Thursday, October 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: எடப்பாடி பழனிசாமி

ரஜினி அரசியல்; பின்னணியில் பாஜக?

ரஜினி அரசியல்; பின்னணியில் பாஜக?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்குவது குறித்த முடிவின் பின்னணியில் பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் இருப்பதாக பரபரப்பு யூகங்கள் கிளம்பியுள்ளன. ஆன்மிக அரசியல் என்றதுகூட பாஜகவைத்தான் மறைமுகமாக ரஜினிகாந்த் முன்னிலைப்படுத்துகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24, 2017) ஆர்.கே. நகர் தேர்தல் முடிவு மூலம் டிடிவி தினகரன்தான் அன்றைய நாளை பரபரப்பில் வைத்திருந்தார். இன்றைய ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 31, 2017) நடிகர் ரஜினிகாந்துக்கானதாக ஆகியிருக்கிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என கடந்த 21 ஆண்டாக நிலவி வந்த எதிர்பார்ப்புக்கு ஒருவழியாக இன்று முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. ''நான் அரசியலுக்கு வருவது உறுதி. ஆன்மிக அரசியல்தான் எனது பாதை. உண்மை, உழைப்பு, உயர்வு அதுதான் என் கொள்கை. கடந்த ஓராண்டாக அரசியல் கெட்டுவிட்டது. இந்த சிஸ்டத்தை...
டிடிவி தினகரன் ஜுரத்தில் ஆட்சியாளர்கள்;  ஆட்சியை கைப்பற்றுவாரா? கலைப்பாரா?

டிடிவி தினகரன் ஜுரத்தில் ஆட்சியாளர்கள்; ஆட்சியை கைப்பற்றுவாரா? கலைப்பாரா?

அரசியல், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
குமரியைப் புரட்டிப்போட்ட ஒகி புயலைக்கூட ஒப்பேற்றிவிட்ட இபிஎஸ் - ஓபிஎஸ் கூட்டணியினர், டிடிவி தினகரனின் எழுச்சியை சமாளிக்க முடியுமா என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர். கட்சி, ஆட்சி அதிகாரம் இரண்டிலும் மன்னார்குடி கும்பலின் சுவடே இருக்கக்கூடாது என்பதுதான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு டெல்லி மேலிடம் இட்ட கட்டளை. குட்டாக இருந்தாலும் துட்டாக இருந்தாலும் வாங்கியே பழக்கப்பட்டவர்கள் இருப்பதை இழக்க விரும்புவார்களா என்ன? அதனால்தான் சமயம் பார்த்து, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை ஓரங்கட்டினர். காலடியிலேயே கிடந்தவர்கள் புதிய எஜமானர்களின் உத்தரவுக்கு அஞ்சி நடப்பதை சற்றும் ஜீரணிக்க இயலாத மன்னார்குடி கும்பல், ஆட்சி அதிகாரத்தில் நேரடியாக களமிறங்குவதுதான் கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வந்தனர். அதன் விளைவாகத்தான், அமலாக்கப...
ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பு

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பு

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 1.84 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 29, 2017) அறிவித்துள்ளார். பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 2 அடி நீள கரும்புத் துண்டு-1, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அந்த பரிசுத்தொகுப்பில் அடங்கும். இதன்மூலம் அரசுக்கு ரூ.210 கோடி கூடுதல் செலவாகும் என்றும், அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் விழாவுக்கு முன்னதாக பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்....
டிடிவி தினகரனை ஆதரித்தது ஏன்?; சுப்ரமணியன்சாமி ‘ராமாயண’ விளக்கம்!

டிடிவி தினகரனை ஆதரித்தது ஏன்?; சுப்ரமணியன்சாமி ‘ராமாயண’ விளக்கம்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சொந்தக் கட்சியான பாஜகவைவிட்டு டிடிவி தினகரனை ஆதரித்து ஏன் என்ற கேள்விக்கு, சுக்ரீவனை ராமர் எதற்காக உதவிக்கு அழைத்துக்கொண்டாரோ அதற்காகத்தான் என நூதனமாக பதில் அளித்துள்ளார். நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவை எதிர்த்து சுயேச்சையாக களம் இறங்கிய டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தவிர திமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இந்த தேர்தலின்போது பாஜகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமி, பாஜகவைக்கூட முன்னிலைப்படுத்தாமல் சுயேட்சை வேட்பாளரான டிடிவி தினகரனை ஆதரித்து ட்விட்டரில் கருத்துகள் வெளியிட்டு வந்தார். தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசுக்கு பிரமதர் நரேந்திரமோடியின் பரிபூரண ஆசிர்வாதம் இருந்து வரும் நிலை...
‘நாறும்’ முதலமைச்சரின் மாநகரம்!; ‘இருட்டை தேடும்’ பெண்கள்!!

