Wednesday, October 22மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

உலகம்

இந்தூர் டி20: ரோஹித் ஷர்மா அபார சதம்; இலங்கைக்கு தர்ம அடி;  தொடரை வென்றது இந்தியா!

இந்தூர் டி20: ரோஹித் ஷர்மா அபார சதம்; இலங்கைக்கு தர்ம அடி; தொடரை வென்றது இந்தியா!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இந்தூரில் இன்று (டிசம்பர் 22, 2017) நடந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை இந்திய வீரர்கள் துவம்சம் செய்தனர். அபாரமாக வெளுத்து வாங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மா, குறைந்த பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். அத்துடன் இந்திய அணி தொடரையும் வென்றது.  இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி, இலங்கையை 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இந்நிலையில் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடந்தது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் விஸ்வ பெர்ணாண்டோ, சனாகா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, சதீரா சமரவிக்ரமா, சதுரங்கா டி சில்வா சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு ...
முதல் டி-20 கிரிக்கெட்: இந்திய சுழலில் சுருண்டது இலங்கை!; சாஹல் அபாரம்!!

முதல் டி-20 கிரிக்கெட்: இந்திய சுழலில் சுருண்டது இலங்கை!; சாஹல் அபாரம்!!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இலங்கைக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழல் பந்து வீச்சாளர்களின் துல்லிய தாக்குதலால், அந்த அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வீழ்த்தியது. இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுடன் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டி, ஒரிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் நகரில் இன்று (டிசம்பர் 20, 2017) நடந்தது. இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கியது. லோகேஷ் ராகுல் அரை சதம்: டாஸ் வென்ற இலங்கை அணி, பனிப்பொழிவு காரணமாக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான லோகேஷ் ராகுல், ரோஹித் ஷர்மா சிறப்பான தொடக்கம் தந்தனர். ரோஹித் ஷர்மா 17 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் லோகேஷ் ராகுல் அபாரமாக ஆடி அரை சதம் அடித்தார். சர்வதேச டி20 போட்டிகளில் அவர் அடிக்கும் இரண்டாவது அரை சதம் ஆகும். ராகுல் 61 ரன்களில் ஆட்டமிழந்தார்....
கிரிக்கெட்: இலங்கை உடனான 3வது ஒருநாள் போட்டியையும் இந்தியா வென்றது;  தொடரையும் கைப்பற்றி அசத்தல்

கிரிக்கெட்: இலங்கை உடனான 3வது ஒருநாள் போட்டியையும் இந்தியா வென்றது; தொடரையும் கைப்பற்றி அசத்தல்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஷிகர் தவான் சதம் மற்றும் சுழல் பந்து வீச்சாளர்கள் அற்புதமான ஆட்டத்தால் எளிதாக வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒரு நாள் தொடரையும் 2-1 கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இலங்கைக்கு கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி விசாகபட்டினத்தில் இன்று (டிசம்பர் 17, 2017) நடந்தது. ஏற்கனவே முதல் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றிருந்தது. அதனால் இன்றைய போட்டி, இரு அணிகளுக்கும் தொடரை வெல்லப்போவது யார் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பந்து வீச்சை தேர்வு செய்தார். உபுல் தரங்காவின் அதிரடியால் ஒரு கட்டத்தில் இலங்கை அணி 22.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 136 ரன்கள் எடுத்திருந்தது. சீரான ஆட்டத்...
காதல் மனைவிக்கு பறக்கும் முத்தம் பார்சல்…!;  இரட்டை சத நாயகன் ரோஹித் லவ்ஸ்…!!

காதல் மனைவிக்கு பறக்கும் முத்தம் பார்சல்…!; இரட்டை சத நாயகன் ரோஹித் லவ்ஸ்…!!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் மூன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா, மைதானத்தில் இருந்தவாறே கேலரியில் அமர்ந்திருந்த தன் காதல் மனைவிக்கு பறக்கும் முத்தத்தை அனுப்பியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி, மொஹாலியில் இன்று (டிசம்பர் 13, 2017) நடந்தது. முதலில் மட்டையை சுழற்றிய இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி, இலங்கை அணியை தெறிக்கவிட்டனர். இந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி, 392 ரன்களை குவித்ததுடன், இலங்கை அணியையும் வீழ்த்தியது. ஒருமுனையில் நங்கூரம் பாய்ச்சி நின்ற தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா, அரை சதத்தை சதமாகவும், சதம் எட்டிவிட்டால் அதை இரட்டை சதம் அல்லது பெரிய அளவிலான ரன்களாகவும் மாற...
விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா ரகசிய திருமணம்!; இத்தாலியில் அமர்க்களம்

விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா ரகசிய திருமணம்!; இத்தாலியில் அமர்க்களம்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் இத்தாலியில் இன்று (டிசம்பர் 11, 2017) ரகசிய திருமணம் நடந்தது. இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும், பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் கடந்த பல ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். இருவரின் பெற்றோரும் அவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர். இதையடுத்து, இந்த ஜோடி திருமண நாளை எதிர்நோக்கிக் காத்திருந்தது. கடந்த ஜனவரி மாதமே திருமணம் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அப்போது அதை அவர்கள் இருவருமே மறுத்து இருந்தனர். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் ட்வென்டி-20 போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலி, சொந்த காரணங்களுக்காக விடுப்பில் செல்வதாக அறிவித்தார். அப்போதே, அனுஷ்கா ஷர்மாவை அவர் கரம் பிடிக்கப் போகிறார் என்ற யூகங்கள் ஊடகங்களில் கிளம்பின. அதன்படி, இன்று விராட் கோலிக...
பிரபல இயற்பியல் விஞ்ஞானிக்கு கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!

பிரபல இயற்பியல் விஞ்ஞானிக்கு கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!

உலகம், கல்வி, முக்கிய செய்திகள், விஞ்ஞானம்
குவாண்டம் இயக்கவியல் துறையில் அளப்பரிய சாதனை படைத்த இயற்பியலாளர் மேக்ஸ் பார்ன்-ன் 135வது பிறந்த நாளையொட்டி, அவருக்கு கூகுள் நிறுவனம் இன்று (டிசம்பர் 11, 2017) டூடுல் வெளியிட்டு கவுரவம் சேர்த்துள்ளது. ஜெர்மனி நாட்டில் உள்ள பிரெஸ்லூ நகரில், 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பிறந்தவர் மேக்ஸ் பார்ன். இப்போது, இந்த பிரெஸ்லூ நகரம் போலந்து நாட்டில் உள்ளது. பிரெஸ்லூவில் உள்ள கோட்டிங்கென் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி ஆய்வை நிறைவு செய்தார். இயற்பியல், கணிதம் ஆகிய துறைகளில் ஆர்வமிக்க மேக்ஸ் பார்ன் இல்லாவிட்டால், இன்றைக்கு மருத்துவத்துறையில் நமக்கெல்லாம் எம்ஆர்ஐ ஸ்கேன், லேசர் சாதனங்கள் கிடைத்திருக்காது. அல்லது, இன்னும் வெகுகாலம் ஆகியிருக்கலாம். கருத்தியல் இயற்பியல், குவாண்டம் இயக்கவியலில் மட்டுமின்றி, கணித சமன்பாடுகளை உருவாக்குவதிலும் கெட்டிக்காரர். தனிநபர் கணினி பயன்பாட்டிற்கும் இவருடைய பல ...
கிரிக்கெட்: இந்தியாவுக்கு மரண அடி கொடுத்தது இலங்கை!

கிரிக்கெட்: இந்தியாவுக்கு மரண அடி கொடுத்தது இலங்கை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
தரம்சாலாவில் இன்று நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார பெற்றி பெற்றது. இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி, ஹிமாச்சல்பிரதேச தலைநகர் தரம்சாலாவில் இன்று (டிசம்பர் 10, 2017) நடந்தது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், பனிப்பொழிவு காரணமாக பகல் 11.30 மணிக்கே போட்டி தொடங்கியது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி ஓய்வில் சென்றதால், ஒரு நாள் தொடருக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ரஹானே நீக்கப்பட்டு ஸ்ரேயாஸ் அய்யர் முதன்முதலாக ஆடும் லெவனில் இடம் பிடித்தார். டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது....
டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய சுழலில் சுருண்டது இலங்கை!

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய சுழலில் சுருண்டது இலங்கை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அந்த அணியை இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மழையால் டிராவில் முடிந்தது. இந்நிலையில் நாக்பூர் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வந்தது. முதல் இன்னிங்ஸில் இலங்கை 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 610 - 6 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 128 ரன்களும், புஜாரா 143 ரன்களும், ரோஹித் ஷர்மா 102 ரன்களும், கேப்டன் விராட் கோலி 213 ரன்களும் குவித்தனர். இதைத் தொடர்ந்து, நான்காம் நாளான இன்று (நவம்பர் 27, 2017) 405 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் சண்டிமால் 61 ரன்களும், சுரங்கா...
உலக அழகி பட்டம் வென்றார் இந்தியாவின் மானுஷி சில்லார்!;  “உலகத்தில் அதியுயர்ந்தது அம்மா ஸ்தானம்தான்”

உலக அழகி பட்டம் வென்றார் இந்தியாவின் மானுஷி சில்லார்!; “உலகத்தில் அதியுயர்ந்தது அம்மா ஸ்தானம்தான்”

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
உலக அழகியாக இந்தியாவின் மானுஷி சில்லார் மகுடம் சூடினார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு மீண்டும் உலகி அழகி பட்டம் கிடைத்திருக்கிறது. மகுடம் சூடினார்: சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள சான்யா சிட்டியில் உலக அழகி பட்டத்திற்கான இறுதிக்கட்ட தேர்வு இன்று (நவம்பர் 18, 2017) நடந்தது. 188 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இறுதிக்கட்டத்தில் 5 நாடுகளின் அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் போட்டியில் அனைத்து சுற்றுகளிலும் முன்னிலை பெற்ற இந்தியாவின் மானுஷி சில்லார், உலக அழகி பட்டத்தை வென்றார். முன்னாள் உலக அழகியான போர்ட்டோ ரிகோ நாட்டைச் சேர்ந்த ஸ்டெஃபானி டெல் வாலி, அவருக்கு உலக அழகிக்கான கிரீடத்தைச் சூட்டினார். வாழ்க்கைக் குறிப்பு: தற்போது 20 வயதான மானுஷி சில்லார், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். தாய், நீலம் சில்லார். மருத்துவர். தனியார் மருத்துவக்கல்லூர...
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?: சர்ச்சை கிளப்பும் சிவாஜிலிங்கம்!

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?: சர்ச்சை கிளப்பும் சிவாஜிலிங்கம்!

இந்தியா, உலகம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டது உறுதி என்றால் அவருடைய உடலை ஏன் மரபணு சோதனைக்கு உட்படுத்தவில்லை என்றும், மரண சான்றிதழ் வழங்காதது ஏன் என்றும் கேட்டுள்ளதன் மூலம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார், இலங்கை வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம். எம்.கே.சிவாஜிலிங்கம். கடந்த 2009ம் ஆண்டு நடந்த ஈழ இறுதிப் போரின்போது, மே 17ம் தேதி, சிங்கள ராணுவத்தினரின் தாக்குதலில் வி டுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகச் சொல்லப்பட்டது. அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சிங்கள பேரினவாத அரசு, 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொத்துக் குண்டுகள் வீசி படுகொலை செய்தது. முள்ளிவாய்க்கால் கடல் பகுதியில் இருந்து அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் இலங்கை ராணுவம் தரப்பில் சொல்லப்பட்டது. எனினும் அவருடைய இறப்பு குறித்து இன்றும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்ல...