Friday, October 31மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

சேலம் ஜி.ஹெச்.: டாக்டர்களுக்குள் மோதல்! மர்ம நபர் மூலம் அறுவை சிகிச்சை; ஏழை நோயாளிகள் கதி என்ன?

சேலம் ஜி.ஹெச்.: டாக்டர்களுக்குள் மோதல்! மர்ம நபர் மூலம் அறுவை சிகிச்சை; ஏழை நோயாளிகள் கதி என்ன?

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்பு கட்டுரை -   சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், இருதய சிகிச்சை டாக்டர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் அந்த துறையையே இழுத்து மூடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.   சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ள இருதய நோய் சிகிச்சைத்துறையில், டாக்டர் கண்ணன் துறைத்தலைவராக உள்ளார். இவர் உள்பட டாக்டர்கள் குணசேகரன், முனுசாமி, தங்கராஜ், பச்சையப்பன், ஞானவேல், சுரேஷ்பிரபு ஆகிய ஏழு பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் டாக்டர் முனுசாமி மீது துறைத்தலைவர் கண்ணன் உள்பட ஆறு டாக்டர்களும் மருத்துவமனை டீன், மாவட்ட கலெக்டர், மருத்துவக்கல்வி இயக்குநர், சுகாதாரத்துறை செயலர் வரை புகார் மேல் புகார் தட்டிவிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.   ஒருகட்டத்தில், கைகலப்பு வரையிலும் சென்றதாக கூறும் பிற துறை மருத்துவர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் இப்போது கார்டியாலஜி டாக...
பெட்ரோல், டீசலை தொடர்ந்து சமையல் காஸ் சிலிண்டர் விலையும் ரூ.30 உயர்வு!

பெட்ரோல், டீசலை தொடர்ந்து சமையல் காஸ் சிலிண்டர் விலையும் ரூ.30 உயர்வு!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்
  பெட்ரோல், டீசல் விலைகளைத் தொடர்ந்து வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.30.50 அதிகரித்து, நடப்பு செப்டம்பர் மாதத்திற்கு ரூ. 858.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.   வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. மானியத்தொகையை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக வரவு வைக்கப்படுவதால், காஸ் ஏஜன்சியிடம் இருந்து வாடிக்கையாளர்கள் முழு தொகையை செலுத்தி காஸ் சிலிண்டரை பெற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், சந்தை தேவை, உற்பத்தித்திறன் ஆகியவற்றைப் பொறுத்து மாதந்தோறும் சமையல் காஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது.   அதன்படி நடப்பு செப்டம்பர் மாதத்திற்கு வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை ரூ.858.50 ஆக நிர்ணயிக்கப்பட்ட...
கோகுல்ராஜ் கொலை வழக்கு: சரமாரி கேள்விகளால் அரசு தரப்பு சாட்சி திணறல்! #Day2 #Gokulraj

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சரமாரி கேள்விகளால் அரசு தரப்பு சாட்சி திணறல்! #Day2 #Gokulraj

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கேட்ட சரமாரி கேள்விகளால் அரசுத்தரப்பு சாட்சி பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார்.   சடலமாக கோகுல்ராஜ்...   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி வழக்கம்போல் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. மறுநாளான 24.6.2015ம் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிபாளையத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜின் சடலம் கைப்பற்றப்பட்டது. காவல்துறையினர் விசாரணையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம், அவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் பழகி வந்ததால், அவர்கள் காதலித்து வருவதாக எண்ணி கோகுல்ராஜை ஒரு கும்பல் திட்டமிட்டு ஆணவக...
சேலம்: 8 வயது சிறுமியிடம் ஆசிரியர் பாலியல் வக்கிரம்!

சேலம்: 8 வயது சிறுமியிடம் ஆசிரியர் பாலியல் வக்கிரம்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில் தன்னிடம் படித்து வரும் எட்டு வயது சிறுமியிடம் பாலியல் வக்கிரத்துடன் நடந்து கொண்ட கணித ஆசிரியரை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சாலையில் இழுத்துப்போட்டு செருப்பால் அடித்து துவைத்தனர். சேலம் மூன்று ரோடு அருகே ஸ்ரீவித்யா மந்திர் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சேலம் அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவைச் சேர்ந்த தியாகராஜன் மகன் சதீஸ் (24) கணிதப்பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.   இதே பள்ளியில் அரிசிபாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் 8 வயது மகள், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். இன்று (செப். 1, 2018) காலை மாணவி பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தாள். ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை? என்று சிறுமியிடம் பெற்றோர் கேட்டதற்கு, பள்ளியில் உள்ள கணித ஆசிரியர் தன்னை கண்ட கண்ட இடத்தில் தொட்டு தொந்தரவு தருவதால், இனி பள்ளிக்குச் செல்ல மாட்டே...
எடப்பாடி போட்ட ‘லவ்-ஆல்’ சர்வீஸ்! அரசு விழாவில் ‘கிச்சுகிச்சு’!!

