Tuesday, July 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

அரசியல்

ஆர்.கே.நகர்: ஜெயலலிதாவின் சாதனையை விஞ்சிய டிடிவி தினகரன்!

ஆர்.கே.நகர்: ஜெயலலிதாவின் சாதனையை விஞ்சிய டிடிவி தினகரன்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கி வெற்றி பெற்ற டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விட கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் எதிர் வேட்பாளரை தோல்வி அடையச் செய்துள்ளார். மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக கருதப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, திமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் நிறுத்தப்பட்டார். அந்த தேர்தலில் ஜெயலலிதா 97218 வாக்குகளும், திமுக வேட்பாளர் 57673 வாக்குகளும் பெற்றனர். சிம்லா முத்துச்சோழனை விட 39545 வாக்குகள் அதிகம் பெற்று ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார். இப்போது நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன், ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். தேர்தல் களத்தில் எதிர்த்துப் போட்டியிட்ட பிரத...
ஆர்.கே.நகர்: 89013 ஓட்டுகள் பெற்று டிடிவி தினகரன் வெற்றி; டெபாசிட் இழந்தது திமுக; முழு விவரம்

ஆர்.கே.நகர்: 89013 ஓட்டுகள் பெற்று டிடிவி தினகரன் வெற்றி; டெபாசிட் இழந்தது திமுக; முழு விவரம்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பிரஷ்ஷர் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன், 89013 வாக்குகள் பெற்று அமோக பெற்றி பெற்றார். ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட அவர் 40707 வாக்குகள் கூடுதலாக பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட திமுக உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். கடந்த 2016ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அவர் உடல்நலக்குறைவால் இறந்தார். கடந்த ஓராண்டாக அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதற்கிடையே ஆளும் அதிமுகவுக்குள் ஏற்பட்ட உள்கட்சி பிரச்னைகளால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஓரணியாகவும், டிடிவி தினகரன் தலைமையில் மற்றொரு அணியாகவும் பிளவு பட்டது. முடக்கப்பட்டு இருந்த இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சிப்...
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 77.68% வாக்குப்பதிவு; 24ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 77.68% வாக்குப்பதிவு; 24ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 77.68 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. வரும் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி, உடல்நலக் குறைவால் அவர் மரணம் அடைந்தார். இதையடுத்து, ஆர்கே நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதமே அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. பணப்பட்டுவாடா புக £ர் காரணமாக அப்போது திடீரென்று இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர், மீண்டும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அந்த தொகுதிக்கு இன்று (டிசம்பர் 21, 2017) வாக்குப்பதிவு நடந்தது. இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க வசதியாக 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. ...
2ஜி வழக்கில் தீர்ப்பு அளித்த  நீதிபதி ஓ.பி.சைனி யார்?;  “ஊழலுக்கு எதிரான கறார் கந்தசாமியாம்”!!

2ஜி வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி ஓ.பி.சைனி யார்?; “ஊழலுக்கு எதிரான கறார் கந்தசாமியாம்”!!

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
2ஜி அலைக்கற்றை வழக்கில் தீர்ப்பு அளித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, ஊழலுக்கு எதிராக ரொம்பவே கறார் காட்டக்கூடிய நீதிபதி என்றும், காவல்துறையில் உதவி ஆய்வாளராக இருந்து நீதித்துறைக்கு வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கைத்துறை அறிக்கை சமர்ப்பித்தது. இது தொடர்பாக அப்போது கூட்டணியில் இருந்த திமுக அமைச்சர் ஆ.ராஜா, திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வந்தது. மத்திய கணக்குத் தணிக்கைத்துறை ரூ.1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறியிருந்தாலும், சிபிஐ தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட குற்...
2ஜி வழக்கு: ஆ.ராஜா, கனிமொழி விடுதலை; சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

2ஜி வழக்கு: ஆ.ராஜா, கனிமொழி விடுதலை; சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
2 ஜி அலைக்கற்றை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் கனிமொழி எம்பி, முன்னாள் அமைச்சர் ஆ.ராஜா உள்ளிட்ட 14 பேரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (டிசம்பர் 21, 2017) தீர்ப்பு அளித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது திமுகவைச் சேர்ந்த ஆ.ராஜா தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலத்தின் மூலமாக, ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக மத்திய கணக்குத் தணிக்கைத்துறை ஆணையர் வினோத் ராய் (சிஏஜி) அறிக்கை சமர்ப்பித்தார். இதுபோன்ற இமாலய ஊழல் குற்றச்சாட்டு சுதந்திர இந்தியா அதற்கு முன் கேள்விப்பட்டதில்லை எனும் அளவுக்கு, அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற புதிய கொள்கையின்படி ஆ.ராஜா, அவருக்கு வேண்டிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி...
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவும் பிரஷ்ஷர் குக்கரின் கடைசி விசிலும்!

