Wednesday, October 22மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

உலகம்

நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா: 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா: 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
முதல் ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் இரண்டாவது போட்டியில் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தை பந்தாடி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டி இன்று (அக். 25, 2017) மகாராஷ்டிராவில் உள்ள புனேயில் நடந்தது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 'பேட்டிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் குல்தீப் நீக்கப்பட்டு அக்சர் படேல் வாய்ப்பு பெற்றார். பந்துவீச்சு அபாரம் நியூசிலாந்து அணிக்கு கப்டில், முன்ரோ ஜோடி ஏமாற்றியது. புவனேஷ்வர் 'வேகத்தில்' கப்டில் (11) ஆட்டமிழந்தார். பும்ரா பந்தில் கேப்டன் வில்லியம்சன் (3) சிக்கினார். முன்ரோ 10 ரன்களில் அவுட்டானார். பின், இணைந்த ராஸ் டெய்லர், லதாம் ஜோடி ந...
கோஹ்லி சதம் வீண்; பந்து வீச்சு சொதப்பல்; நியூசிலாந்து அபார வெற்றி

கோஹ்லி சதம் வீண்; பந்து வீச்சு சொதப்பல்; நியூசிலாந்து அபார வெற்றி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பகலிரவு ஆட்டமாக இன்று (அக். 22, 2017) நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் பெரிய அளவில் ரன்களை குவிக்கத் தவறினர். இந்திய அணி தரப்பில் கேப்டன் விராட் கோஹ்லி அதிகபட்சமாக 121 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்து, தினேஷ்கார்த்திக் 37 ரன்கள் எடுத்ததுதான் இந்திய அணி வீரர்களின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 280 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் அதிகபட்சமாக 4 விக்கெட...
கிரிக்கெட்: நியூஸிக்கு 281 ரன் இலக்கு; கோஹ்லி புதிய சாதனை!

கிரிக்கெட்: நியூஸிக்கு 281 ரன் இலக்கு; கோஹ்லி புதிய சாதனை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கனே வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் ஒரு நாள் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (அக். 22, 2017) மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியில் நீண்ட நாள்களுக்குப் பிறகு, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்தார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டை வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஜோடி பெரிய அளவில் சோபிக்கவில்லை. சிக்ஸர் அடித்து அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய ரோஹித் ஷர்மா, 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவானும் 9 ரன்களில் வெளியேறினார். இருவருமே நியூஸியின் டிரன்ட் போல்ட் வேகத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தினேஷ்கார்த்திக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்தார். அவரும் ஒருகட்டத்தில் 37 ரன்களில் த...
உலகை ஈர்த்த தமிழருக்கு கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!

உலகை ஈர்த்த தமிழருக்கு கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!

இந்தியா, உலகம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வானியல் இயற்பியலில் முதன்முதலாக நோபல் பரிசு பெற்ற தமிழரான சுப்ரமணியன் சந்திரசேகரின் 107வது பிறந்த நாளை கவுரவிக்கும் விதமாக, கூகுள் நிறுவனம் இன்று (அக். 19, 2017) 'டூடுல்' (Doodle) வெளியிட்டு அசத்தியுள்ளது. பாகிஸ்தான் இந்தியாவுடன் இணைந்திருந்த காலக்கட்டத்தில் (பிரிட்டன் இந்தியா) லாகூரில் 19.10.1910ம் தேதி பிறந்தவர் சுப்ரமணியன் சந்திரசேகர். லாகூரில் ஐந்து ஆண்டுகள், பின்னர் லக்னோ நகரில் 2 ஆண்டுகள் வசித்த அவருடைய பெற்றோர், சென்னைக்கு புலம்பெயர்ந்தனர். சந்திரசேகரின் பெற்றோர், சுப்ரமணியன் அய்யர் - சீதாலட்சுமி. 6 சகோதரிகள், 3 சகோதரர்களுடன் பிறந்தவர்தான் சந்திரசேகர். இப்போது இரண்டு வயதிலேயே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். அப்போது ஓரளவு வசதி படைத்தவர்களுக்கு ஆரம்பக்கல்வி, அவர்களின் வீட்டிலேயே கற்றுக்கொடுக்கப்படும். அப்படித்தான் சந்திரசேகருக்கும். ஆரம்பக்கல்வி வீட்டிலேயே பயிற்று...
இந்தியாவுக்கு ராணுவ ஆட்சிதான் வேண்டுமாம்!: சர்வே சொல்லுது

