Thursday, November 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

துணை வேந்தர்கள் நியமனத்தில் சமூகநீதி புறக்கணிப்பு!; 496 பதவிகளில் 48 பேர் மட்டுமே ஓபிசி!!

துணை வேந்தர்கள் நியமனத்தில் சமூகநீதி புறக்கணிப்பு!; 496 பதவிகளில் 48 பேர் மட்டுமே ஓபிசி!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நாடு முழுவதும் உள்ள இந்திய பல்கலைக்கழகங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட 496 துணைவேந்தர்களில் 48 பேர் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனால் சமூகநீதி முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதில் அய்யம் எழுந்துள்ளது. இந்தியா போன்ற பன்முகக் கலாச்சாரம் நிலவும் நாடுகளில் இடஒதுக்கீடு சட்டம் இல்லாவிட்டால், பல இனங்களே எழுத்தறிவின்றி போய்விடும். அந்த சாபம், தலைமுறை தலைமுறையாக தொடரவும் கூடும். இதை உணர்ந்ததால்தான் திராவிட இயக்கங்கள், சமூகநீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. வருகின்றன. ஆனால், பாஜக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் 'கிரீமி லேயர்' குறித்து அடிக்கடி பொது விவாதத்திற்கு வருவதை அறியலாம். அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் அடிப்பொடிகள் கூட்டமோ, இட ஒதுக்கீடு என்பதை பிச்சை இடுவது அல்லது பிச்சை பெறுவதற்குச் சமம் என்பதுபோல் பேசுகின்றனர். என்னளவில் இட ஒதுக்க...
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்?; அதிர்ச்சிகர தகவல்கள்!

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்?; அதிர்ச்சிகர தகவல்கள்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
இந்திய உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நான்கு பேர் திடீரென்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சீறிப்பாய்ந்த விவகாரத்தின் பின்னணியில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் உச்சபட்ச அதிகாரம் படைத்தது உச்சநீதிமன்றம். நிர்வாக ரீதியாக எத்தனை காழ்ப்புணர்வுகள் இருந்தாலும் ஆளும்தரப்புடனான ரகசிய லாபியுடன் சுமூக முடிவு எடுக்கப்பட்டு, விவகாரம் அமுக்கப்பட்டு விடும். ஆனால், உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று (ஜனவரி 12, 2018) திடீரென்று ஊடகங்களைச் சந்தித்தது, இதுவரை இந்தியா வரலாற்றில் நிகழாதது. அவர்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்புக் கூட்டமே, நாடு முழுவதும் பெரும் விவாதங்களையும், பரபரப்பையும் எழுப்பிய நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சொல்லப்பட்ட குற...
இனிமேல் பெட்டிக்கடை வைக்கவும் ஆதார் கட்டாயம்; ஹைகோர்ட் சொல்லிடுச்சு!

இனிமேல் பெட்டிக்கடை வைக்கவும் ஆதார் கட்டாயம்; ஹைகோர்ட் சொல்லிடுச்சு!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிறப்பு முதல் இறப்பு வரை ஆதார் அட்டை அவசியம் என்ற நிலையில், இப்போது சாலையோரங்களில் பெட்டிக்கடை வைப்பதென்றாலும் ஆதார் அட்டை அவசியம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலையோரம் பெட்டிக்கடை வைக்க அனுமதி வழங்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அப்போது மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெட்டிக்கடை நடத்த உரிமம் பெறுபவர்கள் வேறு நபர்களுக்கு விற்றுவிடுவதாகக் கூறினார். இதனையடுத்து, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: ஒரு நபர் அதிக பெட்டிக்கடைகளை திறக்க தடை விதிக்க ஏதுவாக, அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்போது, ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். அவ்வாறு விண்ணப்பம் செய்யும் போது, ஒரு மாதத்தில் பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அருகே பெட்டிக்கடை வைக்கவும், சிகரெட் ...
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பரபரப்பு புகார்!: இந்தியா சந்தித்திராத விநோதம்!!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பரபரப்பு புகார்!: இந்தியா சந்தித்திராத விநோதம்!!

