Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அரசியல்

நீடிக்குமா இந்த ஆட்சி?

நீடிக்குமா இந்த ஆட்சி?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்ற கதையாக ஆளும் அதிமுகவுக்குள் உச்சக்கட்ட பூசல்கள் அரங்கேறி வருகின்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அக்கட்சிக்குள் நிகழும் சம்பவங்களை வைத்துப் பார்க்கையில் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு, இந்த கட்சி ஆட்சிக்கட்டிலில் இருக்குமா என்ற சந்தேகம் பாமரனுக்கும் எழாமல் இல்லை. ஜெ., மரணத்தின் பின்னணியில் சசிகலா குடும்பம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஓ.பன்னீர்செல்வம் உள்பட யாரையுமே பார்க்க அனுமதிக்காததன் பின்னணி என்ன?. இதெல்லாம், ஜெ., ஆளுமையை நேசிக்கும் வெகுஜன மக்களின் மனதில் படிந்திருக்கும் கேள்விகள். அதன் காரணமாகவே சசிகலா குடும்பத்தினர் மீது மக்களுக்கு ஒருவித வெறுப்புணர்வு இருக்கிறது. அதேநேரம், ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமான அதிமுகவை, 'எல்லா விதத்திலும்' வழிநடத்தும் 'சக்தி' மன்னார்குடி கும்பலுக்கு இருக்கிறது என்பதையும் ம
சசிகலாவின் சீராய்வு மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு

சசிகலாவின் சீராய்வு மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
புதுடில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதாவின் தோழி சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று (23/8/17) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஜெயலலிதா, குற்றவாளிதான் என்றாலும் அவர் மரணம் அடைந்துவிட்டதால் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், கடந்த பிப்ரவரி 15ம் தேதி அடைக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். நீதிபதிகள் அமிதவ ராய், போப்டே ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை நேற்
‘அதிமுக குரங்கு’: – நடிகர் ட்வீட்!

‘அதிமுக குரங்கு’: – நடிகர் ட்வீட்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆளுங்கட்சியை சமீப காலமாக நடிகர் கமல்ஹாஸன் டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர், ''தமிழர்கள் தலையில் இப்போது கோமாளி குல்லா'' என்று டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் இணைப்பை பற்றிதான் அவர் இவ்வாறு கேலி செய்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். கமல்ஹாஸனை பின்பற்றி நடிகர் கஸ்தூரி, ஸ்ரீபிரியா, பார்த்திபன் ஆகியோரும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அரசியல் கருத்துகளை ரத்தினச்சுருக்கமாக நையண்டி செய்து வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய டிவிட்டர் பக்கத்தில், ''கிளியை வளர்த்து யாரோ குரங்கு கையில் கொடுக்க - அந்த குரங்கை பிடித்து யாரோ மனிதன் கையில் கொடுக்க - அப்படி இன்றியமையா இணைப்பிற்குப் பின்!!!'' என்று ட்வீ
வைத்திலிங்கம் நீக்கம்: டிடிவி அதிரடி

வைத்திலிங்கம் நீக்கம்: டிடிவி அதிரடி

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று ஒன்றாக இணைந்தது. இரு அணிகளும் இணைப்புக்குப் பின்னர் நேற்று மாலை ஊடகங்களிடம் பேசிய எம்பி வைத்திலிங்கம், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவார் என்று தெரிவித்தார். பொதுச்செயலாளரை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவிற்குதான் உண்டு என்று அப்போதே வைத்திலிங்கம் கருத்துக்கு தினகரன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், எடப்பாடி அணியில் உள்ள அமைச்சர் ஓஎஸ் மணியன், வைத்திலிங்கம் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும், சசிகலா தொடர்பாக யாரும் விவாதிக்கவில்லை என்றும் கூறினார். இந்நிலையில் அதிமுகவின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் வைத்திலிங்கத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார். சசிகலாவுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் கட்சிய
‘எடப்பாடிய தூக்குங்க’; எம்எல்ஏக்கள் போர்க்கொடி!

‘எடப்பாடிய தூக்குங்க’; எம்எல்ஏக்கள் போர்க்கொடி!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டோம்; அவரை மாற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் இன்று (22/8/17) ஆளுநர் (பொ) வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அதிமுகவில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று ஒன்றாக இணைந்தது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். அவருடைய அணியைச் சேர்ந்த மாஃபா க.பாண்டியாராஜனுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. சமீப காலமாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இரு அணிகளையும் கடுமையாக விமர்சித்து வந்தனர். நேற்று இரு அணிகளும் இணைக்கப்பட்டபோதும்கூட தினகரன் ஆதரவு தரப்பை, அவ்விரு தரப்புமே கண்டுகொள்ளவில்லை. இதனால் விரக்தி அடைந்த தினகரன் தரப்பினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வைத்திருந்த நம்பிக்க
பாஜக: ஒழுங்கீன அரசியலின் குறியீடு!

பாஜக: ஒழுங்கீன அரசியலின் குறியீடு!

