Thursday, March 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

மற்றவை

ஊழல் தாண்டவமாடும்  உணவு பாதுகாப்புத்துறை – ஆதாரத்துடன் அம்பலம்

ஊழல் தாண்டவமாடும் உணவு பாதுகாப்புத்துறை – ஆதாரத்துடன் அம்பலம்

குற்றம், சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வசூல் வேட்டையில் திளைக்கும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளால், மக்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எந்த அளவுக்கு ஒரு சட்டம் கடுமையாக நிறுவப்படுகிறதோ அதே அளவுக்கு அதில் ஊழலும் மலிந்து கிடப்பது ஆகப்பெரிய முரண். அப்படி லஞ்சம், ஊழலில் அதிகாரிகள் திளைக்கும் துறையாக உணவுப் பாதுகாப்புத்துறை மாறிவிட்டது. ஆதாரத்துடன் இங்கே அம்பலப்படுத்துகிறோம். அதற்குமுன், இந்த சட்டத்தைப் பற்றிய சில முன்தகவல்கள்... நுகர்வோருக்கு தரமான உணவுப்பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதுதான்,உணவுப்பாதுகாப்புத் துறையின் மைய நோக்கம். குடிநீர் முதல் உப்பு வரை உட்கொள்ளத்தக்க எந்த ஒரு பொருளும் இதனுள் அடங்கும். இதற்காகவே உணவுப்பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம்-2006 இயற்றப்பட்டு, நாடு முழுவதும் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. சாலையோர தள்ளுவண்டிக் கடைக்...
தோல்விகளும் சுகமானவைதான்..! – தில்லைக்கரசி நடராஜன் எழுதும் தன்னம்பிக்கை தொடர்

தோல்விகளும் சுகமானவைதான்..! – தில்லைக்கரசி நடராஜன் எழுதும் தன்னம்பிக்கை தொடர்

சிறப்பு கட்டுரைகள், தன்னம்பிக்கை, மகளிர்
-தில்லை தர்பார்- பெண்கள் முன்னேற்றம் என்பது ஆண்களுக்கு எதிரான போர்க்கொடியா? இல்லையில்லை. பெண்கள் கல்வி, தொழில், பொருளாதாரம், அரசியல் போன்ற எல்லா விஷயங்களிலும் சுய முன்னேற்றம் பெற்று குடும்பத்தையும், சமுதாயத்தையும் மேம்படுத்துவதுதான் பெண்கள் முன்னேற்றம். எனதருமை தோழிகளே... தோற்றுப்போங்கள். ஆச்சரியமாக உள்ளதா? நீங்கள் ஒவ்வொரு முறையும் தோற்கும் போதெல்லாம் மனது வலிக்கும்; ஆனாலும், தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்ட அனுபவ பாடங்கள், அடுத்தடுத்த புதிய முயற்சிகளில் ஈடுபட போதுமான தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும்.   ஒருவேளை, நீங்கள் தோற்காமலே போயிருந்தால் உங்கள் வாழ்க்கையில் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.   தோல்விகளும்கூட சுகமானவைதான். தோற்றுப்போய் அதிலிருந்து மீண்டு வெளிவரும்போது உங்களில் ஒரு புதிய மாற்ற...
பெண்ணே நிர்வாக ஆளுமையில் சிறந்தவள்! – சொல்கிறார் லட்சுமி சித்தார்த்தன்; டி.எம்.எஸ். கண் மருத்துவமனை இயக்குநர்

பெண்ணே நிர்வாக ஆளுமையில் சிறந்தவள்! – சொல்கிறார் லட்சுமி சித்தார்த்தன்; டி.எம்.எஸ். கண் மருத்துவமனை இயக்குநர்

சிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர், முக்கிய செய்திகள்
திட்டமிட்ட நேர மேலாண்மை இருந்தால், நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்திற்கு பல்வேறு விதங்களிலும் ஆக்கப்பூர்வமாக பங்களிக்க முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம், லட்சுமி சித்தார்த்தன். இவர், சேலம் சாரதா கல்லூரிச்சாலை எல்ஆர்என் காலனியில் உள்ள டிஎம்எஸ் கண் மருத்துவமனையின் இயக்குநர். இது மட்டுமல்ல. லேடீஸ் சர்க்கிள், சேலம் சிட்டிசன் ஃபோரம், இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ), சேலத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் 'இன்டேக்' உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்தும் செயல்பட்டு வருகிறார். லட்சுமி சித்தார்த்தனின் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே பாரம்பரியம் மிக்கது. இலங்கையின் கொழும்பு நகரம்தான் இவருடைய பூர்வீகம். ஈழ மண்ணில் தொடங்கப்பட்ட முதல் தமிழ் பத்திரிகையான 'வீரகேசரி' நாளேட்டின் நிறுவனரான நடேசன் அய்யாவின் பேத்திதான் இவர். இவருடைய கணவர் சித்தார்த்தன். சேலம் அறிந்த பிரபல கண் மருத்துவர். காங்கிரஸ் கட்சியின் மூத...
இன்றைய பெண்கள்  நிலவுகள் அல்ல; சூரியன்கள்… – தில்லைக்கரசி நடராஜன்

இன்றைய பெண்கள் நிலவுகள் அல்ல; சூரியன்கள்… – தில்லைக்கரசி நடராஜன்

தன்னம்பிக்கை, மகளிர், முக்கிய செய்திகள்
("புதிய அகராதி", ஏப்ரல்-2017 இதழில்) இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் கனடா நாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு, நான் பணிபுரிந்து வந்த சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி மூலம் எனக்குக் கிடைத்தது. (வகுப்பறையில் வாசிக்கவும் வாழ்க்கையில் சுவாசிக்கவும் கற்றுக்கொடுத்த என் குருகுலத்திற்கு நன்றிகள்). கனடாவில் டொராண்டோ ஹம்பர் பல்கலைக் கழகத்தில் பெண்கள் மேம்பாட்டுக்கான மூன்று வாரப்பயிற்சி எங்களுக்கு வழங்கப்பட்டது. முதல் நாள் அனுபவமே மொத்த பயிற்சியின் சாராம்சத்தை சொல்லிக்கொடுத்தது. அன்று காலை இடைவேளையின்போது நானும் என்னுடன் பயிற்சிக்கு வந்திருந்த இரண்டு பெண் ஆசிரியர்களும் கழிப்பறைக்குச் சென்றிருந்தோம்.   அங்கே மிக அழகான செல்லுலாய்டு பொம்மை கணக்காய் ஓர் இளம்பெண் கழிப்பறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். "இவ்வளவு அழகான பெண் கழிப்பறையைச் சுத்தம் செய்து க...
“சாதியை ஒழிக்காமல் மலக்குழி சாவுகளை தடுக்க முடியாது” -‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யா

“சாதியை ஒழிக்காமல் மலக்குழி சாவுகளை தடுக்க முடியாது” -‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யா

அரசியல், கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
(ஏப்ரல்-2017, "புதிய அகராதி" இதழில்...)   ‘கக்கூஸ்’ அவணப்படத்தின் மூலம் மனிதக்கழிவு அகற்றும் தூய்மைப் பணியாளர்களின் துயர நிலையை, அவர்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார் திவ்யபாரதி. அவருடனான உரையாடலில் இருந்து…   புதிய அகராதி: துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் நோக்கம் எப்போது வந்தது?   திவ்யா: கடந்த 2015ம் ஆண்டு மதுரையில், மலக்குழியில் இறங்கி வேலை செய்த இரண்டு தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி இறந்து விட்டனர். இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, உரிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு, அலட்சியமாக இருந்த அதிகாரிகளை கைது செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி எங்கள் அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகளும் போராடின.   அப்போது, இறந்த ஒரு தொழிலாளியின் இளம் மனைவி 'வா மாமா வ...
உப்பில்லாமல் சாப்பிட முடியாது! நட்பில்லாமல் வாழ முடியாது!! – தில்லைக்கரசி நடராஜன்

உப்பில்லாமல் சாப்பிட முடியாது! நட்பில்லாமல் வாழ முடியாது!! – தில்லைக்கரசி நடராஜன்

