Tuesday, November 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

குழந்தை கடத்தும் கும்பல் எனக்கருதி வட இந்திய பெண் மீது தாக்குதல்!; சேலத்தில் அரங்கேறிய காட்டுமிராண்டித்தனம்

குழந்தை கடத்தும் கும்பல் எனக்கருதி வட இந்திய பெண் மீது தாக்குதல்!; சேலத்தில் அரங்கேறிய காட்டுமிராண்டித்தனம்

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
குழந்தைகளைக் கடத்தும் கும்பல் ஒன்று வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்குள் ஊடுருவி இருப்பதாக கடந்த மாதம் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது.   இதை உண்மை என்று கருதியவர்கள் சில இடங்களில் சந்தேகப்படும் நபர்கள் மீது சரமாரியாக தாக்கியதில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்திருந்த பெண் ஒருவரும் தாக்கப்பட்டு இறந்தனர்.   இந்நிலையில், அதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவம் சேலத்திலும் இன்று (ஜூன் 3, 2018) நடந்துள்ளது.   சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூரில் இன்று மதியம் 2 மணியளவில் வட இந்தியப் பெண் ஒருவர் அழுக்கடைந்த டி-ஷர்ட்டும், அரைக்கால் டிரவுசர் ஒன்றும் அணிந்தபடி ஊருக்குள் சுற்றி வந்துள்ளார். ஒரு சில தெருக்களில் அடிக்கடி சுற்றி வந்துள்ளார். இதைப்பார்த்த சிலர், அந்தப்பெண் குழந்தைகளைக் கடத...
”மோடி பெயரை கேட்டதும் கை, கால்கள் நடுங்கின!”; கிருஷ்ணகிரி பெண்ணின் வெள்ளந்தி பேச்சு!!

”மோடி பெயரை கேட்டதும் கை, கால்கள் நடுங்கின!”; கிருஷ்ணகிரி பெண்ணின் வெள்ளந்தி பேச்சு!!

இந்தியா, கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிரதம மந்திரி உஜ்ஜவாலா திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலருக்கும் இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீர், ஒதிஷா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் உஜ்ஜவாலா திட்டப் பயனாளிகள் சிலரிடம் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 28-5-2018ம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் உரையாடினார்.   தமிழ்நாடு தரப்பில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மேலுமலை, போகிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ருத்ரம்மா, ஈஸ்வரி, சந்திரா ஆகியோரிடம், அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். காலம் காலமாக விறகு அடுப்பில், புகை, கண் எரிச்சலுடன் சமைத்துக் கொண்டிருந்த அவர்கள் இ...
புது வாழ்வுத்திட்டம் நிறுத்தம்; வாழ்வு இழந்த 1500 குடும்பங்கள்!

புது வாழ்வுத்திட்டம் நிறுத்தம்; வாழ்வு இழந்த 1500 குடும்பங்கள்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்பு கட்டுரை -   தமிழகத்தில் புதுவாழ்வுத்திட்டம் நிறுத்தப்பட்டதால், அத்திட்டத்தில் பணியாற்றி வந்த 1500 ஊழியர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, நடுத்தெருவுக்கு வந்துள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக கிராமப்புறங்களில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள நலிவுற்ற பிரிவினரை தெரிவு செய்து, அவர்களின் வறுமையை போக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் புதுவாழ்வுத் திட்டம்.   கடந்த 15.11.2005ம் தேதி, இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதற்காக உலக வங்கி ரூ.1665 கோடி கடனுதவி வழங்கி இருந்தது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் இத்திட்டம் முதன்முதலில் தொடங்கப்பட்டது.   மாநிலம் முழுவதும் 26 மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் புது வாழ்வுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக கிராமங்களில் இரண்டு விதமான அமைப்புகள...
மேய்ச்சல் நிலமான மேட்டூர் உறுப்புக்கல்லூரி!;  சாதி பாசத்தில் எடப்பாடி பாரபட்சம்!!