எடப்பாடி போட்ட ‘லவ்-ஆல்’ சர்வீஸ்! அரசு விழாவில் ‘கிச்சுகிச்சு’!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
என்னதான், தன்னை ஒரு விவசாயக்குடும்ப பின்புலத்தில் இருந்து வந்தேன் என்று சொல்லிக்கொண்டாலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குள் இருக்கும் குழந்தைமைத்தன்மையும் அவ்வப்போது வெளிப்பட்டு விடுவதை பொது விழாக்களில் பார்க்க முடிகிறது.   அது மறைந்த முதல்வர் ஜெயலலிதா பற்றி பேசும்போது உணர்ச்சி மேலிட்டு அழுவதாகட்டும்; பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தனக்குத் தெரிந்த நடையில் வெள்ளந்தியாக பேசுவதாகட்டும். அவருக்கென அரசியலில் தனி நடையை உருவாக்கிக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.   பாமக நிறுவனர் ராமதாஸ், 'முதல்வர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்கிறாரே?' என்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால், அதற்கு கொஞ்சமும் சினம் கொள்ளாமல், 'அவர் இன்னும் என்னதான் சொல்லவில்லை? அவர்களால்தான் மழையே பெய்ய மாட்டேங்குது. இப்போதுதான் அக்கட்சியினர் மரம் நட ஆரம்பித்திருக்கின்றனர்,' என்று பாமகவினரை 'மரம் வ...
கோகுல்ராஜ் கொலை வழக்கு: சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது; கதறி துடித்த ஏழைத்தாய்! #day1 #Gokulraj

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது; கதறி துடித்த ஏழைத்தாய்! #day1 #Gokulraj

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  தமிழக அளவில் முக்கிய கவனம் பெற்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சிகள் மீதான விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 30, 2018) தொடங்கியது.   முதல் நாளில் மூன்று சாட்சிகளிடமாவது விசாரணை நடத்தி விடும் திட்டம் இருப்பதாக வழக்கறிஞர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், நீதிமன்ற விசாரணையே தாமதமாக பகல் 1.05 மணிக்கு மேல்தான் தொடங்கியது என்பதால், ஒரே ஒரு சாட்சியிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில், இப்போதுதான் வழக்கு அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. முன்னதாக இந்த வழக்கின் பின்னணியை சுருக்கமாக பார்ப்போம்...   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் - சித்ரா தம்பதியரின் இரண்டாவது மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 2015ம் ஆண...
உடன்கட்டை ஏறிய தமிழ்ப்பெண்கள்! ‘சதி’ கல் சொல்லும் சேதி!! #Sati #Nadukal

உடன்கட்டை ஏறிய தமிழ்ப்பெண்கள்! ‘சதி’ கல் சொல்லும் சேதி!! #Sati #Nadukal

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வரலாறு
  கணவன் இறந்தால் அவனோடு மனைவியும் எரியும் சிதையில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ளும் சதி என்னும் உடன்கட்டை ஏறும் நடைமுறை தமிழ்ச்சமூகத்திலும் இருத்திருக்கிறது என்பதற்கான நடுகற்கள் கண்டறியப்பட்டு உள்ளன.   உடன்கட்டை என்றாலே நமக்கான அண்மைய வரலாற்றில் அடிபடும் ஒரே பெயர் ராஜாராம் மோகன் ராய்தான். வங்கத்தில் பிறந்த அவர், சதி என்னும் பெண்கள் உடன்கட்டை ஏறும் அவலத்தை அடியோடு ஒழிக்க பெரிதும் பாடுபட்டார். அவருடைய தொடர் முயற்சிகளால், 1833ம் ஆண்டில் அப்போதைய வங்க ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு 'சதி'யை ஒழித்து சட்டம் கொண்டு வந்தார். வங்கம் மட்டுமின்றி ராஜஸ்தானிலும் சதி நடைமுறை அதிகமாக இருந்தது.   உண்மையில் தமிழ்ச்சமூகத்திலும் பரவலாக உடன்கட்டை ஏறும் பழக்கம் இருத்திருக்கிறது. பூதப்பாண்டியனின் ஈமத்தீயில் மனைவி பெருங்கோப்பெண்டு பாய்ந்து இறந்ததாக புறநானூற்றுப்பாடல் (246) ஒன்றில் ...
ஊழல் கதவுகளை திறக்கும் பெரியார் பல்கலை.!; ஊழியர்கள் இடமாறுதலிலும் ஓரவஞ்சனை!! #PeriyarUniversity #Scam

