Wednesday, July 22மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: பிரிவாற்றாமை

பிரிந்தால் அக்கணமே செத்திடணும்! என்ன சொன்னாள் தலைவி?

பிரிந்தால் அக்கணமே செத்திடணும்! என்ன சொன்னாள் தலைவி?

இலக்கியம், சிறப்பு கட்டுரைகள், தகவல், முக்கிய செய்திகள்
எத்தொகை கொடுத்தாலும் ஈடாகாது நற்குறுந்தொகைக்கு. குறுந்தொகையானாலும், நெடுந்தொகையாக சிலாகித்துப் பேசிக்கொண்டே இருக்கலாம். 'இலக்கியம் பேசுவோம்' பகுதியில் குறுந்தொகையில் இருந்து இன்னொரு பாடலோடு வந்திருக்கிறேன். உலகம் முழுவதும் எத்தனை முகங்கள்... எத்தனை மொழிகள் இருந்தாலும் ஒரு சொல் கேட்ட மாத்திரத்திலேயே நமக்குள் ஒரு கணம், பேருவகையை தந்து விட்டுப் போகும். அதுதான், காதல்.   அதனால்தான் மகாகவி பாரதி, 'ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே' என அறைகூவல் விடுத்தான். காதலினால் கலவி உண்டாம்; காதலினால் கவலைகள் போம்' என்றான். உள்ளத்தால் கூடிய காதலின் உச்சக்கட்ட அக்னாலெட்ஜ்மென்ட்தான், உடல் தீண்டல்.   உள்ளத்தால் இணைந்த பிறகு, உடல்தீண்டல் நிகழ்கிறது. அங்கே, ஈருடல் ஓருயிராகிறது. தலைவனும், தலைவியும் கட்டி அணைத்துக் கொண்டால் அங்கே காற்றுகூட இடையறுத்துச் செல்லக்கூடாதாம். அந்தளவு...
கருங்கால் கொக்கும்… முலைக்குளமும்!

கருங்கால் கொக்கும்… முலைக்குளமும்!

இலக்கியம், முக்கிய செய்திகள்
  சங்க இலக்கியங்களில் பெண்களின் அங்கங்கள் குறித்தான வர்ணனைகள் உச்சம் தொட்டாலும், அவை ரசிக்கத்தக்க வகையிலேயே இருந்திருக்கின்றன. முகச்சுழிப்பை ஏற்படுத்துவதில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், குறுந்தொகையில் உவமைகள் வெகு இயல்பாக பொருந்தி வந்திருக்கும். எல்லா காலத்திலும் ரசிக்கத்தக்க வகையில் பாடல்கள் அமைந்திருப்பதும் குறுந்தொகையின் தனித்த அடையாளம். எட்டுத்தொகையுள் செறிவும்,இனிமையும் மிக்கது,குறுந்தொகை என்று எந்தஅவையிலும் நாம் துணிச்சலாககட்டுத்தொகை கூடவைக்க முடியும். தமிழ் ஆர்வலர்களிடம்உரையாடுகையில் அடிக்கடிஇப்படிச் சொல்வேன்...''குறுந்தொகையில் பாடல்களைஎழுதிய புலவர்கள்,பாடு பொருள்களுக்காகமெனக்கெட்டிருப்பார்களேதவிர, பொருள் (பரிசில்)தேடி அலைந்திருக்கமாட்டார்கள். ஆனால்,இப்போதுள்ள பேச்சாளர்கள்சிலர், குறுந்தொகையில்வெறும் நான்கைந்துபாடல்களை மட்டுமேபடித்துவிட்டு, பெருந்தொகைவாங்குகிறார்கள்,'' எ...