மேய்ச்சல் நிலமான மேட்டூர் உறுப்புக்கல்லூரி!; சாதி பாசத்தில் எடப்பாடி பாரபட்சம்!!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-சிறப்புக்கட்டுரை-   தமிழகத்தின் முதல் உறுப்புக்கல்லூரி என்ற அந்தஸ்து இருந்தாலும் ஆளும் தரப்பினரின் அலட்சியத்தால் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மண்ணிலேயே, மேட்டூர் அரசுக்கல்லூரி கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.   சேலம், ஓமலூர் பிரதான சாலையில் கடந்த 1998ம் ஆண்டு பெரியார் பல்கலை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பெரியார் பல்கலையை ஈரோடு மாவட்டத்தில் தொடங்கும் திட்டமே இருந்தது. அப்போதைய திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மேற்கொண்ட முயற்சியால், சேலத்தில் இந்தப் பல்கலைக்கழகம் கொண்டு வரப்பட்டது.   இந்தப் பல்கலையின் நேரடி நிர்வாகத்தின் கீழ், கடந்த 2006ம் ஆண்டு மேட்டூரில் உறுப்புக்கல்லூரி ஒன்று தொடங்கப்பட்டது. பல்கலைக் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் உறுப்புக்கல்லூரியும் இதுதான். இதற்காக மேட்டூர் நான்கு ரோடு அருகே 15.75...
முன்னாள் பதிவாளர் தற்கொலை வழக்கிற்கு மூடுவிழா?  முக்கிய குற்றவாளிகளை தப்பவைக்க சதித்திட்டம்

முன்னாள் பதிவாளர் தற்கொலை வழக்கிற்கு மூடுவிழா? முக்கிய குற்றவாளிகளை தப்பவைக்க சதித்திட்டம்

அரசியல், ஈரோடு, கிருஷ்ணகிரி, குற்றம், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  சேலம் பெரியார் பல்கலையில், பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக கூறப்படும் புகாரில் முக்கிய புள்ளியாகச் சொல்லப்படும் முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனை தப்ப வைக்கும் நோக்கில், முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை வழக்கை இழுத்து மூடும் வேலையில் காவல்துறையினர் இறங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் கிளம்பியுள்ளன. பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2012-2015 காலக்கட்டத்தில் பதிவாளராக இருந்தவர் அங்கமுத்து. அதற்கு முன் இதே பல்கலையில் அவர் உடற்கல்வி இயக்குநராகவும் இருந்தார். அப்போது துணைவேந்தராக இருந்த சுவாமிநாதன், உதவி பேராசிரியர்களை நியமிக்க 25 லட்சம் ரூபாயிலிருந்து 45 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தன.     குறிப்பாக, சுவாமிநாதன் பணியில் இருந்த 2014-2017 காலக்கட்டத்தில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 136 பணியிடங்கள் நிரப்பப்பட்ட...
மோடி ஒரு சர்வதேச புரோக்கர்! – சேலத்தில் சீமான் ஆவேசம்!!

மோடி ஒரு சர்வதேச புரோக்கர்! – சேலத்தில் சீமான் ஆவேசம்!!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  முதல்வர் என்பவர் உள்ளூர் புரோக்கர். பிரதமர் என்பவர் இன்டர்நேஷனல் புரோக்கர் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் அழைப்பின்பேரில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (மே 12, 2018) சேலம் வந்திருந்தார். ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த கன்னங்குறிச்சி மூக்கனேரியை, பியூஷ் மானுஷ் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து சீரமைத்து, பொலிவுறு ஏரியாக மாற்றினர். ஏரியின் அழகை, சீமான் பரிசலில் சென்று கண்டு ரசித்தார். பின்னர் ஏரிக்கரையில் மரக்கன்றுகளை நட்டார். அதையடுத்து, சேலத்தில் கிடப்பில் போடப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான இடத்தை நேரில் பார்வையிட்டார்.     சேலம் விமான நிலையத்திற்காக நிலம் கொடுத்த விவசாயி கந்தசாமி சில நாள்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவருடைய ...
ஆசிரியர்கள் ‘ஈகோ’வால் பாதிக்கப்படும் கிராமப்புற ஏழை மாணவர்கள்!; அரசு பாராமுகம்!!