சிறப்பு கட்டுரைகள், தன்னம்பிக்கை, மகளிர்
- தில்லை தர்பார் -   தன்னம்பிக்கை என்பது கடையில் வாங்கும் பொருளல்ல. ஆனாலும், அதைப்பெற என்ன செய்வது என்று யோசித்து பார்த்தபோது உடனே ஞாபகம் வந்தது ஓர் அருமையான நண்பரின் பெயர்.   எட்டு வருடங்களுக்கு முன்னால் திடீரென்று என் கணவருக்கு ஒரு விபத்து நேர்ந்தது. உதவிக்கு ஓடி வந்தது நண்பர் கூட்டம். உறவுகள் வேண்டாமென்று சொல்லவில்லை. உறவுகளைத் தாண்டி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், நாம் துன்பப்படும்போது, 'நான் இருக்கிறேன்' என்று ஆறுதல் சொல்லும் நண்பர்களின் வார்த்தைகள் பெரிய டானிக்.   பல வருடங்களுக்கு முன்னால், பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நான்கு மாணவர்கள் எனக்கு நன்கு பரிச்சயமானவர்கள். அதில் மூன்று பேருக்கு அவர்கள் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது வேலை கிடைத்து விட்டது. அந்த மூன்று பேரில் ஒருவன் என்னைப் பார்க்க வந...
சோழர்கள் வரலாறு புறக்கணிப்பு…! -அறம் கிருஷ்ணன்

சோழர்கள் வரலாறு புறக்கணிப்பு…! -அறம் கிருஷ்ணன்

இந்தியா, கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வரலாறு
  ஓசூரில் 100 தொழிலாளர்களுடன் இயங்கும் அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையின் அதிபர். அலட்டல் இல்லாத கவிஞர். 'கவிக்கோ' அப்துல் ரஹ்மான், வைரமுத்து, அறிவுமதி ஆகியோரை வைத்து மூன்று கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.   இவற்றையெல்லாம் விட அவர் பெருமையும், மன நிறைவும் அடைவது தன்னை ஒரு 'வரலாற்று ஆய்வாளர்' என்று சொல்லிக்கொள்வதில்தான் என்றால் மிகையாகாது. இப்படி பன்முகத்தன்மையுடன் திகழ்பவர்தான், 'அறம்' கிருஷ்ணன். அவருடனான உரையாடலில் இருந்து... புதிய அகராதி: உங்கள் பெயரின் முன்னொட்டாக 'அறம்' ஒட்டிக்கொண்டது எப்படி?   அறம் கிருஷ்ணன்: எனக்குள் இருக்கும் இலக்கிய ஆர்வம் காரணமாக, 'அறம் இலக்கிய அமைப்பு' என்ற அமைப்பை தொடங்கினேன். அதன்மூலம், ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தி வருகிறோம். அறம் என்றாலே கொடுப்பதுதானே.   அதனால் விழா நடைபெறு...
‘சின்னவீடு’க்கு செருப்படி…! மழைக்காக நூதன சடங்கு ‘சேலம் மக்களின் சுவாரஸ்ய கலாச்சாரம்’

‘சின்னவீடு’க்கு செருப்படி…! மழைக்காக நூதன சடங்கு ‘சேலம் மக்களின் சுவாரஸ்ய கலாச்சாரம்’

கலாச்சாரம், சேலம்
தமிழகத்தில் ஓராண்டின் சராசரி மழை அளவு 958 மி.மீ., ஆனால் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது மழைப்பொழிவு குறைந்து, கடும் வறட்சி நிலவுகிறது. இதேபோன்ற வறட்சி, கடைசியாக 1876ல் நிலவியதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. ஆன்மீக நம்பிக்கையாளர்கள் மழை வேண்டி பரவலாக யாகம் நடத்தி வரும் வேளையில், சேலம் பட்டைக்கோயில் அருகே கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள், 'கொடும்பாவி' சடங்கு என்ற நூதனமான சடங்கை கடைப்பிடித்து வருகின்றனர். "வருண பகவான்தான் நமக்கெல்லாம் மழையைக் கொடுக்கிறார். அவரை, 'கொடும்பாவி' என்ற பெண் மயக்கி தன் வசப்படுத்தி வைத்துக் கொள்கிறாள். வருண பகவான் தன் மனைவிக்குத் தெரியாமல், அடிக்கடி கொடும்பாவி வீட்டுக்குச் சென்று விடுகிறார். அங்கிருக்கும் காலங்களில் மழை வருவதில்லை. வறட்சி ஏற்படுகிறது. அதனால் நாங்கள் கொடும்பாவியை உருவப்பொம்மையாக செய்து, அதை செருப்பால் அடித்து அசிங்க...
சட்டம் அறிவோம்: உயில்…! ‘அவசியமும் நடைமுறைகளும்’ – சுரேஷ், வழக்கறிஞர்