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவும் பிரஷ்ஷர் குக்கரின் கடைசி விசிலும்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சாவுக்கு ஒரு ஓட்டு; நோவுக்கு ஒரு ஓட்டு என்று அரசியல் செய்வதில் அதிமுககாரர்கள் கில்லாடிகள் என்பதற்கு, அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பாக இன்று (டிசம்பர் 20, 2017), வெளியான வீடியோ இன்னுமொரு சான்று. ஜெயலலிதா இறந்து ஓராண்டு ஆகியும் அவருடைய மரணம் குறித்த சர்ச்சைகள் இறக்கை கட்டிப் பறந்து கொண்டுதான் இருக்கின்றன. யோசித்துப் பார்த்தால், அம்மா இட்லி சாப்பிட்டார் என்பது முதல் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரதாப் சி ரெட்டியின் அண்மைய அறிக்கை முதல் எல்லாவற்றிலும் ஒரு முரண்பாடு இருப்பதை அறிய முடியும். ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே சீரியஸ் நிலையில்தான் இருந்தார் என்று பிரதாப் சி ரெட்டி சொன்னதற்கு, சட்டம்&ஒழுங்கு கெட்டுவிடக்கூடாது என்பதுதான் காரணம் என நியாயம் கற்பிக்கிறார். நாளை (டிசம்பர் 21, 2017) ஆர்கே நகர்...
குஜராத் தேர்தல் முடிவு தமிழகத்தில் எதிரொலிக்குமா?; பாஜகவை ‘தாளிக்கும்’ மீம் கிரியேட்டர்கள்!

குஜராத் தேர்தல் முடிவு தமிழகத்தில் எதிரொலிக்குமா?; பாஜகவை ‘தாளிக்கும்’ மீம் கிரியேட்டர்கள்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
குஜராத், ஹிமாச்சல் பிரதேச மாநில தேர்தல் முடிவுகளின் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்ற பாஜக தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா ஆகியோரை மீம் கிரியேட்டர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். தமிழகத்தில் ஒருபோதும் மதவாத அரசியல் எடுபடாது என்றும் சூடாக பதிலடி கொடுத்துள்ளனர். நடந்து முடிந்த குஜராத் மற்றும் ஹிமாச்சல்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஒரு வாக்கு அல்லது ஒரு தொகுதி முன்னிலை பெற்றாலும் வெற்றிதான். அதனால் வேண் டுமானால் தேர்தல் வெற்றியை பாஜக கொண்டாடலாமே தவிர, சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும் வெற்றி அல்ல. குறிப்பாக, குஜராத் மாநிலத்தில். குஜராத் மாநிலத்தில் ஒட்டுமொத்த காபினெட் அமைச்சர்களையும் களமிறக்கி, தேர்தல் வேலை பார்த்தது பாஜக. காங்கிரஸின் மணிசங்கர அய்யர், பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு தன்னை கொல்ல சதி செய்வதாகவெல்லாம் உச்சக...
பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் திடீர் தற்கொலை ஏன்?;  கைது நடவடிக்கைக்கு பயந்து விஷம் குடித்தாரா?; திடுக்கிடும் தகவல்கள்!

பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் திடீர் தற்கொலை ஏன்?; கைது நடவடிக்கைக்கு பயந்து விஷம் குடித்தாரா?; திடுக்கிடும் தகவல்கள்!

அரசியல், ஈரோடு, கல்வி, சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அங்கமுத்து (58) திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தோப்புப்பாளையத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து (58). சேலம் பெரியார் பல்கலையில் உடல்கல்வி இயக்குநராக பணியாற்றி வந்தார். நேற்று (டிசம்பர் 18, 2017) காலை அவர் வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்தார். இதையறிந்த அவருடைய மனைவி விஜயலட்சுமி, உடனடியாக அருகில் உள்ள தன்வந்திரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு கைவிரித்த நிலையில், கணவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே அங்கமுத்து இறந்துவிட்டது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த பெருந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கவேல், தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறார். அவர...
குஜராத், ஹிமாச்சலில் பாஜக வெற்றி!; காரணம் என்ன?; சரிகிறதா  மோடி இமேஜ்?

குஜராத், ஹிமாச்சலில் பாஜக வெற்றி!; காரணம் என்ன?; சரிகிறதா மோடி இமேஜ்?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
குஜராத் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்ததிலும், ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியதிலும் பாஜக அபாரமாக வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், சொந்த மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு வெகுவாக சரிந்திருப்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தொடர்ந்து 6வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. சுயேட்சைகளுக்கு 6 இடங்கள் கிடைத்து இருக்கின்றன. ஹிமாச்சல்பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பாஜக 44 இடங்களிலும், ஆளுங்கட்சியான காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. சுயேட்சைகள் 3 தொகுதிகளில் வென்றுள்ளனர். ஹிமாச்சல் பிரதேசத்தை க...
காங்கிரஸ் கட்சித் தலைவரானார் ராகுல் காந்தி!

காங்கிரஸ் கட்சித் தலைவரானார் ராகுல் காந்தி!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். வரும் 16ம் தேதி அவர் முறைப்படி தலைவர் பொறுப்பை ஏற்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக கடந்த 19 ஆண்டுகளாக இருந்து வருபவர் சோனியா காந்தி. சீதாராம் கேசரிக்குப் பிறகு, நேரு குடும்பத்தில் இருந்து அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கட்சியின் தேசிய துணைத்தலைவராக கடந்த 2013ல் நியமிக்கப்பட்டார் ராகுல் காந்தி. தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை இழந்து வந்த காங்கிரஸ் கட்சி, கடந்த 2014ல் நடந்த மக்களவை தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்தது. கடந்த 2004, 2009 என தொடர்ந்து இரு மக்களவை தேர்தல்களிலும் வெற்றி பெற்று மத்தியில் தொடர்ந்து ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சி, அண்மைக் காலங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் ராகுல் காந்தியை நியமிக்...