ஊழல் கதவுகளை திறக்கும் பெரியார் பல்கலை.!; ஊழியர்கள் இடமாறுதலிலும் ஓரவஞ்சனை!! #PeriyarUniversity #Scam

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  பெரியார் பல்கலையில் நேற்று நடந்த ஜம்போ இடமாறுதல் உத்தரவின் பின்னணியிலும் குறிப்பிட்ட சங்கத்தினரை ஒடுக்கும் நோக்கில் உத்தரவிடப்பட்டு உள்ளதோடு, முக்கிய கோப்புகள் மாயமான விவகாரத்தை அடியோடு முடக்கிப்போடும் உள்நோக்கம் இருப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. சேலம் பெரியார் பல்கலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள அமைச்சுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 376 ஊழியர்கள் தொகுப்பூதியம் / தினக்கூலி அடிப்படையில் பணிபுரிகின்றனர். இவர்கள் தவிர 62 நிரந்தர பணியாளர்களும் உள்ளனர்.   நிர்வாகம் தொய்வடையாமல் இருக்க முதுகெலும்பு போன்றவர்கள்தான் இத்தகைய அமைச்சுப்பணியாளர்கள். ஆனால் அரசு விதிகள் அல்லது பல்கலை விதிகளின்படி ஓர் ஊழியர், ஒரே பிரிவில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றக்கூடாது. நீண்ட காலமாக ஒருவர் ஒரே பிரிவில் பணியாற்றும்போது அங்கே முறைகேடுகள் அரங்கேற வாய...
சேலம்: லஞ்சம் வசூலித்த வீட்டுவசதி வாரிய எழுத்தர் கைது

சேலம்: லஞ்சம் வசூலித்த வீட்டுவசதி வாரிய எழுத்தர் கைது

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அய்யந்திருமாளிகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சேலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரான துரைசாமி, கடந்த 1995ம் ஆண்டு வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்கியிருந்தார்.   இதற்கான தவணைத்தொகை முழுவதையும் செலுத்திவிட்ட துரைசாமி வீட்டுப் பத்திரம் வழங்குமாறு விண்ணப்பித்து இருந்தார். அவருடைய மனுவை பரிசீலித்த வீட்டுவசதி வாரிய அலுவலக எழுத்தர் தனசேகரன், 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உடனடியாக பத்திரம் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனக்கூறினார். தவணை எல்லாம் முறையாக செலுத்திய பின்னரும் பத்திரத்தை வழங்க லஞ்சம் கேட்டதால் மனம் உடைந்த துரைசாமி இதுகுறித்து சேலம் மண்டல லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த அலோசனையின்பேரில் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளுடன் இன்று பகல் 12 மணியளவில் வீட்டுவசதி வாரிய அலுவலகத்தி...
தயாநிதி மடியிலேயே கை வைத்த துரைமுருகன்!; திமுக பொதுக்குழுவில் சுவாரஸ்யம்!! #DMK #MKStalin

தயாநிதி மடியிலேயே கை வைத்த துரைமுருகன்!; திமுக பொதுக்குழுவில் சுவாரஸ்யம்!! #DMK #MKStalin

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  திமுக பொருளாளராக பதவியேற்ற துரைமுருகன், கட்சிக்காக ஓடியாடி நிதி திரட்ட வேண்டும் என்று தயாநிதி மாறன் யோசனைகூற, அதே அம்பை தயாநிதி மீதே ஏவிய துரைமுருகனால் பொதுக்குழுவில் பலத்த சிரிப்பலை எழுந்தது.   சென்னை அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.  திமுக தலைவராக மு.க.ஸ்டாலின், பொருளாளராக  தலைமை நிலைய செயலாளர் துரைமுருகன் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். கட்சியின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்கினர்.   முன்னாள் மத்திய அமைச்சரும், சன் குழும இயக்குநர்களுள் ஒருவருமான தயாநிதி மாறன் பேசுகையில், மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோருக்கு வாழ்த்துச் சொன்னார். பிறகு, பொருளாளர் பதவியேற்றுள்ள துரைமுருகன், மு.க.ஸ்டாலின்போல ஓடியாடி கட்சிக்கு நிதி குவிக்க வேண்டும் என்று வேடிக்கையாக குறிப்பிட்டார். இதையடுத்து ஏற்புரையாற்றிய துரைமுருகன், அவர் தி...