சட்டம் அறிவோம்: உயில்…! ‘அவசியமும் நடைமுறைகளும்’ – சுரேஷ், வழக்கறிஞர்

தமிழ்நாடு, மற்றவை, முக்கிய செய்திகள்
நாம் பயணிக்கும் இந்த வாழ்க்கையில் விரும்பியோ விரும்பாமலோ ஒவ்வொரு நாளும் சட்டமும் அதன் பயன்களும் நமக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் சிலவற்றையாவது நாம் அறிந்து வைத்திருப்பது இன்று காலத்தின் கட்டாயம். இந்த பதிவில் உயில் மற்றும் அதை சார்ந்த சில தகவல்களைப் பார்க்கலாம்.   மரணப்படுக்கையில் இருக்கும் போது எஸ்.வி.ரங்காராவோ அல்லது நாகையாவோ உடனே, “வக்கீல கூப்புடுங்க உயில் எழுதணும்,” என்று இருமிக்கொண்டே சொல்லும் பழைய கருப்பு வெள்ளை சினிமா காலத்திலிருந்தே உயில் என்றால் ஒருவருடைய மரண சாசனம் என்று நாம் இன்றும் நம்பிக்கொண்டிருக்கிறோம். இது முற்றிலும் தவறான அணுகுமுறை. உயில் என்பது ஒருவருடைய வாழ்வின் சாசனம் (Life Testimony). ஒருவரின் வாழ்வில் நடந்த அதிமுக்கியமான நிகழ்வுகளும் அவரின் வாழ்க்கைக்குப்பிறகு அவர் சொல்ல அல்லது சொத்து சம்பந்தமாக செய்ய ...
பூவனம்: வான் தொட்டில் (கவிதை) – ஆ.மணிவண்ணன்

பூவனம்: வான் தொட்டில் (கவிதை) – ஆ.மணிவண்ணன்

இலக்கியம், புத்தகம்
காக்கி உடைக்குள் இப்படியும் ஒரு கவிஞனா? என ஆச்சர்யம் கொள்ள வைக்கிறார், மதுரையைச் சேர்ந்த முனைவர் ஆ.மணிவண்ணன். 'வான் தொட்டில்' கவிதை நூலை வெளியிட்டுள்ள இவர், காவல்துறை உதவி ஆணையராக பணியாற்றுகிறார். நூல் வெளியீடு, வானதி பதிப்பகம். காவல்துறை அதிகாரி என்பதால் துறை சார்ந்த முன்னாள், இந்நாள் உயரதிகாரிகளிடம் வாழ்த்துரை பெற்றிருக்கிறார். டிஜிபி கி.ராதாகிருஷ்ணன் தனது வாழ்த்து மடலில், 'பகலில் காவலராகவும் இரவில் கவிஞராகவும் பரிணமித்திருக்கிறார்' என சுட்டியுள்ளார். 'வான் தொட்டில்' நூல், அறம், சட்டத்தை மதித்தல், குடும்பம், கடமை, ஆன்மீகம் ஆகியவற்றைப் பேசுகிறது. செலவில்லாமல் கிடைப்பதும், மதிக்கப்படாமலே போவதும் எதுவென்றால் இரண்டுக்கும் ஒன்றேதான் பதிலாக அமையும். அது, அறிவுரைகள். பொருள் சார்ந்து இயங்கும் இன்றைய உலகில் அறிவுரைகள் சொல்பவர்கள்கூட அருகிவிட்டனர். தான் சந்தித்த அனுபவங்கள் வாயிலாக இளைஞர்...