சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிக்கூடம், அடுத்தக் கல்வி ஆண்டு முதல் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஏற்காட்டில் இன்று (மே 12, 2018)
தொடங்கிய 43வது கோடை விழா
மற்றும் மலர்க்கண்காட்சி துவக்க
விழாவில் அவர் இதனைத்
தெரிவித்தார்.
ஏற்காடு, கருமந்துறை பகுதிகளில்
சிற்றுந்து (மினி பஸ்) சேவையை
விரைவில் தொடங்க இருப்பதாகவும்
அவர் கூறினார்.
மலைப்பகுதிக்குள்ளேயே
இந்தப் பேருந்து சேவை
இயக்கப்படும்
என்றும் தெரிவித்தார்.
இந்த விழாவில்,
ஏற்காடு மக்களுக்கு இரண்டு
இனிப்பான திட்டங்களை
முதல்வர் அறிவித்துள்ளது,
அப்பகுதி மக்களிடையே
பெரும் கவனத்தை ஈர்த்தது.
மேட்டூர் அணை திறப்பு இல்லை: முதல்வர்
கோடை விழாவைத் துவக்கி
வைத்துப் பேசிய முதல்வர்
எடப்பாடி பழனிசாமி, விழா முடிவில்
செய்தியாளர்களிடம் கூறுகையில்,
”தமிழகத்தில் வேளாண் தொழில் சிறக்க,
தேவையான நிதி ஒதுக்கப்பட்டு
அனைத்து நடவடிக்கைகளும்
எடுக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு தேவையான
விதைகள் வழங்கப்படுகிறது.
மேட்டூர் அணையில் குறைந்த
அளவே தண்ணீர் உள்ளது அனைவரும்
அறிந்ததுதான். இப்போதைய சூழ்நிலையில்
டெல்டா பாசனத்திற்காக
ஜூன் 12ம் தேதி மேட்டூர்
அணை நீர் திறந்து விட
வாய்ப்புகள் இல்லை.
இந்த ஆண்டு பருவ மழை
நன்றாக இருக்கும்.
இதன்மூலம் அணைகள் நிரம்பும்.
காவிரி விவகாரத்தில்
உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை
வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
சேலம் மாவட்டம் வழியாக
அமைக்கப்படும் பசுமை வழிச்சாலை
திட்டத்தின் மூலம், பல்வேறு
தொழிற்சாலைகள் வரும்.
வெளிநாடுகளில் இருந்து ஏராளமான
முதலீடுகள் கிடைக்க
வாய்ப்புகள் உள்ளன.
இதனால் தொழில்
வளம் பெருகும்.
இந்த திட்டத்திற்கு
அனைவரும் வரவேற்பு
அளிக்க வேண்டும்.
பசுமை வழிச்சாலை
திட்டத்திற்கு நிலம் கொடுக்கும்
விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு
வழங்கப்படும்,” என்றார்.