பட்ஜெட் எதிரொலி: ரத்தக்களறியான இந்திய பங்குச்சந்தை
பியூச்சர் மற்றும் ஆப்ஷன் டிரேடிங் மீதான எஸ்டிடி வரி உயர்வு காரணமாக, பட்ஜெட் நாளான நேற்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.
இந்திய அரசின் 2026 - 2027ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் உரையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு உற்சாகம் தரும் அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்ஜெட் உரையில் அதற்கான அறிகுறிகள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
பியூச்சர் மற்றும் ஆப்ஷன் வர்த்தகத்தின் மீது எஸ்டிடி வரி உயர்வு, திரும்பப் பெறுதல்களுக்கான வரி விதிப்பு, லாப முன்பதிவு, உலோகப் பங்குகளின் வீழ்ச்சி காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகள் ரத்தக் களறியானது.
பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு, சென்செக்ஸ் மற்றும் நிப்டி 0.5 சதவீதம் வரை உயர்ந்தது. ஆனால், பட்ஜெட் தாக்கலான பிறகு சந்தையின் போக்கில் பெரும்...