இந்தியாவுக்கு ராணுவ ஆட்சிதான் வேண்டுமாம்!: சர்வே சொல்லுது

அரசியல், இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
இந்தியாவில் ஜனநாயக ஆட்சி மீது திருப்தி இருந்தாலும், ராணுவ ஆட்சி வந்தால்தான் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று அதிர்ச்சிகரமான எண்ணங்களை இந்தியர்கள் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த 'பியூ ரிசர்ச்', 38 நாடுகளில் 41955 பேரிடம் ஓர் ஆய்வை நடத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 16ம் தேதி முதல் மே 8ம் தேதி வரை இந்த ஆய்வை நடத்தி முடித்திருக்கிறது. இதில், இந்தியர்களின் மனவோட்டம் பற்றிய சில அதிர்ச்சிகரமான, அதேநேரம் ஆச்சர்யகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில், கடந்த 2012ம் ஆண்டு முதல் தற்போது வரை சராசரியாக 6.9 சதவீதம் பொருளாதார வளர்ச்சி இருந்து வருவதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள 5ல் நான்கு பேர், அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், இருப்பினும் ராணுவ ஆட்சி வந்தால் நல்லது என்றும் பெரும்பான்மையோர் கருதுவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ஆதார் ...
பட்டினியில்லா நாடுகளில் இந்தியாவுக்கு 100வது இடம்: இதுதான் புதிய இந்தியாவா?

பட்டினியில்லா நாடுகளில் இந்தியாவுக்கு 100வது இடம்: இதுதான் புதிய இந்தியாவா?

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பட்டினியில்லா நாடுகளில் இந்தியாவுக்கு 100வது இடம் கிடைத்துள்ளது. ஒவ்வொரு திட்ட அறிவிப்பின்போதும் பிரதமர் நரேந்திர மோடி, புதிய இந்தியா பிறந்துவிட்டதாகக் கூறுவதும், ஆய்வு முடிவுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பற்று இருப்பதைக் காண முடிகிறது. உலக உணவுக்கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் பட்டினியில்லா நாட்டை உருவாக்குதல், ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையகமாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு, ஆண்டுதோறும் உலகளவில் ஊட்டச்சத்து, குழந்தைகள் நலம், பட்டினி குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டில் உலகம் முழுவதும் 119 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது. புள்ளிகள் அடிப்படையில் நாடுகளின் தகுதி பட்டியலை வரிசைப்படுத்துகிறது. அந்த ஆய்வில், பட்டினியில்லா நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 100வது இடமே கிடைத்துள்ளது. இந்தியா, வெறு...
மூன்றாவது டுவென்டி-20 ரத்து; இந்தியா – ஆஸி. ஏமாற்றம்!

மூன்றாவது டுவென்டி-20 ரத்து; இந்தியா – ஆஸி. ஏமாற்றம்!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஹைதராபாத்தில் இன்று (அக்டோபர் 13, 2017) நடக்க இருந்த மூன்றாவது மற்றும் இறுதி டுவென்டி-20 கிரிக்கெட் போட்டி, மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்திருந்தது. அடுத்து, மூன்று 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றது. முதல் இரண்டு டுவென்டி-20 போட்டியில் இந்தியாவும், ஆஸி அணியும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளன. மூன்றாவது மற்றும் இறுதி டுவென்டி-20 போட்டி இன்று ஹைதராபாத்தில் நடக்க இருந்தது. அங்கு கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இன்று மழை இல்லை. எனினும், மைதானம் ஈரப்பதத்துடன் இருந்தது. இரவு 7 மணிக்கும், பிறகு 7.45 மணிக்கும் மைதான ஈரப்பதம் சோதிக்கப்பட்டது. ஆடுகளம் போட்டி நடத்துவதற்கு உகந்ததாக இல்லை என அறிக்கை அளிக்கப்பட்டது. இதையடுத்து, ...
கருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்!-EXCLUSIVE

கருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்!-EXCLUSIVE

இந்தியா, உலகம், கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விஞ்ஞானம்
E-X-C-L-U-S-I-V-E சேலம் சித்தனூரை சேர்ந்தவர் சதீஸ்குமார் சரவணன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் இன்றைக்கு உலக அளவில் இந்தியாவின் நம்பிக்கைக்கு உகந்த முகமாக திகழ்கிறார் என்றால் மிகை ஆகாது. ஜெர்மன் நாட்டில் இளநிலை விஞ்ஞானியாக (Junior Scientist) இருக்கிறார். இயற்பியலாளர். சதீஸ்குமார் உள்பட நான்கு பேர் கொண்ட குழுவினர், ஐன்ஸ்டீன் சொல்லிச்சென்ற முக்கியமான ஒரு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, கருந்துளைகள் (Black Holes) பற்றிய புதியதொரு கருத்தியல் கொள்கையை உருவாக்கி, விஞ்ஞான உலகின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அதில், சதீஸ்குமாரின் பங்களிப்பு முக்கியமானது. ''எங்களது ஆராய்ச்சிக்கு ஐன்ஸ்டீன் கருத்தியல்தான் அடிப்படை. அதை மையமாக வைத்துக்கொண்டு, விண்வெளியில் (SPACE) உள்ள கருந்துளைகளைப் பற்றி சில புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்திருக்கிறோம்,'' என சதீஸ்குமார் அடக்கத்துடன் சொல்கிறார். கருந...
‘மெர்சல்’ படத்திற்கு மீண்டும் சிக்கல்; தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?

‘மெர்சல்’ படத்திற்கு மீண்டும் சிக்கல்; தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?

இந்தியா, உலகம், சினிமா, முக்கிய செய்திகள்
'மெர்சல்' படத்திற்கு விலங்குகள் நலவாரியத்திடம் இருந்து ஆட்சேபனையில்லா சான்றிதழ் இன்னும் பெறப்படாததால், திட்டமிட்டபடி தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதில் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் - இயக்குநர் அட்லி கூட்டணியில் சுமார் ரூ.135 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது 'மெர்சல்'. ஸ்ரீதேனாண்டால் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் முரளி ராமசாமி படத்தை தயாரித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் விஜய் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேஜிக் கலைஞராகவும் முதன்முதலாக நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏற்கனவே பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வரும் 18ம் தேதி வெளியிடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்...
டி-20 கிரிக்கெட்: இந்திய தலைகள் உருண்டன; ஆஸி. அசத்தல் வெற்றி

டி-20 கிரிக்கெட்: இந்திய தலைகள் உருண்டன; ஆஸி. அசத்தல் வெற்றி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கவுகாத்தியில் நடந்த ஆஸி. அணிக்கு எதிரான இரண்டாவது டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் கைகொடுக்காததால், 8 விக்கெட்டில் ஆஸி அணியிடம் தோல்வியைத் தழுவியது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை 4-1 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றியை பதிவு செய்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி கவுஹாத்தியில் இன்று (அக். 10) நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் வார்னர், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். தலைகள் உருண்டன: இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா (8), ஷிகர் தவான் (2), விராட் கோலி (0), மனீஷ் பாண்டே (6) என ‘டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்களை, ஆஸி பந்து வீச்சாளர் பெஹர்டெண்டிராப் பெவிலியனுக்க...