Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

வர்த்தகம்

பொருளாதார வளர்ச்சியில் சீனாவை முந்தும் இந்தியா: சொல்கிறது ஐஎம்எஃப்

பொருளாதார வளர்ச்சியில் சீனாவை முந்தும் இந்தியா: சொல்கிறது ஐஎம்எஃப்

அரசியல், இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், வர்த்தகம்
டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, நடப்பு ஆண்டில் அபரிமிதமாக இருக்கும் என்றும், சீனாவை பின்னுக்குத் தள்ளி வேகமாக வளரும் என்றும் சர்வதேச நிதியகம் (ஐ.எம்.எப்) தன்னுடைய பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.ன் வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். இருந்தாலும், நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்குவது சவால் மிகுந்ததாக இருக்கும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா தெரிவித்திருந்தார். ஜூலை 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகமானது. இதில் துவக்கத்தில் சிறிது காலத்துக்கு மந்தநிலை காணப்பட்டாலும், இது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காது என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் ஐஎம்எஃப் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. பணமதிப்பு நீக்கம்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்
இவள் புதியவள்:  ”முஸ்லிம் பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்!” சொல்கிறார் உமை பானு

இவள் புதியவள்: ”முஸ்லிம் பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்!” சொல்கிறார் உமை பானு

அரசியல், மகளிர், வர்த்தகம்
''பெண்கள் சுதந்திரமாகவும், அனைத்து உரிமைகளையும் பெற்று இருக்க வேண்டும் என்றுதான் இஸ்லாத் கூறுகிறது. ஆனால், நடைமுறையில் முஸ்லிம் பெண்களை ஆண்கள் சமுதாயம் வளர விடுவதில்லை,'' என பொறி பறக்கிறார் உமைபானு. மாவட்ட கலெக்டரை தலைவராகக் கொண்டு செயல்படும் சேலம் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் செயலாளராக, தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக இருந்து வரும் உமைபானு, இன்றைய தேதியில் பொருளாதாரத்தில் நலிவுற்ற முஸ்லிம் சிறுபான்மை பெண்களின் நம்பிக்கை நட்சத்திரம் எனலாம். தவிர, அல் அமாநாத் சோஷியல் அன்டு சாரிட்டபுள் டிரஸ்டின் தலைவராகவும் உள்ளார். பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றதாலோ என்னவோ, முஸ்லிம் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய ஊக்கியாகவும் இருந்து வருகிறார். அமைப்பின் சேவைகள், பெண்கள் அரசியல் குறித்தும் தைரியமாக பேசினார். அவர் சொல்கிறார்... என் கணவர், பாஷா. ஏற்றுமதி தொழில் செய்து
என்ஜினீயர்கள் திறந்த இயற்கை அங்காடி

என்ஜினீயர்கள் திறந்த இயற்கை அங்காடி

வர்த்தகம்
இளைஞர்கள் நாலைந்து பேர் ஒன்று சேர்ந்தாலே அவர்களிடம் வெற்று கேளிக்கைப் பேச்சுக்கள் மட்டுமே மண்டிக்கிடக்கும் என்ற பொதுப்புத்தியில் இருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கிறார்கள், சேலம் இளைஞர்கள் அறுவர். அவர்கள் ஆறு பேருமே அடிப்படையில் பொறியியல் பட்டதாரிகள். படித்தோம், கைநிறைய சம்பளம் வாங்கினோம் என்றில்லாமல், இயற்கை விவசாயிகளுக்கு தோள் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். இயற்கை விளை பொருட்களுக்கென பிரத்யேக சந்தையை உருவாக்கியதில் அவர்கள் தனித்துத் தெரிகின்றனர். [embedyt] https://www.youtube.com/watch?v=holauwiSmHk[/embedyt] சேலம் ஃபேர்லேன்ட்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே, 'கிரீனோசன்' என்ற பெயரில் இயற்கை அங்காடி நடத்தி வருகின்றனர். செல்வம், ராஜ்குமார், வரதராஜ், செந்தில்குமார், நிவாஸ், நித்யானந்தம் ஆகிய ஆறு நண்பர்களின் ஒருங்கிணைந்த சிந்தனையின் உருவாக்கமே, 'கிரீனோசன்' (GREEN'O'SUN). 'கிரீன்+ஓ+சன்' ஆகிய சொ
பழத்திற்கொரு பாட்டு – வியாபாரத்தில் கலக்கும் தெருக்கூத்து கலைஞர்

பழத்திற்கொரு பாட்டு – வியாபாரத்தில் கலக்கும் தெருக்கூத்து கலைஞர்

வர்த்தகம்
மழைநேர இடியின்போது அர்ச்சுனனை அழைப்பது பழைமை மாறாத மனிதர்களின் வழக்கம். ஆனால், சாப்பிடாமல் அடம்பிடிக்கும் குழந்தையை சரிக்கட்ட அர்ச்சுனனை அழைக்கின்றனர் இன்றைய சேலம் மக்கள். சிறிதுநேரம் நேரடி எப்.எம். பாடலை கொடுத்துவிட்டு, பழ வியாபாரத்தை முடித்து விடும் வித்தியாசமான மனிதர்தான் அர்ச்சுனன். விற்கும் பழம் எதுவோ, அது குறித்தான செய்தியை பாடலாக படித்து விடுவது அவருடைய தனித்த அடையாளம். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காருவள்ளியைச் சேர்ந்தவர் அர்ச்சுனன். கடந்த இருபது வருடங்களாக சைக்கிளில் பழ வியாபாரம் செய்து வருகிறார். வழக்கமாக கூவி கூவி விற்பதை மாற்றி, பாட்டுப்பாடி பழங்களை விற்பனை செய்துவரும் அவரை சந்தித்தோம். "எதையாவது இட்டுக்கட்டி பாடுவது சிறுசிலிருந்தே பழகி போச்சுங்க. ஒரே இடத்துல உக்காந்து விக்காம, அவிங்க இடத்துக்கே போய் வியாபாரம் செய்யறது சரின்னு தோணுச்சு. அதிகாலை 3 மணிக்கெல்லாம் தோட்டத்துக்கு ப