Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

லெனோவா கே8 நோட் விரைவில் அறிமுகம்.!

லெனோவா நிறுவனம் பொதுவாக பல்வேறு பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்துவருகிறது,மேலும் தற்போது லெனோவா நிறுவனம் புதிய லெனோவா கே8 நோட் என்ற மாடலை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது, அதன்பின் மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன். லெனோவா கே8 நோட் வரும் 09.08.2017 அன்று அறிமுகப்படுத்தபடும் என லெனோவா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஆண்ட்ராய்டு: லெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போன் பொதுவாக ஸ்னாப்டிராகன் 660 செயலியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம்: இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிக்கும் வசதி இவற்றில் உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

லெனோவா கே6 நோட்: லெனோவா கே6 நோட் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் இரட்டை சிம் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது, மேலும் 4000எம்ஏஎச் பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.
லெனோவா கே6 நோட்: இக்கருவி ஸ்னாப்டிராகன் 430செயலி கொண்டுள்ளது, அதன்பின் 16எம்பி ரியர் கேமரா வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது. இதன் விலைப் பொறுத்தவரை 13,999ஆக உள்ளது.