
சேலம் திமுகவில் சரிந்தது வீரபாண்டியார் குடும்ப சாம்ராஜ்யம்! ராஜா நீக்கத்தின் பின்னணி என்ன?
''கட்சியின் வளர்ச்சிக்காக
நான் சர்வாதிகாரியாகவும்
மாறுவேன். தவறு செய்தவர்கள்
தங்களை திருத்திக் கொள்ள
வேண்டும். இல்லாவிட்டால்
திருத்தப்படுவார்கள்,'' என்று
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த
கட்சியின் பொதுக்குழுவில் கொஞ்சம்
காட்டமாகவே சொன்னார். கலைஞர்
பாணியிலான அரசியலில் இருந்து
சற்றே விலகி, ஜெ., மாடல்
அரசியலுக்கு தயாராகி விட்டார்
என்பதை, அப்போதே
உடன்பிறப்புகள்
உணர்ந்திருப்பார்கள்.
பொதுக்குழுவில் கர்ஜித்தது,
இப்போது அடுத்தடுத்து நடந்து
வரும் களையெடுப்பு நடவடிக்கைகள்
கழக கண்மணிகளை கொஞ்சம்
அசைத்துப் பார்த்திருக்கிறது. ஊரக
உள்ளாட்சித் தேர்தலில், ஒவ்வொரு
மாவட்டத்திலும் உள்குத்து
வேலைகளில் ஈடுபட்ட கட்சி
நிர்வாகிகள் கட்டம் கட்டப்பட்டு
வருகின்றனர்.
முதல்கட்டமாக,
சேலம் மாவட்டம் ஏற்காடு
ஒன்றிய செயலாளர் ஏ.டி.பாலுவை
கடந்த ...