இந்தியா, முக்கிய செய்திகள்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதே சக நீதிபதிகள் இன்று (ஜனவரி 12, 2018) புகார் கூறியிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உச்சநீதிமன்ற நிர்வாகம் குறித்தும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் இன்று காலை கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்திய வரலாற்றில் இதற்கு முன்பாக, நீதிபதிகள் குறிப்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊடகத்தினரைச் சந்தித்து பேட்டி கொடுத்தது கிடையாது என்பதால், தலைநகர் டெல்லி பெரும் பரபரப்பானது. நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நீதிபதி செல்லமேஸ்வர், “இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாதவகையில் நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு...
குலேபகாவலி – சினிமா விமர்சனம்

குலேபகாவலி – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடனப்புயல் பிரபுதேவா நடிப்பில், 15 நாள் இடைவெளியில் வெளிவந்திருக்கும் இரண்டாவது படம், 'குலேபகாவலி'. உலகம் எங்கும் இன்று (ஜனவரி 12, 2018) வெளியாகி இருக்கிறது. நடிப்பு: பிரபுதேவா, ஹன்சிகா மோத்வானி, ரேவதி, 'முனீஸ்காந்த்' ராம்தாஸ், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், யோகி பாபு, சத்யன் மற்றும் பலர்; இசை: விவேக் & மெர்வின்; ஒளிப்பதிவு: ஆனந்தகுமார்; தயாரிப்பு: கேஜேஆர்; இயக்கம்: கல்யாண். கதை என்ன?: பிரிட்டிஷ்காரர் ஒருவர் 1945ம் ஆண்டு, இந்தியாவை விட்டு வெளியேறுகிறார். அவர் செல்லும்போது, அவரிடம் இருக்கும் விலை உயர்ந்த வைரங்களை திருடும் இந்தியர் ஒருவர், அதை குலேபகாவலி என்ற கிராமத்தில் புதைத்து வைக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த இந்தியரின் பேரனுக்கு குலேபகாவலி கிராமத்தில் வைர புதையல் இருப்பது தெரிய வருகிறது. அதை எடுக்க இந்தியாவுக்கு வரும் அவர், சிலை கடத்தும் கும்பலிடம் அந்த பொறுப்பை ஒப்படை...
ஜெயலலிதாவை சிறை வைத்திருந்தாரா எம்ஜிஆர்?

ஜெயலலிதாவை சிறை வைத்திருந்தாரா எம்ஜிஆர்?

அரசியல், சென்னை, தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
மக்களின் மனம் கவர்ந்த தலைவர்களின் அந்தரங்க தகவல்களைத் தெரிந்து கொள்வதில் வெகுசன மக்களுக்கு என்றுமே ஓர் அலாதி தேடல் இருந்து கொண்டே இருக்கும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கண்ட நிலையில்கூட இன்றைக்கும் அவரைப்பற்றிய ஆச்சர்யப்படத்தக்க செய்திகள் வெளிந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது ஜெ.ஜெயலலிதா. எப்போதும் பரபரப்பு அரசியலுக்கு பெயர் பெற்றவர். அவர் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி, உடல்நலக்குறைவால் மறைந்தார். அரசியலிலும் சினிமாவிலும் எதிர்நீச்சல் அடித்தே பழக்கப்பட்ட ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை, ''ஜெயலலிதா: மனமும் மாயையும்'' என்ற பெயரில் மூத்த எழுத்தாளர் வாஸந்தி எழுதி இருக்கிறார். அந்த நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நூலாசிரியர் வாஸந்தி, ஜெயலலிதாவைப் பற்றி பல ஆண்டுகளாகத் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இந்த நூலை படைத்திருக்கிறார். அரசியல் மற்றும் வ...
பெண்களை அச்சுறுத்தும் சினைப்பை நீர்க்கொப்பளம்! ”குழந்தைப்பேறும்  பாதிக்கலாம்”

பெண்களை அச்சுறுத்தும் சினைப்பை நீர்க்கொப்பளம்! ”குழந்தைப்பேறும் பாதிக்கலாம்”

அலோபதி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, பெண்கள் நலம், மகளிர், மருத்துவம், முக்கிய செய்திகள்
''கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறாள், அந்த இளம்பெண். வயது 18. திடீரென்று அவளது முகத்தில் அதிகளவில் பருக்கள் தோன்றவே, தோழிகள் கிண்டல் செய்தனர். போதாக்குறைக்கு மெல்லிதாக அரும்பு மீசையும் முளைக்க, தொடர் கேலி, கிண்டலுக்கு ஆளானாள். அந்தப்பெண் ஒரு நாள் என்னைச் சந்தித்தாள். உடல் பருமன், மெல்லிய மீசை, முகத்தில் பருக்கள் இதையெல்லாம் வைத்து அவளுக்கு என்ன பிரச்னை இருக்கும் என்ற யூகத்திற்கு வந்துவிட்டாலும், 'மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கிறதா?' என்றும் கேட்டேன். அதற்கு அவள், சில நேரம் இரண்டு மாதங்களுக்கு மேல்கூட மாதவிடாய் தள்ளிப்போகிறது. அப்போது ரத்தப்போக்கு அதிகமாக இருக்கிறது என்றாள். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்ததில், நான் யூகித்ததுபோலவே அவளுக்கு சினைப்பையில் நீர்க்கொப்பளங்கள் இருப்பது தெரியவந்தது. ஆங்கிலத்தில், 'பாலி சிஸ்டிக் ஒவேரியன் டிசீஸ் (Polycystic ovarian disea...
சட்டப்பேரவைக்குள் டிடிவி தினகரனின் ‘ஸ்லீப்பர் செல்’!; அமைச்சருடன் மோதல்!!