அரசியல், முக்கிய செய்திகள்
ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே வரி என்ற கொள்கைகளின் நீட்சியாக நாட்டில் இனி ஒரே கட்சிதான் என்கிற சித்தாந்தத்தை நிருவப் பார்க்கிறது பாரதிய ஜனதா கட்சி. அதற்காகவே, தாங்கள் காலூன்றாத மாநிலங்களில் ஆளும் கட்சிகளை பிளவு படுத்துவதற்கான சகுனி ஆட்டத்தில் மும்முரமாக காய் நகர்த்துகிறது. ராஜ்யசபையில் அக்கட்சிக்கு மெஜாரிட்டி இல்லாததால், இத்தகைய கொல்லைப்புற வேலைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறது. அண்மையில், பீஹாரில் நடந்த அரசியல் நகர்வுகள் கொஞ்சம்கூட அரசியல் நாகரீகத்திற்கு ஒவ்வாதது. ஆதாயத்திற்காக அரசியல் கட்சிகள் எந்தளவுக்கு தரம் தாழ முடியும் என்பதற்கு தமிழ்நாடுதான் சிறந்த உதாரணம் என்று நினைத்திருந்தோம். அப்படி அல்ல. பீஹார், தமிழகத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டது. மன்மோகன்சிங் அமைச்சரவையில் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ரயில்வே மந்திரியாக இருந்தபோது உலகத்தரம் வாய்ந்த ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பித
மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு: அதிமுக அணிகள் இணையுமா?

மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு: அதிமுக அணிகள் இணையுமா?

அரசியல், முக்கிய செய்திகள்
புதுடில்லி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை இன்று (ஆக.,14) சந்தித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்த நிலையில், இன்று ஓபிஎஸ் மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் அடுத்தடுத்து பிரதமர் மோடியை சந்தித்துள்ளதால் ஓரிரு நாள்களில் இரு அணிகள் இணைப்பு குறித்த முக்கிய முடிவு வெளியாகலாம் என தெரிகிறது.
மக்கள் மீதான பாஜகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்

மக்கள் மீதான பாஜகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, ஆதார், ரேஷன் மானியம் ரத்து என் பாஜக அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் சாமானிய மக்கள் விழி பிதுங்கி உள்ளனர். பாகிஸ்தான் ஊடுருவலை முறியடிக்க இந்திய அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துகிறதோ இல்லையோ, சொந்த நாட்டினர் மீதான தாக்குதலைத்தான் அதிகரித்துள்ளது. 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீளும் முன்பே மாடு விற்கத் தடை விதித்தது. இதனால் நாடெங்கும் கால்நடைச் சந்தைகள் முடங்கின. விளைபொருளுக்கு விலை, கடன் தள்ளுபடி கோரிப் போராடிய மத்தியப் பிரதேச விவசாயிகளை சுட்டுக் கொன்றது பா.ஜ.க அரசு. இதற்கிடையில் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் தாக்குதலைத் துவங்கியது மோடி அரசு. குஜராத் மண்ணிலேயே இலட்சக்கணக்கான வணிகர்கள், சிறு முதலாளிகள் ஜ.எஸ்.டி வரிவிதிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். தமிழகத்திலோ தீப்பெட்டி,, ஜவுளி,
அலுவல் மொழி சட்டமும் அத்துமீறும் அரசாங்கமும்!

அலுவல் மொழி சட்டமும் அத்துமீறும் அரசாங்கமும்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-பிந்துசாரன், சமூக செயற்பாட்டாளர்-   1950 -ம் ஆண்டு சனவரி 26ம் நாள் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு, இந்திய அரசியலமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக இந்தி இருக்கும் எனத் தெரிவிக்கின்றது.   இந்தியுடன் ஆங்கிலமும் 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இருக்கும் எனவும், பிறகு 1965ம் ஆண்டு முதல் ஆங்கிலம் ஆட்சிமொழி என்னும் நிலையை தானாக இழக்கும் எனவும் அறிவிக்கின்றது. இந்திய ஒன்றிய அரசின் இந்தி மொழித்திணிப்பை எதிர்த்து, தமிழ்நாட்டில் 1965ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்மொழி காக்கும் போராட்டத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் உயிர் ஈந்தனர்.   அதன் விளைவாக அலுவல் மொழிச்சட்டத்தில், இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாக நீட்டிக்கப்படும் எனத்திருத்தம் செய்யப்பட்டது. இதனால் இந்திய ஒன்றியத்தில் இருந்து, இந்தி மொழி அல்லாத பிறம
இந்தியா ஒற்றை நாடு அல்ல! “ஹிந்தி மொழியை திணித்தால் தமிழர்கள் ‘வெச்சி’ செய்வார்கள்” -சு.பொ.அகஸ்தியலிங்கம்

இந்தியா ஒற்றை நாடு அல்ல! “ஹிந்தி மொழியை திணித்தால் தமிழர்கள் ‘வெச்சி’ செய்வார்கள்” -சு.பொ.அகஸ்தியலிங்கம்

அரசியல், முக்கிய செய்திகள்
தமிழகம் உருவாக்கிய மொழி உணர்வு, இன்றைக்கும் இந்திய அரசியலில் ஓர் ஆக்கப்பூர்வமான பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது. அதில் சில தோல்விகள் இருக்கலாம்; பலகீனம் இருக்கலாம். நான் வரலாற்றை கொச்சைப்படுத்த வில்லை. இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் அடக்கி ஆண்டபோது ஏற்பட்ட சிப்பாய்க்கலகத்தை மடைமாற்றம் செய்வதற்காக, காங்கிரஸ் அமைப்பை உருவாக்கினர். அதை ஒரு 'சேஃப்டி வால்வு' ஆக பயன்படுத்தினர். ஆனால் அந்த காங்கிரஸ் கட்சி, பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான அமைப்பாக மாறியது. 1886ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி துவக்கப்பட்ட மூன்றாவது மாநாடு, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் நடந்தது. இந்த மாநாட்டிற்கு முன்புவரை காங்கிரசார் ஆங்கிலத்தில்தான் எழுதுவார்கள். பேசுவார்கள். ஆனால் முதன்முறையாக அவரவர் தாய்மொழியில் பேசும் மாநாடாக அமைந்தது சென்னை மாநாடுதான். அந்த மாநாட்டில் மூக்கணாச்சாரி என்ற பொற்கொல்லர், எப்படி சிறுதொழில்கள் நசிந்தத