‘நாறும்’ முதலமைச்சரின் மாநகரம்!; ‘இருட்டை தேடும்’ பெண்கள்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாநகரத்திலேயே போதிய பொதுக்கழிப்பறை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் ரயில் தண்டவாளம், இருட்டு நேரத்தில் முள் புதரோரங்களில் 'அவசரத்துக்கு ஒதுங்கும்' அவல நிலை நீடிப்பதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்ஐ) புகார் தெரிவித்துள்ளது. சேலம் நகராட்சி, 1994ம் ஆண்டில் மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது. தமிழகத்தின் ஐந்தாவது பெரிய மாநகரமாக இருந்து வருகிறது. ஆனாலும், அதற்குரிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமை பெறவில்லை. தனிநபர் வருவாய் உயர்விலும் மோசமான நிலையில் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, இந்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுக்கும் வகையில், சேலம் மாநகராட்சி நிர்வாகம் தனிநபர் கழிப்பறை திட்டம் குறித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 கோட்டங்களில் 52 கோட்டங்களில் திறந்தவெள...
ஓபிஎஸ்ஸை கழற்றிவிட ஆழம் பார்க்கிறாரா இபிஎஸ்?

ஓபிஎஸ்ஸை கழற்றிவிட ஆழம் பார்க்கிறாரா இபிஎஸ்?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''எனக்குப் பின்னாலும் அதிமுக என்ற இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்கள் நலனுக்காகவே செயல்படும்,'' என்றார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா. இப்படி அவர் சட்டப்பேரவையிலேயே முழங்கினார். எந்த இயக்கம் மக்கள் நலனுக்காக செயல்படும் என்று சொன்னாரோ, அந்த இயக்கம்தான் சில காலம் கூவத்தூர் விடுதியிலும், புதுச்சேரி விடுதியிலும், கல்லறையிலும் முடங்கிக் கிடந்தது. அடுத்த தேர்தல் வரையிலாவது அந்த இயக்கம் உயிர்ப்புடன் இருக்குமா என்பதே கேள்விக்குறியான நிலையில் இருக்கிறது. அதிமுகவை மீட்டெடுக்க ஜெயலலிதா, ஏசு கிறிஸ்து போல மீண்டும் உயிர்த்தெழுந்துதான் வர வேண்டும். அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஜெயலலிதா இருக்கும்வரை அவர் முன்பாக எப்படி கூனிக்குறுகி நின்றார்களோ அதே அடிமை மனோபாவத்தை சசிகலாவிடமும் காட்டி வந்தார்கள். ஆனால், பாஜக என்ற புதிய கூட்டாளி கிடைத்த பின்னர் அவர்களின் போக்கு அடியோடு மாறி...
வெற்றிக் குறியீடு ஆகுமா இரட்டை இலை? : மக்கள் மனநிலை என்ன?

வெற்றிக் குறியீடு ஆகுமா இரட்டை இலை? : மக்கள் மனநிலை என்ன?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழகத்தில், உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் காலம் கடத்துவதன் பின்னணி என்ன என்பதை உலகறியும். ஒருபுறம் இரட்டை இலை சின்னம் முடக்கம்; மற்றொருபுறம், கட்சிக்குள் பிளவு என தடுமாறிக் கொண்டிருக்கும் அதிமுக, உண்மையிலேயே உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லைதான். அதிலும், இரட்டை இலை சின்னம் இல்லாமல் தேர்தலை சந்திப்பது என்பது ஜெயலலிதா அற்ற சூழ்நிலையில் உகந்தது அல்ல. அதனால்தான் பல்வேறு சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டு, உள்ளாட்சித் தேர்தலைக்கூட நடத்தாமல் ஓராண்டுக்கு மேலாக இழுத்தடித்து வருகிறது ஆளுங்கட்சி. இட ஒதுக்கீடு பிரச்னையில் முதன்முதலில் நீதிமன்றம் சென்றவர்கள் யாரோ அவர்களால்தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாமல் உள்ளதாக அதிமுகவினர், திமுகவை பார்த்து சப்பைக்கட்டு வாதம் செய்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் ஒரே அணியாக இணை...
ஓபிஎஸ் – இபிஎஸ் விரிசலை அம்பலமாக்கிய மைத்ரேயன்!