சட்டப்பேரவைக்குள் டிடிவி தினகரனின் ‘ஸ்லீப்பர் செல்’!; அமைச்சருடன் மோதல்!!

அரசியல், ஈரோடு, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக சட்டப்பேரவையில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பதிலில் திருப்தி இல்லை என்று ஆளுங்கட்சி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கடுமையாக ஆட்சேபித்தது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அதிமுக ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரும் ஊடகங்களுக்கு தன்னிச்சையாக பேட்டி அளிக்கக்கூட மாட்டார்கள். பிரதான எதிர்க்கட்சியான திமுகவைச் சேர்ந்தவர்களுடன் கட்சிகளைக் கடந்து நட்பு பாராட்டினாலோ, தொழில் ரீதியிலான தொடர்பு வைத்திருப்பது தெரிய வந்தாலோ உடனடியாக அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விடுவர். இத்தகைய ராணுவக் கட்டுப்பாடு எல்லாமே ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை மட்டுமே. அவர் மறைவுக்குப் பின்னர் அக்கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எல்லோருமே ஊடகங்களிடம் தனித்து பேசத்தொடங்கிவிட்டனர். காலையில் ஓர் எம்எல்ஏ பேசியதை மாலைய...
ஊடகங்களை பேச விடுங்கய்யா….!: உச்சநீதிமன்றம் உத்தரவு

ஊடகங்களை பேச விடுங்கய்யா….!: உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தியா, முக்கிய செய்திகள்
ஊழல் முறைகேடு பற்றிய செய்தியில் சிறு சிறு தவறுகள் அல்லது அதை வெளியிடுவதில் அதீத ஆர்வம் இருப்பதை எல்லாம் அவதூறாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 9, 2018) கருத்து தெரிவித்துள்ளது. அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் மீதான தாக்குதல் என்பது இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் வியாபித்து இருக்கிறது. பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்குழு ஆய்வின்படி, 1992 முதல் கடந்த 2017ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் 1252 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. பத்திரிகையாளனின் பேனா முள் தலை சாய்ந்திருக்கும் வரை ஆட்சியாளர்களோ, அதிகார வர்க்கமோ கண்டுகொள்வதில்லை. அதே பேனா முள் அவர்களை நோக்கி நீளும் ஆயுதமாக மாறும்போதுதான் ஊடகத்தின் மீதோ அல்லது அதை எழுதியவர் மீதோ தாக்குதல் தொடுக்க தொடங்கி விடுகின்றனர். ஆளும் வர்க்கம், அவதூறு வழக்கு என்ற பெயரில் வழக்குக்கு மேல் வழக்கு போட்டு முடக்கும் வேலைக...
சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயமில்லை!; உச்சநீதிமன்றம்

சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயமில்லை!; உச்சநீதிமன்றம்

இந்தியா, முக்கிய செய்திகள்
சினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தேசப்பற்றை வளர்க்க, நாடு முழுவதும் உள்ள அனைத்து சினிமா திரையரங்குகளிலும் படம் தொடங்குவதற்கு முன்பு, கட்டாயம் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கடந்த 2016ஆம் ஆண்டு, நவம்பர் 30ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஓர் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தது. தேசிய கீதம் இசைக்கப்படும்போது திரையில் தேசியக்கொடி இடம்பெற வேண்டும் என்றும் கூறியிருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்கள் எழுந்தன. திரையரங்கத்திற்கு வரும் ரசிகர்கள் பலர், தேசிய கீதம் இசைக்கப்படும்போது அதற்கு மரியாதை செலுத்தும் வகையில் எழுந்து நிற்பதில்லை என்ற புகார்கள் எழுந்தன.   சில இடங்களில் தேசப்பற்று என்ற பெயரில், தேசிகீதத்தை அவமதிப்பதாகக் கூறி அப்பாவி மக்க...