Friday, April 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

திண்ணை

சேலத்தில் சாராய சாம்ராஜ்யம்தான் நடக்குது!; போலீஸ் கமிஷனர் டென்ஷன்

சேலத்தில் சாராய சாம்ராஜ்யம்தான் நடக்குது!; போலீஸ் கமிஷனர் டென்ஷன்

சேலம், திண்ணை, முக்கிய செய்திகள்
  ''சேலத்தில் ராம ராஜ்ஜியம் நடப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் சந்துக்கடைகள் மூலமாக மது விற்பனை நடப்பதாக மக்களிடம் இருந்து புகார்களை பார்க்கும்போது என் நம்பிக்கை பொய்த்துவிட்டது. குற்றங்களை தடுக்காத இன்ஸ்பெக்டர்கள் மீது கடுமையான ஆக்ஷன் எடுக்கப்படும்,'' என்று சேலம் போலீஸ் கமிஷனர் சங்கர் எச்சரித்துள்ளார்.   சேலம் மாநகரில் ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்குவதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து கடந்த பத்து நாள்களாக போலீசார் ரவுடிகளை கைது செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த பரபர ஆக்ஷனில் கடந்த 9ம் தேதி 37 ரவுடிகள் உள்பட 57 பேரும், 12ம் தேதி 39 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் ஜவஹர், அறிவு என்கிற அறிவழகன், மணியனூர் வைத்தி, கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சுலைமான், ஜான், டெனிப...
வசூல் ராணி ஆன அரசுக் கல்லூரி முதல்வர்!

வசூல் ராணி ஆன அரசுக் கல்லூரி முதல்வர்!

கல்வி, சேலம், தமிழ்நாடு, திண்ணை
தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கலை, அறிவியல் கல்லூரிகளை தேசிய தர மதிப்பீட்டுக் குழு எனப்படும் 'நாக்' குழு, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை நேரில் ஆய்வு செய்து, தரத்தை உறுதிப்படுத்துவது நடைமுறை.   அதன்படி, 'நாக்' குழு இரண்டு மாதங்களுக்கு முன்பு, சேலம் அரசு இருபாலர் கலை, அறிவியல் கல்லூரிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலையின் துணை வேந்தர் தலைமையில், கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தர் கல்லூரி பேராசிரியர் ஒருவர், பெங்களூர் அரசுக்கல்லூரி பேராசிரியர் ஒருவர் என மூன்று பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.   இக்குழுவின் வருகையையொட்டி, கல்லூரி சுற்றுச்சுவர், வகுப்பறைகள், அலுவலக அறைகளுக்கு புதிதாக பெயிண்ட் அடிக்கும் பணிகளும், மராமத்துப் பணிகளும் நடந்தன. இது போன்ற பணிகளை, பொதுப்பணித்துறையினர் மூலமாகத்தான் மேற்கொள்ள வேண்டும். கல்லூரியே மேற்கொள்வதாக இருந்தால், ...
டிடிவி தினகரன் ஜுரத்தில் ஆட்சியாளர்கள்;  ஆட்சியை கைப்பற்றுவாரா? கலைப்பாரா?

டிடிவி தினகரன் ஜுரத்தில் ஆட்சியாளர்கள்; ஆட்சியை கைப்பற்றுவாரா? கலைப்பாரா?

அரசியல், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
குமரியைப் புரட்டிப்போட்ட ஒகி புயலைக்கூட ஒப்பேற்றிவிட்ட இபிஎஸ் - ஓபிஎஸ் கூட்டணியினர், டிடிவி தினகரனின் எழுச்சியை சமாளிக்க முடியுமா என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர். கட்சி, ஆட்சி அதிகாரம் இரண்டிலும் மன்னார்குடி கும்பலின் சுவடே இருக்கக்கூடாது என்பதுதான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு டெல்லி மேலிடம் இட்ட கட்டளை. குட்டாக இருந்தாலும் துட்டாக இருந்தாலும் வாங்கியே பழக்கப்பட்டவர்கள் இருப்பதை இழக்க விரும்புவார்களா என்ன? அதனால்தான் சமயம் பார்த்து, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை ஓரங்கட்டினர். காலடியிலேயே கிடந்தவர்கள் புதிய எஜமானர்களின் உத்தரவுக்கு அஞ்சி நடப்பதை சற்றும் ஜீரணிக்க இயலாத மன்னார்குடி கும்பல், ஆட்சி அதிகாரத்தில் நேரடியாக களமிறங்குவதுதான் கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வந்தனர். அதன் விளைவாகத்தான், அமலாக்கப...