலட்சுமியின் பரிந்துரையின்பேரில், அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் நடிக்க இயக்குநர் முருகதாஸிடம் வாய்ப்புப் பெற்றுத்தந்தார். அந்தப்படத்தில், 210 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களை விஜய் களமிறக்கும் காட்சி இடம் பெற்றுள்
ஜோதிகாவின் ‘தேவரடியாள்’ தடை செய்யப்பட்ட சொல்லா?

ஜோதிகாவின் ‘தேவரடியாள்’ தடை செய்யப்பட்ட சொல்லா?

சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
பாலா இயக்கத்தில் வெளியாக உள்ள 'நாச்சியார்' படத்தில் ஜோதிகா பேசும் ஒரு சொல், ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வசனத்தை 'மியூட்' செய்ய வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 'பரதேசி', 'அவன் இவன்', 'தாரை தப்பட்டை' என்று தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் இயக்குநர் பாலா அடுத்து ஜோதிகாவை முதன்மை பாத்திரமாக வைத்து, 'நாச்சியார்' என்ற படத்தை இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமாரும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா - பாலாவின் வழக்கமான கூட்டணி இதிலும் தொடர்கிறது. நாச்சியார் படத்தில் ஜோதிகா, போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசரை, நடிகர் சூர்யா நேற்று முன்தினம் (நவம்பர் 15, 2017) வெளியிட்டார். ரசிகர்களிடம் பெரிய அளவில் இந்த டீசர் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரம், டீசரின் இறுதியில் ஜோதிகா பேசும் ஒரு வசனம்தான் இப்போது பெரும் விமர
‘மெர்சல்’ பட சிக்கல் தீர்ந்தது!

‘மெர்சல்’ பட சிக்கல் தீர்ந்தது!

சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதில் நிலவி வந்த சிக்கல் இன்று (அக். 16, 2017) சுமூகமாக முடிவுக்கு வந்ததை அடுத்து, திட்டமிட்டபடி தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக, சுமார் ரூ.135 கோடி பொருட்செலவில் தயாராகி இருக்கிறது 'மெர்சல்'. இதில் நடிகர் விஜய் முதன்முதலாக மூன்று வேடத்தில் நடித்திருக்கிறார். அதில், மேஜிக் கலைஞராக ஒரு வேடம் ஏற்று நடித்திருக்கிறார். இதற்காக அவர் தொழில்முறை மேஜிக் நிபுணர்களிடம் பயிற்சி பெற்று, படத்திலும் அவரே சுயமாக சில மேஜிக்குகளை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தீபாவளியன்று (அக். 18) உலகம் முழுவதும் 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வந்த நிலையில், படத்தில் சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்த விலங்குகள் ந
நடிகர் விஜய் முதல்வருடன் திடீர் சந்திப்பு ஏன்?

நடிகர் விஜய் முதல்வருடன் திடீர் சந்திப்பு ஏன்?

சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் அவருடைய இல்லத்தில், நடிகர் விஜய் இன்று (அக். 15, 2017) திடீரென்று சந்தித்தார். விஜய் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள 'மெர்சல்' படம், வரும் 18ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப்படத்திற்கு யு / ஏ தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது. இருப்பினும், விலங்குகள் நலவாரியத்தின் தடையில்லா சான்றிதழ் கிடைப்பதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது. எப்படியும் படத்தை தீபாவளியன்று வெளிக்கொண்டு வந்தால்தான் எதிர்பார்த்த வசூலைப் பெற முடியும். ஒருபுறம், நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தரப்பிலிருந்து, அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கக்கூடாது என்றும், அவ்வாறு வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காட்டமாகவே அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு, தியேட்டர் அதிபர்கள் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெ