Saturday, November 8மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

கிரிக்கெட்: இந்தியாவுக்கு மரண அடி கொடுத்தது இலங்கை!

கிரிக்கெட்: இந்தியாவுக்கு மரண அடி கொடுத்தது இலங்கை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
தரம்சாலாவில் இன்று நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார பெற்றி பெற்றது. இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி, ஹிமாச்சல்பிரதேச தலைநகர் தரம்சாலாவில் இன்று (டிசம்பர் 10, 2017) நடந்தது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், பனிப்பொழிவு காரணமாக பகல் 11.30 மணிக்கே போட்டி தொடங்கியது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி ஓய்வில் சென்றதால், ஒரு நாள் தொடருக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ரஹானே நீக்கப்பட்டு ஸ்ரேயாஸ் அய்யர் முதன்முதலாக ஆடும் லெவனில் இடம் பிடித்தார். டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது....
நாடி, நரம்பு, புத்தி என கொலைவெறி ஊறிக்கிடக்கும் தஷ்வந்த்!:  திடுக்கிடும் வாக்குமூலம்

நாடி, நரம்பு, புத்தி என கொலைவெறி ஊறிக்கிடக்கும் தஷ்வந்த்!: திடுக்கிடும் வாக்குமூலம்

குற்றம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை, பணத்திற்காக தாய் படுகொலை என அடுத்தடுத்த குற்றத்தில் ஈடுபட்டு வந்த தஷ்வந்த், பெற்ற தந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டு இருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை போரூரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த பிப்ரவரி மாதம், 7 வயதே ஆன ஹாஸினி என்ற சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொல்லப்பட்டாள். சந்தேகம் வராமல் இருக்க, சடலமும் எரிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் என்ற இளைஞர், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். பின்னர் பிணையில் வெளியே வந்த அவர், பெற்ற தாயென்றும் பாராமல் பணம் நகைக்காக தாய் சரளாவை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு மும்பைக்குக் தப்பி ஓடினார். சூதாட்ட பிரியரான தஷ்வந்த், மும்பையில் குதிரை பந்தயம், சீட்டாட்டம் என்று பொழுதைக் கழித்து வந்த நிலையில், தமிழக தனிப்படை காவல்துறையினரால்...
சத்யா – சினிமா விமர்சனம்

சத்யா – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காணாமல் போன பெண் குழந்தையை மீட்க போராடும் இளைஞன் சந்திக்கும் திடுக்கிடும் திருப்பங்களும், சிக்கல்களும்தான் சத்யா படத்தின் ஒன்லைன். நடிகர்கள்: சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், ஆனந்தராஜ், சதீஸ், 'யோகி' பாபு, 'நிழல்கள்' ரவி; இசை: சைமன் கே கிங்; ஒளிப்பதிவு: அருண்மணி பழனி; எடிட்டிங்: கவுதம் ரவிச்சந்திரன்; தயாரிப்பு: நாதாம்பாள் பிலிம் பேக்டரி; இயக்கம்: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. நாயகன் சத்யா (சிபிராஜ்) ஆஸ்திரேலியாவில் உள்ள ஓர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அவருடன் யோகி பாபுவும் பணியாற்றுகிறார். திடீரென்று ஒருநாள் சிபிராஜிக்கு அவருடைய முன்னாள் காதலியான ரம்யா நம்பீசனிடம் இருந்து செல்போனில் அழைப்பு வருகிறது. சிபிராஜிடம் ரம்யா நம்பீசன் அவசரமாக ஓர் உதவி கேட்க, நாயகனும் இந்தியா திரும்புகிறார். தன் நான்கு வயது பெண் குழந்தை காணவில்லை என்றும், அவளை கண்டுபிடித்து தர வேண்டும...
குஜராத்: முதல்கட்ட தேர்தலில் 68% வாக்குப்பதிவு

குஜராத்: முதல்கட்ட தேர்தலில் 68% வாக்குப்பதிவு

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு இன்று (டிசம்பர் 9, 2017) நடந்த முதல்கட்ட தேர்தலில் 68% பேர் வாக்களித்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக, 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது. அம்மாநில முதலமைச்சர் விஜய்ருபானி உள்பட 977 வேட்பாளர்கள் இன்றைய வாக்குப்பதிவை சந்தித்தனர். இவர்களில் 57 பேர் பெண் வேட்பாளர்கள். சூரத் உள்ளிட்ட சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் போன்ற பிரச்னைகள் எழுந்தாலும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது. பகரூச் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மண மேடையில் முகூர்த்தம் முடிந்து திருமண கோலத்தில் நேராக வாக்குச்சாவடிக்கு வந்து தம்பதியர் ஓட்டுப்போட்டனர். உல்லேடா பகுதியில் 126 ...
கொடிவீரன் – சினிமா விமர்சனம்

கொடிவீரன் – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
குட்டிப்புலி, கொம்பன், மருது வரிசையில் இயக்குநர் முத்தையாவின் டெம்பிளேட்டில் தடம் மாறாமல் இன்று (டிசம்பர் 8, 2017) வெளியாகி இருக்கிறது கொடிவீரன். குட்டிப்புலி படத்தில் மகனுக்கும் தாய்க்குமான பாசத்தையும், கொம்பன் படத்தில் மாமனாருக்கும் மருமகனுக்குமான பாசத்தையும், மருது படத்தில் பேரனுக்கும், பாட்டிக்குமான பாசத்தையும் சொன்ன முத்தையா, கொடிவீரன் படத்தில் அண்ணன்&தங்கை பாசத்தை பந்தி வைத்திருக்கிறார். ஒரு ஊர். மூன்று வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த அண்ணன்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கை. தங்களது தங்கைகளு க்காக எதையும் செய்யத் துணியும் அண்ணன்கள்; அவர்களுக்காக எதையும் சகித்துக்கொண்டு பாச மழை பொழியும் தங்கைகள். அவர்கள் வாழ்வில் ஏற்படும் அன்பு, காதல், துயரம், துரோகம் ஆகியவற்றை ரத்தம் சொட்டச்சொட்ட சொல்கிறது கொடிவீரன். நடிகர்கள்: சசிக்குமார், மஹிமா நம்பியார், சனுஷா, பூர்ணா, பசுபத...
லவ் ஜிஹாத் பெயரில் இளைஞரை  உயிருடன் எரித்து கொல்லும் சங்பரிவார் காட்டுமிராண்டி!; பின்னோக்கிச் செல்லும் இந்தியா!!

லவ் ஜிஹாத் பெயரில் இளைஞரை உயிருடன் எரித்து கொல்லும் சங்பரிவார் காட்டுமிராண்டி!; பின்னோக்கிச் செல்லும் இந்தியா!!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
லவ் ஜிஹாத் பெயரில் ராஜஸ்தானில் ஓர் இளைஞரை ஹிந்து தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் எரித்துக்கொல்லும் வீடியோ காட்சி காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது. பாஜக ஆட்சியில் இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த நிகழ்வு அது. எந்த இடம் என்று குறிப்பிடவில்லை. சமூகவலைத்தளங்களில் ரொம்பவே வைரல் ஆகி வருகிறது. ஓர் இளைஞரை, சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சரமாரியாக கோடாரியால் தாக்குகிறார். கீழே விழுந்த அந்த இளைஞர் கொல்லாதே....காப்பாத்துங்க....என்று கூக்குரலிடுகிறார். கெஞ்சுகிறார். இந்த அபயக்குரல் எதுவுமே அந்த ஹிந்து தீவிரவாத நபரிடம் எடுபடவில்லை. அப்போதும் ஆத்திரம் அடங்காதவராக அவர் ஓர் அரிவாளை எடுத்து வந்து, தரையில் குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் அந்த இளைஞரை மேலும் வெட்டுகிறார். அடுத்த சில நொடிகளில் அந்த இளைஞரின் சப்த நாடிகளும் ஒடுங்கி விடுகிறது. இதையடுத்து உடனடியாக அந்த காட்டு...
சாமானியர்கள் மீது மற்றுமொரு வெடிகுண்டு வீச்சு!; என்னங்க சார் உங்க சட்டம்…?

சாமானியர்கள் மீது மற்றுமொரு வெடிகுண்டு வீச்சு!; என்னங்க சார் உங்க சட்டம்…?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பாஜக தலைமையிலான மத்திய அரசை எதிர்ப்பவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அக்கட்சிக்கு முட்டுக்கொடுப்போர் கருப்பு பணம், ஊழலை ஒழிக்க வந்த ஒரே கட்சி என்ற ஒரே நிலைப்பாட்டையே முன்வைப்பர். நாம் சொல்ல விழைவது, பாஜக ஒருபோதும் சாமான்ய மக்களுக்கான அரசு அல்ல; அது, 100 சதவீதம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கானது என்பதைத்தான். அதற்கு இன்னுமொரு உதாரணம்தான், 'நிதி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்பீடு மசோதா-2017' (Financial Resolution and Deposit Insurance Bill - 2017). ஆங்கிலத்தில் சுருக்கமாக, எப்ஆர்டிஐ (FRDI). அப்படி என்ன சொல்கிறது எப்ஆர்டிஐ மசோதா? சொல்கிறோம். கடந்த ஆகஸ்ட் மாதம்தான் இந்த மசோதா மக்களவையில் சமர்ப்பி க்கப்பட்டது. விரைவில் இந்த மசோதா சட்ட வடிவம் பெறக்கூடும். வாராக்கடன் காரணமாக வங்கிகள் திவால் ஆனால், நஷ்டத்தை சமாளிக்க வங்கியில் உள்ள மக்களின் சேமிப்புத்தொகையை கபளீகரம் ச...
திமுகவுக்கு வைகோ ஆதரவு; கதற விடும் மீம் கிரியேட்டர்கள்!

திமுகவுக்கு வைகோ ஆதரவு; கதற விடும் மீம் கிரியேட்டர்கள்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மதிமுக தலைவர் வைகோ சொன்னாலும் சொன்னார், திமுக கூடாரத்தில் இருந்தே பலர் வைகோ ஆதரவை கிண்டலடித்து மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர். ஆதரவை விலக்கிக் கொள்ளச்சொல்லும்படியும் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர். சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகளுடன் டிடிவி தினகரனும் சுயேட்சையாக களம் இறங்குகிறார். இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மருது கணேஷூக்கு ஏற்கனவே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், மூன்று நாள்களுக்கு முன்பாக மதிமுகவும் திமுக வேட்பாளரை ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் வைகோ திடீரென்று அறிவித்தார். திமுக தரப்பில் இருந்து ஆதரவு கோரி தூது அனுப்பப்பட்டதா அல்லது அவரே தன்னிச்சையாக...
‘திருட்டுப்பயலே-2’ – சினிமா விமர்சனம்!

‘திருட்டுப்பயலே-2’ – சினிமா விமர்சனம்!

சினிமா, முக்கிய செய்திகள்
'இந்த உலகத்தில் யாருமே நல்லவர்கள் இல்லை. எல்லோருக்கும் இரண்டு முகங்கள் இருக்கின்றன. வாய்ப்பு கிடைத்தால் அனைவருமே தவறு செய்யக்கூடியவர்கள்தான். ஆகையால் எல்லோரையுமே சந்தேகிக்க வேண்டும்' என்ற செய்தியை உரத்துச் சொல்கிறது, 'திருட்டுப்பயலே-2' படம். நடிகர்கள்: பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா, சுசி கணேசன், எம்எஸ் பாஸ்கர்; ஒளிப்பதிவு: செல்லதுரை; இசை: வித்யாசாகர்; தயாரிப்பு; ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்; கதை, திரைக்கதை, இயக்கம்: சுசி கணேசன். ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளமே கதியாகக் கிடக்கும் ஒரு திருமணம் ஆன பெண்ணிற்கு, அதனூடாக அறிமுகம் ஆகும் ஓர் ஆணின் மூலமாக விரும்பத்தகாத நெருக்கடிகள் ஏற்படுகிறது. அந்த நெருக்கடியில் இருந்து அந்தப் பெண்ணை கணவர் காப்பாற்றினாரா?, ஃபேஸ்புக்கில் அறிமுகம் ஆன அந்த ஆண் அந்தக் குடும்பத் தலைவிக்கு எதற்காக குடைச்சல் கொடுக்கிறார்?, குடும்பத்தலைவியின் நிலை என்ன ஆனது? என்பதை...
மேகி நூடுல்ஸூக்கு மீண்டும் இடியாப்ப சிக்கல்!

மேகி நூடுல்ஸூக்கு மீண்டும் இடியாப்ப சிக்கல்!

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி நூடுஸ்ல்ஸே இடியாப்பம் போலத்தான் சுருண்டு கிடக்கும். அதற்குத்தான் இப்போது மீண்டும் இடியாப்ப சிக்கல் ஆரம்பமாகி இருக்கிறது. நம்ம ஊர்களில் குறிப்பாக கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் வீடுகளில் இரண்டே நிமிடங்களில் சமையல் வேலை முடிகிறது எனில் நிச்சயம் அவர்கள் வீட்டில் அன்றைய தினம், நூடுல்ஸ்தான் முக்கிய உணவாக இருக்கும் என்று புரிந்து கொள்ளலாம். அந்தளவுக்கு நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ், சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவாகவும் இருந்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டில் ஒருமுறை தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மேகி நூடுல்ஸில் அதிர்ச்சிகரமான பல ரசாயனங்கள் சுவைக்காக சேர்க்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுபோன்ற துரித உணவுகளில் 0.01 முதல் 2.5 பிபிஎம் வரை மட்டுமே காரீயம் சேர்க்கப்பட வேண்டும். இது ஒருவகையான செ...