Wednesday, January 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சினிமா

ஹீரோ அவதாரம் எடுத்த ‘மொட்டை’ ராஜேந்திரன்!

ஹீரோ அவதாரம் எடுத்த ‘மொட்டை’ ராஜேந்திரன்!

சினிமா, முக்கிய செய்திகள்
இயக்குநர் பாலா ஆக்கத்தில் வெளியான 'நான் கடவுள்' படத்தில் மாற்றுத்திறனாளிகளை வைத்து பிச்சை எடுக்கும் கொடூர வில்லனாக நடித்தவர், 'மொட்டை' ராஜேந்திரன். ஆரம்பத்தில் சண்டைக்கலைஞராக இருந்து வந்த அவர், 'நான் கடவுள்' படத்திற்குப் பிறகு முழு நேர நடிகரானார். 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்திற்குப் பின்னர் அவருக்கு தொடர்ந்து காமெடி வேடங்களும் கிடைத்து வருகின்றன. இன்றைக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். சந்தானம், முழுநேர கதாநாயகன் அவதாரம் எடுத்துவிட்ட நிலையில், இப்போது மொட்டை ராஜேந்திரனுக்கும் நாயகன் ஆசை எட்டிப்பார்த்துள்ளது. எல்எஸ்கே மூவீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் 'மோகனா' என்ற படத்தில் மொட்டை ராஜேந்திரன்தான் கதாநாயகன். அவருக்கு ஜோடியாக மலையாள வரவான கல்யாணி நாயர் நடிக்கிறார். இருவரும் திருமணம் முடிந்து தேனிலவுக்காக செல்லும் இடத்தில் ஒ...
‘மெர்சல்’ படத்திற்கு மீண்டும் சிக்கல்; தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?

‘மெர்சல்’ படத்திற்கு மீண்டும் சிக்கல்; தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?

இந்தியா, உலகம், சினிமா, முக்கிய செய்திகள்
'மெர்சல்' படத்திற்கு விலங்குகள் நலவாரியத்திடம் இருந்து ஆட்சேபனையில்லா சான்றிதழ் இன்னும் பெறப்படாததால், திட்டமிட்டபடி தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதில் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் - இயக்குநர் அட்லி கூட்டணியில் சுமார் ரூ.135 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது 'மெர்சல்'. ஸ்ரீதேனாண்டால் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் முரளி ராமசாமி படத்தை தயாரித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் விஜய் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேஜிக் கலைஞராகவும் முதன்முதலாக நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏற்கனவே பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வரும் 18ம் தேதி வெளியிடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்...
‘போதை’ நடிகருக்கு ஏற்பட்ட கதி!

‘போதை’ நடிகருக்கு ஏற்பட்ட கதி!

சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'சுப்ரமணியபுரம்', 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி' ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜெய். சென்னையில் வசிக்கிறார். கடந்த செப். 21ம் தேதி, அடையாறு பாலம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச்சென்றார். திடீரென்று கார், பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. காவல்துறை விசாரணையில் நடிகர் ஜெய், குடிபோதையில் காரை ஓட்டிச்சென்றது தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆனால், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஜெய் போக்குக் காட்டி வந்தார். அதனால் அவருக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவரே இன்று (அக். 7) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட், திரைப்படத்தில் கார் ஓட்டுவதுபோல் நிஜத்திலும் ஓட்டினீர்களா? என்று எச்சரித்தார். அப்போது நடிகர் ஜெய் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடு...
2000 கோடி ரூபாய் பிஸினஸை இழப்பார்களா ரஜினியும் கமலும்?

2000 கோடி ரூபாய் பிஸினஸை இழப்பார்களா ரஜினியும் கமலும்?

அரசியல், சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வெள்ளித்திரைக்கு வெளியே அரசியல் தொடர்பாக ரஜினி எப்போது பேசினாலும், அவர் மீது ரசிகர்கள் சாராத மக்களுக்கு ஒருவித அய்யப்பாடு இதுவரை இருந்து வந்திருக்கிறது. 'எல்லாம் அடுத்த பட புரமோஷனுக்கான வேலைப்பா. படம் ரிலீசாகும்போது இப்படி பேசினாத்தானே கல்லா கட்ட முடியும்...' என்ற விமர்சனங்கள் எழுவது உண்டு. அந்த விமர்சனங்களை நாம் முற்றாக புறந்தள்ளிவிடவும் முடியாது; அதேநேரம் ரஜினியின் சந்தை நிலவரம் அந்தளவுக்கு சரிந்து விட்டதாகவும் கூற முடியாது. இன்றைக்கும் தமிழில் ரஜினியை வைத்து மட்டுமே மிகப்பெரும் பட்ஜெட்டில் படமெடுக்க முடியும் என்று நம்பும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உண்டு. உதாரணம், முன்பு 'எந்திரன்'. இப்போது, '2.0'   ரஜினி ஒரு படத்துக்கு ரூ.55 கோடி ஊதியம் பெறுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், கமல்ஹாசனின் நிலவரம் அப்படிப்பட்டதன்று. ரஜினியின் ஊதியத்தில் பாதிதான் கமலின் ஊதியம் என்கிறார்கள் விவரம...
கமல் – ரஜினி: இருதுருவ அரசியலா? இணைந்த கைகளா?