ஓபிஎஸ் – இபிஎஸ் விரிசலை அம்பலமாக்கிய மைத்ரேயன்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஓரணியாக இணைந்தாலும் அவர்களுக்குள் நீறு பூத்த நெருப்பு போல மன க்கசப்புகள் இருந்து வருவதாக உலா வரும் செய்திகளை, அதிமுக எம்பி மைத்ரேயன் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவு மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. கட்சிக்குள் தங்கள் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள, தன்னுடைய விசுவாசியான ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்துவிட்டு, ஊழல் வழக்கில் சிறை சென்றார் சசிகலா. அதிமுகவை பல அணிகளாக உடைத்தது, ஓ.பன்னீர்செல்வத்தை கொம்பு சீவி விட்டது என எல்லாவற்றையும் பாஜக பின்னிருந்து நேர்த்தியது இயக்கியது. இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை ஓரே அணியாக இணைக்கும் வேலைகளிலும் பாஜக முன்னின்று செயல்பட்டது. முன்பு பாஜகவில் இருந்து, இப்போது அதிமுக சார...
முதுகெலும்பற்ற அடிமைகளும் மூளையற்ற பக்தாள்களும்!

முதுகெலும்பற்ற அடிமைகளும் மூளையற்ற பக்தாள்களும்!

அரசியல், கோயம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு நடந்து வரும் ஆளுநரின் ஆய்வுப்பணிகளுக்கு பல்வேறு மட்டத்திலும் கடும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், தமிழக அரசை ஆளுநர் மூலம் நிர்வாகம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாரதியார் பல்கலைக்கழகத்தின பட்டமளிப்பு விழாவிற்காகக் கோயம்புத்தூருக்குச் சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பட்டங்களை வழங்கியதோடு ராஜ்பவனுக்கு திரும்பி இருக்கலாம். என்ன நினைத்தாரோ, திடீரென்று அவர் கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அரசின் நலத்திட்டப்பணிகள் குறித்த ஆய்வு என்ற பெயரில் கோதாவில் குதித்தார். பாஜகவை சும்மாவே தெறிக்கவிடும் எதிர்க்கட்சிகள் விடுவார்களா?. அக்கட்சியை கடும் விமர்சனங்களால் பிராண்டி எடுத்து வருகிறார்கள். 'தமிழகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் ஆளுநர் ஆய்வு செய்கிறார். அதில் ஒன்றும் தவறு இல்லை' என்று பாஜக ...
“ஆபரேஷன் மன்னார்குடி” – ஐடி ரெய்டின் திடுக்கிடும் பின்னணி!

“ஆபரேஷன் மன்னார்குடி” – ஐடி ரெய்டின் திடுக்கிடும் பின்னணி!

அரசியல், இந்தியா, கோயம்பத்தூர், சென்னை, தஞ்சாவூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியா இதுவரை கண்டிராத மிகப்பெரிய வருமானவரி சோதனையை இன்றைய (நவம்பர் 9, 2017) தினம் சந்தித்திருக்கிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, டிடிவி தினகரன் உறவுகளை குறி வைத்து நடத்தப்பட்டுள்ள இந்த சோதனைதான் அனைத்து ஊடகங்களிலும் 'பிக் பிரேக்கிங்' சேதி. சசிகலாவின் நேரடி உறவுகளான நடராஜன், திவாகரன், மகாதேவன், சுந்தரவதனம், டிடிவி தினகரன், விவேக் ஜெயராமன், ஜெயானந்த், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மருத்துவர் வெங்கடேஷ், மருத்துவர் சிவக்குமார் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் பிரதான சோதனைக் களங்களாகின. இவற்றுடன் ஜெயா டிவி, டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழ், ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் மதுபான ஆலை, கிருஷ்ணபிரியாவின் என்ஜிஓ அலுவலகங்களும் தப்பவில்லை. மன்னார்குடி கும்பலின் ஆதரவாளர்களான பெங்களூர் புகழேந்தி, டிஎன்பிஎஸ்சி உறுப்பினரும் வழக்கறிருமான நாமக்கல் செந்தில், கோவை மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி, ஜெயலலிதாவின் உதவி...