ஆசிரியர்கள் ‘ஈகோ’வால் பாதிக்கப்படும் கிராமப்புற ஏழை மாணவர்கள்!; அரசு பாராமுகம்!!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
கிராமப்புற பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணியாற்ற விரும்பாததால், 1200க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகளில் ஏழை மாணவர்களின் கல்வி நலனும், எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. ஆசிரியர் சங்கங்களுக்குள் எழுந்த நீயா? நானா? என்ற 'ஈகோ' யுத்தத்தால், உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சிக்கல் நீடிக்கிறது. கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சுணக்கம் காட்டுவது ஒருபுறம், ஆசிரியர்களின் விருப்பமின்மை மற்றொரு புறம் என மாணவர்களின் கல்வி நலன் அடியோடு முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.     எதனால் இந்த சிக்கல்? என்பது குறித்து தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க (டிஎன்பிபிஜிடிஏ) மாநிலத் தலைவர் பொன்....
ஏற்காட்டில் வருகிறது ஏகலைவா பள்ளி; இபிஎஸ் தகவல்!

ஏற்காட்டில் வருகிறது ஏகலைவா பள்ளி; இபிஎஸ் தகவல்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிக்கூடம், அடுத்தக் கல்வி ஆண்டு முதல் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.     ஏற்காட்டில் இன்று (மே 12, 2018) தொடங்கிய 43வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி துவக்க விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.   ஏற்காடு, கருமந்துறை பகுதிகளில் சிற்றுந்து (மினி பஸ்) சேவையை விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் கூறினார். மலைப்பகுதிக்குள்ளேயே இந்தப் பேருந்து சேவை இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.   இந்த விழாவில், ஏற்காடு மக்களுக்கு இரண்டு இனிப்பான திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளது, அப்பகுதி மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.   மேட்டூர் அணை திறப்பு இல்லை: முதல்வர்   கோடை விழாவைத் துவக்கி வைத்துப் பேசிய முதல்வர...
ஏற்காட்டில் கோடை விழா, மலர்க்கண்காட்சி தொடங்கியது;  5 நாள்கள் நடக்கிறது

ஏற்காட்டில் கோடை விழா, மலர்க்கண்காட்சி தொடங்கியது; 5 நாள்கள் நடக்கிறது

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, 'ஏழைகளின் ஊட்டி', 'மலைகளின் அரசன்' என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மே மாதம் கடைசி வாரத்தில் கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு முன்னதாகவே அதாவது மே மாதம் இரண்டாவது வாரத்திலேயே கோடை விழா நடத்துவதற்கான ஆயத்தப்பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது.     அதன்படி, ஏற்காட்டில் 43வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று (மே 12, 2018) தொடங்கியது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவைத் தொடங்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார்.     கோடை விழாவையொட்டி 24 ஆயிரம் கார்னேசன் மலர்கள், பல வண்ண ரோஜாக்கள் உள்பட ஒரு லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழ்நாடு தலைமைச் செயலக அமைப்பு, சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டதைக் குறிக்கும் ...
நீட் தேர்வில் மாபெரும் ஊழல்!: வேல்முருகன் பகீர் குற்றச்சாட்டு

நீட் தேர்வில் மாபெரும் ஊழல்!: வேல்முருகன் பகீர் குற்றச்சாட்டு

அரசியல், இந்தியா, கல்வி, சேலம், முக்கிய செய்திகள்
ராஜஸ்தானில் செயல்படும் தனியார் கோச்சிங் செண்டர்களும், சிபிஎஸ்இ நிர்வாகமும் சேர்ந்து கொண்டு நீட் தேர்வில் மாபெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பகீர் புகார் கூறியுள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் இன்று (மே 6, 2018) நடந்தது. முன்னதாக, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியது: மனித உரிமை மீறல்: நீட் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடி வருகிறது. தேர்வு எழுதும் மாணவிகளின் பொட்டை அழித்து, வளையல்களை உடைத்து, பூவை பறிக்கும் கொடூர செயல்களில் சிபிஎஸ்இ நிர்வாகமும், மத்திய அரசும் ஈடுபட்டு வருகிறது. சில இடங்களில் மாணவிகளின் உள்ளாடைகளைக்கூட கழற்றி சோதனையிட்டுள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதுகுறித்து தே...