கமல் – ரஜினி: இருதுருவ அரசியலா? இணைந்த கைகளா?

அரசியல், சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விரைவில் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்த கமல்ஹாசன், தன்னை மக்களுக்கு பிடிக்கவில்லை எனில், மக்கள் விரும்பும் ஒருவருக்கு இயன்ற உதவிகள் செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று திடீரென்று பல்டி அடித்துள்ளார். கோடம்பாக்கம் என்பது திரையுலகின் கனவுத்தொழிற்சாலை மட்டுமல்ல. அது, அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல் தலைவர்களை உருவாக்கும் தொழிற்கூடமாகவும் இருந்து வந்திருக்கிறது. இப்போதும் தமிழர்களில் கணிசமானோர் கோடம்பாக்கத்தின் வாசலில்தான் தலைவர்களை தேடிக்கொண்டிருக்கின்றனர். கமல், ரஜினி ஆகியோருக்குள் எழுந்துள்ள அரசியல் அபிலாஷைகளும் அத்தகையதுதான். அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்பது தேர்தலில்தான் தெரியும். இருவருமே தனித்து இயங்குவது குறித்துதான் பேசி வருகின்றனர். ஆனாலும், தமிழருவி மணியன் போன்றவர்கள் ரஜினி, கமல் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தங்களின் உள்ளக்கிடக்கையை வெளிப...
கமல்ஹாசனின் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது: சங்கர் அறிவிப்பு

கமல்ஹாசனின் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது: சங்கர் அறிவிப்பு

அரசியல், சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் பெரும் வெற்றி பெற்ற 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருவரும் முடிவு செய்துள்ளனர். கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக வெளிப்படையாகவே சொல்லி வருகிறார். தற்போது அரசியல் கட்சிக்கான பெயர், கொள்கை முடிவுகள் வகுக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தீவிர அரசியலில் ஈடுபட நேர்ந்தால், திரைத்துறையில் இருந்து விலகிவிடுவதாகவும் அறிவித்து இருந்தார். இந்நிலையில், கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து, பெரிய வரவேற்பை பெற்ற 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க அவரும், இயக்குநர் சங்கரும் முடிவு செய்துள்ளனர். தற்போது ரஜினியின் 2.0 பட வேலைகளில் ஈடுபட்டுள்ள இயக்குநர் சங்கர், அடுத்து அஜித்குமார் அல்லது கமல்ஹாசன் ஆகியோரில் ஒருவரை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் பரவின. கமல்ஹாசனுடன் இணைவதாக இரு...
‘கருப்பன்’ – திரை விமர்சனம்!

‘கருப்பன்’ – திரை விமர்சனம்!

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆயுதபூஜை விடுமுறையைக் குறிவைத்து (செப். 29) வெளி வந்திருக்கும் படம் 'கருப்பன்'. நடிகர்கள்: விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா, பசுபதி, கிஷோர், சரத் லோகித்ஷ்வா, சிங்கம் புலி, ரேணுகா, காவேரி மற்றும் பலர். இயக்கம்: ஆர்.பன்னீர்செல்வம். இசை: டி.இமான். ஒளிப்பதிவு: சக்திவேல். தயாரிப்பு: ஏ.எம்.ரத்னம். 'ரேணிகுண்டா' படத்தின் மூலம் இளம் குற்றவாளிகளின் கதையைச் சொல்லி, கவனம் ஈர்த்த இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விஜய் சேதுபதியின் தோளில் சவாரி செய்துள்ள படம்தான் 'கருப்பன்'. கிராமத்து மாடுபிடி வீரனின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள்தான் இந்தப் படத்தின் ஒரு வரி கதை. ஆனால், தனக்குக் கிடைக்க வேண்டிய பெண், வேறு ஒருவருக்கு கிடைத்து விட்ட ஆற்றாமையில், ஓர் இளைஞன் என்னவெல்லாம் செய்கிறான் என்ற கோணத்தில் திரைக்கதை நகர்கிறது. அப்படி தான் ஆசைப்பட்ட கதாநாயகியை பறிகொடுத்த வில்லன்தா...
‘ஸ்பைடர்’ – திரை விமர்சனம்!

