Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கழிப்பறை

தட்டச்சு தெரியாவிட்டால் டிஸ்மிஸ்! துக்ளக் தர்பார் நடத்தும் பெரியார் பல்கலை.!! #PeriyarUniversity

தட்டச்சு தெரியாவிட்டால் டிஸ்மிஸ்! துக்ளக் தர்பார் நடத்தும் பெரியார் பல்கலை.!! #PeriyarUniversity

கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  சேலம் பெரியார் பல்கலையில் அனைத்து தொகுப்பூதிய, தினக்கூலி பணியாளர்களும் தட்டச்சு (டைப்ரைட்டிங்) தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்று திடீரென்று உத்தரவிடப்பட்டு உள்ளது, பல்கலை வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் பெரியார் பல்கலையின் கீழ் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 101 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், உறுப்புக்கல்லூரிகள் இணைவு பெற்று, செயல்பட்டு வருகின்றன. பல்கலை மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் தேர்வுகளுக்குத் தேவையான பணிகளை மேற்கொள்வது, பல்கலை வரவு, செலவு கணக்குகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளுக்காக தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி ஒப்பந்த அடிப்படையில் 478 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 282 பணியாளர்கள் தொகுப்பூதியத்திலும், மற்றவர்கள் தினக்கூலி ஒப்பந்தத்தின் பேரிலும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்கள
அடிமேல் அடி வாங்கும் ஆசிரியர்கள்!; ‘கக்கூஸ் போவதையும் கணக்கெடுக்கணுமாம்’

அடிமேல் அடி வாங்கும் ஆசிரியர்கள்!; ‘கக்கூஸ் போவதையும் கணக்கெடுக்கணுமாம்’

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-சிறப்பு கட்டுரை-   கம்ப்யூட்டர், டேப்ளட், டிரைமெஸ்டர், தொடர் மதிப்பீட்டு முறை, ஆங்கில வழி என அரசு தொடக்கப்பள்ளிகள் ஒருபுறம் நவீனமாகி வந்தாலும், சமூகத்தைக் கட்டமைக்கும் ஆசிரியர்களை அரசாங்கம் கொத்தடிமைகளைப் போல நடத்தும் போக்கு, அவர்களை மனதளவில் சோர்வடையச் செய்துள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருமுறை ஊதிய உயர்வுக்காக போராடும்போதும் அவர்களை கேலி பேசும் பட்டியலில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். அந்த எண்ணத்தில் எனக்கு இப்போதும் பெரிய மாற்றுக்கருத்து இல்லை. உழைக்காமலேயே ஊதியம் பெறும் வர்க்கமாக ஆசிரியர்களை சித்தரித்திருப்பதில் அரசுக்கே பெரும் பங்கு உண்டு என்றுதான் சொல்வேன். கைநிறைய சம்பளத்தை அள்ளிக்கொடுத்து விட்டால் போதும். அவர்களை எப்படி வேண்டுமானாலும் ஆட்டி வைக்கலாம் என்ற மனோபாவத்தில் அரசாங்கம் இருப்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மத்தளத்துக்கு இரண்ட
கக்கூஸ் போறதுக்கும் ஜிஎஸ்டி வரியா?;  சமூகவலைத்தளங்களில் வைரல்

கக்கூஸ் போறதுக்கும் ஜிஎஸ்டி வரியா?; சமூகவலைத்தளங்களில் வைரல்

அரசியல், இந்தியா, ஈரோடு, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெருந்துறையில் உள்ள ஓர் உணவகத்தில், கழிப்பறையை பயன்படுத்திய வாடிக்கையாளரிடம் பத்து ரூபாய் கட்டணமும், அதற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், பார்சல் கட்டணமும் வசூலித்துள்ள நிகழ்வு, சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்துவதற்காக பெரும்பாலான உணவகங்களில் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால், ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு, சில உணவகங்கள் கழிப்பறை பயன்பாட்டுக்கும் தனியாக கட்டணம் வசூலிக்கின்றன. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ருக்குமணி அம்மாள் ஹோட்டல் என்ற பெயரில் பிரபலமான ஓர் உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகம், ஜூனியர் குப்பண்ணா உணவக உரிமையாளர்களுக்குச் சொந்தமானது. இந்த உணவகத்திற்கு வந்த ஒரு வாடிக்கையாளர் அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்தியுள்ளார். அதற்காக அந்த உணவக நிர்வாகம், 10 ரூபாய் கட்டணம் வசூலித்ததோடு, அதற்கு மாநில ஜிஎஸ்டி,
தூய்மை இந்தியா ‘மணம் வீசும்’ மோடியின் சொந்த கிராமம்!

தூய்மை இந்தியா ‘மணம் வீசும்’ மோடியின் சொந்த கிராமம்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பளபளவென்று கண்ணாடி போல மின்னும் சாலைகள், கைகளால் துடைத்துவிட்டு சாலையிலேயே சோறள்ளிப் போட்டு சாப்பிடலாம்; எங்கு பார்த்தாலும் பூத்துக் குலுங்கும் மலர்ச்சோலை; மூடப்பட்ட சாக்கடைக் கால்வாய்; வீடுகள்தோறும் கழிவறைகள் என்றெல்லாம் பாராட்டலாம்தான். ஆனால், நிலைமை அப்படி இல்லையே! தூய்மை இந்தியா பிரச்சாரத்தில் முழுவீச்சில் கவனம் செலுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி, தான் பிறந்த ஊரை மட்டும் தரம் உயர்த்தாமலா இருப்பார்? என்று எல்லோருமே சாதாரணமாக கேட்டுவிட்டு நகர்ந்து விடலாம். ஆனால், களநிலவரம் அப்படி இல்லை என்கிறது. குஜராத் மாநிலம் மெக்சனா மாவட்டத்தில் இருக்கும் வாட்நகர் நகராட்சியில்தான், பிரதமர் நரேந்திர மோடி பிறந்தார். அவருடைய வாழ்வின் தொடக்கப் பகுதி அங்குதான் கழிந்தது. பிரதமரின் சொந்த ஊர் என்பதால், அதுவும் டீ விற்ற ஒருவர் உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தின் சக்கரவர்த்தியாக ஆகியிருக்கிறார் என்பத