Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கேரளா

சதம் அடித்த மேட்டூர் அணை நீர்மட்டம்!; விவசாயிகள் மகிழ்ச்சி

சதம் அடித்த மேட்டூர் அணை நீர்மட்டம்!; விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜூலை 17, 2018) இரவு 100 அடியை எட்டியுள்ளது. விவசாயப் பயன்பாட்டுக்காக வரும் 19ம் தேதி அணை திறக்கப்பட உள்ள நிலையில், டெல்டா விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியிலும் கடந்த பத்து நாள்¢களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. குறிப்பாக, கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன.   பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து நேற்று வினாடிக்கு ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 212 கன அடி தண்ணீர் காவ
கேணி – சினிமா விமர்சனம்; ”தண்ணீர் அரசியலை பேசுகிறது”

கேணி – சினிமா விமர்சனம்; ”தண்ணீர் அரசியலை பேசுகிறது”

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தண்ணீர் மற்றும் தண்ணீரைச் சுற்றிலும் பின்னப்பட்டிருக்கும் அரசியல் சூழ்ச்சிகளைப் பற்றியும், சமகால அரசியல்வாதிகளின் உள்மனப்போக்கையும் தோலுரிக்கும் படமாக தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இன்று (பிப்ரவரி 23, 2018) வெளியாகி இருக்கிறது கேணி. கதைக்கரு: தமிழ்நாடு - கேரளா ஆகிய இரு மாநில எல்லைகளிலும் சரிபாதியாக அமைந்திருக்கும் ஒரு வற்றாத கிணறும், அந்தக் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் உரிமைக்காக போராடும் தமிழக எல்லையோர கிராம மக்களின் போராட்டங்களும்தான் படத்தின் ஒரு வரி கதை. நடிகர்கள்: ஜெயபிரதா, பார்த்திபன், நாசர், ரேவதி, அனு ஹாசன், ரேகா, பார்வதி நம்பியார், 'தலைவாசல்' விஜய், எம்.எஸ். பாஸ்கர், பசுபதி, சாம்ஸ், 'பிளாக்' பாண்டி மற்றும் பலர். தொழில்நுட்பக்குழு: ஒளிப்பதிவு: நவ்ஷத் செரீப்; இசை: ஜெயச்சந்திரன்; பின்னணி இசை: சாம் சி.எஸ்.; எடிட்டிங்: ராஜா முஹமது; தயாரிப்பு: ஃபிராகிரன்ட
21 மில்லியன் ‘தேவையற்ற குழந்தைகள்’!; பெண்களை வெறுக்கும் இந்திய சமூகம்

21 மில்லியன் ‘தேவையற்ற குழந்தைகள்’!; பெண்களை வெறுக்கும் இந்திய சமூகம்

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
இந்தியாவில், 21ம் நூற்றாண்டிலும் ஆண் குழந்தைகளை விரும்பும் சமூகமே அதிகளவில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அண்மையில் நடந்த ஓர் ஆய்வு, இந்தியாவில் 21 மில்லியன் 'தேவையற்ற பெண் குழந்தைகள்' இருப்பதாக கூறுகிறது. உலகளவில் பாலின சமத்துவத்தில் ஐஸ்லாந்து நாடு முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 1.1.2018 முதல் அந்த நாட்டில், பெண் ஊழியர்களைக் காட்டிலும் ஆண்களுக்கு அதிக ஊதியம் கொடுப்பதைக்கூட தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்துள்ளது. அதுபோன்ற உயரிய சிந்தனைகளை எட்டிப்பிடிக்க, இந்தியாவிற்கு இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும் ஆச்சர்யம் இல்லை. அண்மையில் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவு அப்படித்தான் சொல்ல வைக்கிறது. ஆனால், நாம்தான் மூச்சுக்கு முன்னூறு முறை பூமி முதல் நதிகள் வரை பெண்களின் பெயரால் அழைப்போம். அதுவே, ஆகப்பெரிய நகைமுரண். பாலின சமத்துவம் குறித்து நாம் என்னதான் டிவி, பத்திரி
ரஜினி நாய் கூட எம்எல்ஏ ஆகிவிடும்!: அன்புமணி ராமதாஸ் தாக்கு

