Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: குறுந்தொகை

பிரிந்தால் அக்கணமே செத்திடணும்! என்ன சொன்னாள் தலைவி?

பிரிந்தால் அக்கணமே செத்திடணும்! என்ன சொன்னாள் தலைவி?

இலக்கியம், சிறப்பு கட்டுரைகள், தகவல், முக்கிய செய்திகள்
எத்தொகை கொடுத்தாலும் ஈடாகாது நற்குறுந்தொகைக்கு. குறுந்தொகையானாலும், நெடுந்தொகையாக சிலாகித்துப் பேசிக்கொண்டே இருக்கலாம். 'இலக்கியம் பேசுவோம்' பகுதியில் குறுந்தொகையில் இருந்து இன்னொரு பாடலோடு வந்திருக்கிறேன். உலகம் முழுவதும் எத்தனை முகங்கள்... எத்தனை மொழிகள் இருந்தாலும் ஒரு சொல் கேட்ட மாத்திரத்திலேயே நமக்குள் ஒரு கணம், பேருவகையை தந்து விட்டுப் போகும். அதுதான், காதல்.   அதனால்தான் மகாகவி பாரதி, 'ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே' என அறைகூவல் விடுத்தான். காதலினால் கலவி உண்டாம்; காதலினால் கவலைகள் போம்' என்றான். உள்ளத்தால் கூடிய காதலின் உச்சக்கட்ட அக்னாலெட்ஜ்மென்ட்தான், உடல் தீண்டல்.   உள்ளத்தால் இணைந்த பிறகு, உடல்தீண்டல் நிகழ்கிறது. அங்கே, ஈருடல் ஓருயிராகிறது. தலைவனும், தலைவியும் கட்டி அணைத்துக் கொண்டால் அங்கே காற்றுகூட இடையறுத்துச் செல்லக்கூடாதாம். அந்தளவு
நீயும் நானும் செம்மண்ணில் கலந்த நீர் போல…!

நீயும் நானும் செம்மண்ணில் கலந்த நீர் போல…!

இலக்கியம், முக்கிய செய்திகள்
காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் மானுடப் பிறவிக்கு மட்டுமேயானது. காதலில் விழுந்தோர்க்கு வெற்றி, தோல்வி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் காதல் மட்டும் தோற்பதில்லை. இப்பிறவியில் காதல் அனுபவங்கள் இல்லாதவர்கள், எத்தகைய சுகபோகங்களை பெற்றவராக இருந்தாலும் கூட, ஒரு வகையில் குறை உடையவர்களாகவே கருதுகிறேன். காதலே தலைமை இன்பம் என்கிறான் பாரதி. காதலிப்போருக்கு மரணம் பொய்யாகும்; கவலைகள் போகும்; ஆதலினால் காதல் செய்வீர், உலகத்தீரே! என்று அறைகூவல் விடுக்கின்றான்.   மார்க்ஸ் - ஜென்னியின் காதல் பேசப்பட்ட அளவுக்கு, செல்லம்மா மீது பாரதி கொண்ட அளப்பரிய காதல் பேசப்படவில்லை.   நாமும் இப்போது பாரதியைப் பற்றி பேச வரவில்லை. 'இலக்கியம் பேசுவோம்' பகுதியில் மீண்டும் சங்க இலக்கியமான குறுந்தொகையில் இருந்து இன்னொரு காதல் பாடலைப் பற்றி பேசுவோ
அல்லி மலர்ந்தது நிலவு வந்ததாலா? அவள் வந்ததாலா?

அல்லி மலர்ந்தது நிலவு வந்ததாலா? அவள் வந்ததாலா?

இலக்கியம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
'இலக்கியம் பேசுவோம்' பகுதியில் இன்று, மற்றுமொரு குறுந்தொகை பாடலைப் பற்றி பார்க்கலாம். ஒரு கவிஞன் என்பவன், எப்போதும் சொற்களால் சரம் தொடுப்பவன். அவன் யாவற்றையும் அகக்கண்களால் காட்சி மொழியாகப் பார்த்து, ரசித்து, முழுமையாக உள்வாங்கிக் கொண்டவன். அதன்பிறகே, கவிஞனிடம் இருந்து சொற்கள் அருவியாக வந்து விழுகின்றன. கவிஞனின் சொற்கள் என்பது சூழலுக்கு ஏற்ப, கணைகளாகவும் சீறும்; பூமாலையாகவும் வந்து விழும். நாம் முன்பே ஒரு தொடரில் குறிப்பிட்டதுபோல், சங்க இலக்கியங்களில் பெண்ணை... பெண்களின் முகத்தை, கூந்தலை, கொங்கைகளை பாடாத புலவர்களே இல்லை. அப்படி பாடாதவன் புலவனே இல்லை. சங்ககாலம் தொட்டே பெண்ணை மலரோடும், மதியோடும் ஒப்புநோக்கி வந்திருக்கிறார்கள். இதில், இப்போதுள்ள 'பொயட்டு'களும் விதிவிலக்கு அல்ல.   புகழேந்தி புலவர், குறுந்தொகையின் கலித்தொடர் காண்டத்தில்,  
கருங்கால் கொக்கும்… முலை குளமும்!

கருங்கால் கொக்கும்… முலை குளமும்!

இலக்கியம், முக்கிய செய்திகள்
  சங்க இலக்கியங்களில் பெண்களின் அங்கங்கள் குறித்தான வர்ணனைகள் உச்சம் தொட்டாலும், அவை ரசிக்கத்தக்க வகையிலேயே இருந்திருக்கின்றன. முகச்சுளிப்பை ஏற்படுத்துவதில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், குறுந்தொகையில் உவமைகள் வெகு இயல்பாக பொருந்தி வந்திருக்கும். எல்லா காலத்திலும் ரசிக்கத்தக்க வகையில் பாடல்கள் அமைந்திருப்பதும் குறுந்தொகையின் தனித்த அடையாளம்.   எட்டுத்தொகையுள் செறிவும், இனிமையும் மிக்கது, குறுந்தொகை என்று எந்த அவையிலும் நாம் துணிச்சலாக கட்டுத்தொகை கூட வைக்க முடியும்.   தமிழ் ஆர்வலர்களிடம் உரையாடுகையில் அடிக்கடி இப்படிச் சொல்வேன்... ''குறுந்தொகையில் பாடல்களை எழுதிய புலவர்கள், பாடு பொருள்களுக்காக மெனக்கெட்டிருப்பார்களே தவிர, பொருள் (பரிசில்) தேடி அலைந்திருக்க மாட்டார்கள். ஆனால், இப்போதுள்ள பேச்சாளர்கள் சிலர