‘ஸ்பைடர்’ – திரை விமர்சனம்!

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படம் 'ஸ்பைடர்'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நேற்று (செப். 27) வெளியாகி இருக்கிறது. இது ஒரு சைக்கோ திரில்லர் வகைமையிலான படம். இந்திய உளவுத்துறையில் ஃபோன் அழைப்புகளை டேப்பிங் செய்யும் பிரிவில் பணியாற்றுகிறார் ஹீரோ சிவா (மகேஷ்பாபு). சட்டத்திட்டங்களை மீறினால்தானே சாதாரண ஹீரோ, சூப்பர் ஹீரோ ஆக முடியும்?. ஸ்பைடர் ஹீரோவும் அப்படித்தான். தனது 'ஸ்பை ஆப்' மூலம், அபாயகரமான சூழலில் சிக்கித்தவிக்கும் மக்களின் பிரச்னைகளை கண்டறிந்து, அதாவது ஃபோன் பேச்சை ஒட்டுக்கேட்டு, பிரச்னையில் சிக்கும் முன்பே அவர்களை மீட்கும் வேலைகளில் ஈடுபடுகிறார் மகேஷ்பாபு. இளம்பெண் ஒருவர் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்க, அவரை காப்பாற்றுவதற்காக உடன் பணியாற்றும் சக பெண் போலீஸ் ஒருவரை அந்த பெண்ணின் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். மறுநாள் பெண் ப...
மெர்சல் படத்தின் டைட்டில் மாறுகிறதா?

மெர்சல் படத்தின் டைட்டில் மாறுகிறதா?

சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'சண்டையில கிழியாத சட்டை எங்கிட்டு இருக்கு?' என்ற 'கைப்புள்ள' வடிவேலு காமெடி போல, 'சர்ச்சையில் சிக்காமல் விஜய் படம் எப்போது ரிலீஸ் ஆகியிருக்கு?' என்று சொல்லும் காலம் வந்தாலும் ஆச்சர்யமில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் நடித்த படங்கள் ரிலீசுக்கு முன்னரோ அல்லது வெளியான பின்னரோ ஏதோ ஒரு வகையில் சர்ச்சையில் சிக்கி வருகிறது. 'தலைவா' படம் ரிலீசுக்கு முன்பே பிரச்னைகளை சந்தித்தது. அந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழ், 'பார்ன் டு லீட்' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கும். அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவினர், அந்த வார்த்தைகளுக்கு அதிருப்தி தெரிவித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின. கத்தி, துப்பாக்கி போன்ற படங்களும் நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்த பின்னரே திரைக்கு வந்தன. இந்நிலையில், சுமார் ரூ.135 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ள மெர்சல் படமும் தற்போது நீதிமன்ற வழக்கில் சிக்கி இருக்கிறது. மெர...
டெங்கு காய்ச்சலை ஒழிக்காத அரசு அகல வேண்டும்: கமல்ஹாசன் ஆவேசம்

டெங்கு காய்ச்சலை ஒழிக்காத அரசு அகல வேண்டும்: கமல்ஹாசன் ஆவேசம்

அரசியல், சினிமா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டெங்கு காய்ச்சலை தடுக்க ஆவன செய்யாத அரசு அகல வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசை காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். நடிகர் கமல்ஹாசன், விரைவில் அரசியல் களம் காண உள்ளதாகவும், தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும் சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். 100 நாள்களில் தேர்தல் வந்தாலும் தான் போட்டியிட தயாராக இருப்பதாகவும், மக்களுக்காக முதல்வர் ஆவதற்கும் தயார் என்றும் கூறியிருந்தார். டுவிட்டர் பக்கத்திலும், ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டியிலும், தற்போதுள்ள அதிமுக அரசுக்கு எதிராக அவர் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை பகிரங்கமாக முன்வைத்து வருகிறார். இதற்கிடையே, கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்தார். சில நாள்களுக்கு முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், கமல்ஹாசனை சென்னைக்கு நேரில் வந்து சந்தித்து விட்டுச் சென்றார். அரவிந்த் கேஜரிவாலுடனான சந்திப்புக்குப் பின்னர் அ...