Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

உலகம்

குர்மீத் ராமுக்கு 20 ஆண்டு சிறை

குர்மீத் ராமுக்கு 20 ஆண்டு சிறை

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
பாலியல் வன்புணர்வு வழக்கில், தேரா சச்சா சவுதா ஆன்மீக அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங், இரண்டு பெண் பக்தர்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2002ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. கடந்த 25ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது. தண்டனை விவரங்கள் 28ம் தேதி (இன்று) கூறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மாநிலங்களில் தேரா சச்சா சவுதா ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இரண்டு நாட்கள் நீடித்த இந்த கலவரத்தில் மொத்தம் 38 பேர் ப
கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா

கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா

உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
பல்லேகெலே: இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் இலங்கை அணி தொடர்ந்து சொதப்பி வந்ததால், அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்திற்குள் குடிநீர் பாட்டில்கள வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டாலும், இந்திய அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை அணியுடன் ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணி, தொடரை முழுமையாக வென்று புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. ஏற்கனவே முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளை வென்று, தொடரில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி, இந்த தொடரையும் முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இன்று (27/8/17) மூன்றாவது போட்டியில் களமிறங்கி
பொருளாதார வளர்ச்சியில் சீனாவை முந்தும் இந்தியா: சொல்கிறது ஐஎம்எஃப்

பொருளாதார வளர்ச்சியில் சீனாவை முந்தும் இந்தியா: சொல்கிறது ஐஎம்எஃப்

அரசியல், இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், வர்த்தகம்
டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, நடப்பு ஆண்டில் அபரிமிதமாக இருக்கும் என்றும், சீனாவை பின்னுக்குத் தள்ளி வேகமாக வளரும் என்றும் சர்வதேச நிதியகம் (ஐ.எம்.எப்) தன்னுடைய பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.ன் வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். இருந்தாலும், நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்குவது சவால் மிகுந்ததாக இருக்கும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா தெரிவித்திருந்தார். ஜூலை 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகமானது. இதில் துவக்கத்தில் சிறிது காலத்துக்கு மந்தநிலை காணப்பட்டாலும், இது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காது என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் ஐஎம்எஃப் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. பணமதிப்பு நீக்கம்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்
முதல் டெஸ்ட்: 304 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடியது இந்தியா

முதல் டெஸ்ட்: 304 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடியது இந்தியா

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கொழும்பு: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு ஆரம்பமே அட்டகாசமாக அமைந்துள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. காலேயில் நடைபெற்ற இந்த டெஸ்டில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 600 ரன்களையும், இலங்கை 291 ரன்களையும், இந்தியா 2வது இன்னிங்சில், 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்களையும் எடுத்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 550 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இன்று (29/07/17) 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டையும் வீ
கோஹ்லி சதம்.. இந்தியா செம பேட்டிங்.. பெரும் தோல்வியை நோக்கி இலங்கை!

கோஹ்லி சதம்.. இந்தியா செம பேட்டிங்.. பெரும் தோல்வியை நோக்கி இலங்கை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
காலே: காலே முதல் டெஸ்ட் போட்டியில் விராத் கோஹ்லியின் அபார ஆட்டத்தால் இலங்கை அணி பெரும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்தியா தனது 2வது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்த நிலையில் இன்று காலை டிக்ளேர் செய்தது. இதையடுத்து 550 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை தற்போது இலங்கை துரத்திக் கொண்டிருக்கிறது. காலே முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 600 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 291 ரன்களுக்கு இழந்தது. இந்தியா இன்று காலை தனது 2வது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களில் டிக்ளேர் செய்தது. இன்றைய ஆட்டத்தின் சிறப்பு கோஹ்லி போட்ட சதம். நேற்று 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் என்ற நிலையில் ஆட்டத்தை முடித்திருந்த இந்தியா இன்று மேலும் 51 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. கோஹ்லி சிறப்பான சதம் போட்ட கையோடு டிக்ளேர் செய்ய
‘நம்ம ஊரு ஐன்ஸ்டீன்’ ரிபாத் ஷாரூக்! கரூர் முதல் ‘நாசா’ வரை

‘நம்ம ஊரு ஐன்ஸ்டீன்’ ரிபாத் ஷாரூக்! கரூர் முதல் ‘நாசா’ வரை

இந்தியா, உலகம், கல்வி, தமிழ்நாடு, தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரிபாத் ஷாரூக், கையடக்க செயற்கைக்கோளை தயாரித்து, விண்ணில் செலுத்தியதன் மூலம் இன்று உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் ஈர்த்து இருக்கிறார். ரிபாத் ஷாரூக் மற்றும் அவருடைய குழுவினரின் சாதனையைப் பாராட்டி, தமிழக அரசு ரூ.10 லட்சம் பரிசு வழங்கி கவுரவித்திருக்கிறது. வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் ரிபாத். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான 'நாசா' (NASA), புதிய கண்டுபிடிப்புகளுக்கான 'கப்ஸ் இன் ஸ்பேஸ்'(Cubs in Space) என்ற போட்டி ஒன்றை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. மாணவர்கள், தங்களது ஆராய்ச்சி கட்டுரைகள், படைப்புகளை இந்தப் போட்டியில் சமர்ப்பிக்கலாம். இந்த போட்டியை, ஸ்ரீமதி கேசன் என்பவர் செயல் அதிகாரியாக இருக்கும் 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்ற அமைப்புதான் இந்தியாவில் வழிநடத்துகிறது. இதில் பங்கேற்ற ரிபாத் ஷாரூக் குழுவினர், தங்களின் கையடக்க செயற
‘நீட்’ தேர்வு: வெளிவராத ஓர் அதிர்ச்சித் தகவல்!

‘நீட்’ தேர்வு: வெளிவராத ஓர் அதிர்ச்சித் தகவல்!

அரசியல், அலோபதி, இந்தியா, உலகம், கல்வி, தமிழ்நாடு, தொழில்நுட்பம், மருத்துவம், முக்கிய செய்திகள்
நீட் தேர்வில் வட மாநிலங்களுக்கு காட்டிய சலுகையை, தமிழ்நாட்டிற்கு மட்டும் ஓரவஞ்சனையுடன் செயல்பட்டுள்ளதாக நடுவண் பா.ஜ.க., அரசு மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில், அத்தேர்வு குறித்த மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன.  “ஒரே தேசம், ஒரே தேர்வு” என்பது நீட் தேர்வு முறைக்கு சொல்லப்பட்ட வியாக்கியானம். பீற்றிக் கொள்ளப்பட்ட “ஒரே தேர்வு” என்பது நடைமுறையில் உள்ள மற்ற தேர்வுகளை ஒழிக்கவில்லை; என்பது ஒருபுறம் இருக்கட்டும். மேற்படி தேர்வுக்கு மாணவர்கள் தங்களைத் தயாரித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் ஏற்றத் தாழ்வாகவே இருக்கின்றது. வசதி படைத்த மாணவர்கள், பல லட்சங்கள் செலவு செய்து சி.பி.எஸ்.இ. பாட திட்டம் கொண்ட ஐந்து நட்சத்திர பள்ளிகளில் படிப்பதோடு, மேலும் சில லட்சங்கள் செலவு செய்து நீட் தேர்வுகளுக்கும் தங்களைத் தயாரித்துக் கொண்டனர். இவர்களோடு, மாநில அரசுகளின் பாட திட்டங்களில் பயின்ற ஏழை மாணவ