ரஜினி நாய் கூட எம்எல்ஏ ஆகிவிடும்!: அன்புமணி ராமதாஸ் தாக்கு

அரசியல், அரியலூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தின் பால்தாக்கரே போல செயல்பட்டு வரும் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், அவருடைய மகன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சினிமாக்காரர்கள் மீதும் குறிப்பாக ரஜினிகாந்த் மீதும் கடும் விமர்சனங்களை முன்னெடுத்து வருகின்றனர். ரஜினியின் தயாரிப்பில் பாபா படம் வெளியானபோது, ரஜினியின் மீதான பாமக பாய்ச்சல் உச்சக்கட்டத்தில் இருந்தது. பல திரைமறைவு சமரசங்களுக்குப் பிறகு, பாபா படப்பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆனாலும், ஒட்டுமொத்தமாகவே சினிமாக்காரர்கள் மீதும், அந்த துறை மீதான தாக்குதல் போக்கையும் பாமக இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கருணாநிதியின் முதுமை, ஜெயலலிதா மறைவு காரணமாக தமிழக அரசியலில் இயல்பாகவே ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. மக்களின் மனம் கவர்ந்த தலைவர்கள் இல்லாத நிலையில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தங்களுடைய அரசியல் ஆசைகளை வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். கடந்த மே மாதம்
தமிழரின் அறுவை சிகிச்சைக்கு 11 லட்சம் வசூலித்து கொடுத்த கேரள மக்கள்; நெகிழ வைக்கும் சம்பவம்

தமிழரின் அறுவை சிகிச்சைக்கு 11 லட்சம் வசூலித்து கொடுத்த கேரள மக்கள்; நெகிழ வைக்கும் சம்பவம்

இந்தியா, தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
விபத்தில் சிக்கிய தமிழருக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் உயிரிழந்தபோது மனிதம் செத்துவிட்டதாக கேரள மக்கள் மீது விமர்சனம் எழுந்த நிலையில், அதே கேரள மக்கள் இன்னொரு தமிழரின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ரூ.11 லட்சம் வசூலித்துக் கொடுத்து மனிதத்தை மீட்டெடுத்துள்ளனர். நெகிழ்ச்சியான நிகழ்வின் பின்னணி இதுதான்... மதுரையைச் சேர்ந்தவர் ஜெயன். இவருடைய மனைவி மாரியம்மாள். குடும்பத்துடன் கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் சிங்காவனம் என்ற கிராமத்தில் வசிக்கிறார். அவர் கேரளாவில் குடியேறி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஜெயன், இஸ்திரி (அயனிங்) கடை வைத்திருக்கிறார். சிங்காவனம் மற்றும் பல்லம் கிராம மக்கள் தங்கள் உடைகளை ஜெயனிடம் கொடுத்துதான் இஸ்திரி செய்து வருகின்றனர். பெரும்பாலும் ஜெயனே, வீடு வீடாகச் சென்று துணிகளை பெற்றுக்கொண்டு வந்து இஸ்திரி செய்து தருவதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் அவர் அந்த
ஆபரேஷன் குபேரன்களும் கந்து வட்டி அரக்கன்களும்!

ஆபரேஷன் குபேரன்களும் கந்து வட்டி அரக்கன்களும்!

அரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்
கந்துவட்டிக்காரர்களை ஒடுக்க 'ஆபரேஷன் குபேரா' (Operation Kubera) நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், கண்டுகொள்ளாத காவல்துறையால் கந்து வட்டி அரக்கர்களுக்கு ஏழைகள் இரையாவது தொடர்ந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கந்து வட்டி கொடுமையால் கூலித்தொழிலாளியான இசக்கிமுத்து நேற்று (அக். 23, 2017) குடும்பத்துடன் தீக்குளித்த நிகழ்வு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிப் போட்டது. இசக்கிமுத்துவின் மனைவி, இரு குழந்தைககளும் தீக்கு இரையாகினர். இசக்கிமுத்து, தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இனியும் இசக்கிமுத்துவின் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவலம் வேறு யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. இதில் யாருக்கும் இரண்டாம் கருத்து இருக்க முடியாது. ஆனால், கந்துவட்டிக்காரர்களின் கொடுமை மட்டுமேதான் இசக்கிமுத்து, இத்தகைய முடிவெடுக்கக் காரணம் என்று சொல்லிவிட முடியாது. இந்த சமூகத்தி