Thursday, October 30மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

சேலத்தில் கோயிலில் ரகசிய அறை அமைத்து லஞ்சம் வசூல்: இந்துசமய அறநிலைய அதிகாரி சிக்கினார்!

சேலத்தில் கோயிலில் ரகசிய அறை அமைத்து லஞ்சம் வசூல்: இந்துசமய அறநிலைய அதிகாரி சிக்கினார்!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோயிலில் ரகசிய அறை அமைத்து ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரை கையும்களவுமாக காவல்துறையினர் பிடித்தனர்.   சேலத்தில் மிகவும் பழமையான சுகவனேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் குடமுழுக்குப் பணிக்காக தற்போது மராமத்துப்பணிகள், திருப்பணிகள் நடந்து வருகின்றன. இதுபோன்ற பணிகளை இந்துசமய அறநிலையத்துறை ஒப்பந்ததாரர்கள் மூலம் செய்து வருகிறது.   இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒப்பந்ததாரர்களிடம் இனாம் வழங்குமாறு இந்துசமய அறநிலைய உதவி ஆணையர் தமிழரசு கேட்டுள்ளார். அவ்வாறு இனாம் கொடுத்தால்தான், இனி வரும் காலத்திலும் கோயில் மராமத்துப்பணிகள் ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும் மிரட்டி வந்துள்ளார். லஞ்சப்பணத்தை, சேலம் தேர்வீதியில் உள்ள ராஜகணபதி கோயிலை ஒட்டியுள்ள ரகசிய அறையில் வந்து கொடுக்கும்பட...
திமுகவை திணறடித்த ரூ.1000 டோக்கன்! சொதப்பிய ஊராட்சி சபைக்கூட்டங்கள்!!

திமுகவை திணறடித்த ரூ.1000 டோக்கன்! சொதப்பிய ஊராட்சி சபைக்கூட்டங்கள்!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  மக்களவை தேர்தலையொட்டி, கடைக்கோடி மக்களையும் சந்திக்கும் வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்த திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. 'மக்களிடம் செல்வோம்; மக்களிடம் சொல்வோம்; மக்கள் மனதை வெல்வோம்' என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் ஜனவரி 9ம் தேதி, ஊராட்சி சபைக் கூட்டங்களை தொடங்கியது திமுக. ஊராட்சி சபைக் கூட்டங்கள் என்பது கிட்டத்தட்ட, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே நடத்திய 'நமக்கு நாமே' பயணத்தின் இரண்டாம் பாகம்போலதான் இருக்கிறது. இதில், மு.க.ஸ்டாலினுக்கு பதிலாக அந்தந்த தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் மக்களை சந்தித்து குறைகளைக் கேட்கின்றனர்.   சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் எம்எல்ஏ ராஜேந்திரன் உடல்நலம் குன்றியதால், மக்களவை தேர்தல் பணிகள் வேகமெடுக்காமல் இருந்தன.   கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட உடன்பிறப்புகளும், தேர்தல் பணிகளை மறந்த நிலைய...
சேலம்: ஓசியில் கறி கேட்டு முதியவரிடம் வீரம் காட்டிய காக்கிகள்! இடமாற்றத்தால் மன்னிப்பு கேட்டு கெஞ்சல்!!

சேலம்: ஓசியில் கறி கேட்டு முதியவரிடம் வீரம் காட்டிய காக்கிகள்! இடமாற்றத்தால் மன்னிப்பு கேட்டு கெஞ்சல்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில் ஓசியில் இறைச்சி தர மறுத்த முதியவரை ஏக வசனத்தில் பேசியதுடன், அடித்து உதைத்த இரண்டு எஸ்ஐக்கள் அதிரடியாக இடமாறுதல் செய்யப்பட்டனர்.   சேலத்தை அடுத்த கம்மாளப்பட்டியைச் சேர்ந்தவர் மூக்குத்தி கவுண்டர் (75). இவர், சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையம் அருகே கறிக்கடை நடத்தி வருகிறார். நேற்று (ஜனவரி 13) காலை காவல்துறை ஜீப்பில் வந்த அன்னதானப்பட்டி உதவி காவல் ஆய்வாளர் பாலசுப்ரமணி, வாகனத்தில் இருந்தபடியே, '2 கிலோ ஆட்டுக்கறி சீக்கிரம் வெட்டுடா....' என அதிகார தொனியில் கேட்டார். ஓரளவு கூட்டம் இருந்த நிலையில், பலர் முன்னிலையில் உதவி ஆய்வாளர் கண்ணியக்குறைவாக கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மூக்குத்தி கவுண்டர், 'ஏங்க உங்க வயசு என்ன... என்னோட வயசு என்ன... கொஞ்சமாவது வயசுக்கு மரியாதை கொடுங்க,' என்று கூறினார்.   இதனால் ஆத்திரம...
கொடநாடு சம்பவத்தில் பின்னால் இருப்பது யார்? எடப்பாடி விளக்கம்!

கொடநாடு சம்பவத்தில் பின்னால் இருப்பது யார்? எடப்பாடி விளக்கம்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மர்ம மரணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக வெளியான புகாரை அவர் இன்று (ஜனவரி 11, 2019) மறுத்துள்ளார். இதில் அரசியல் பின்புலம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   கடந்த 2017ம் ஆண்டு, ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டனர். முக்கிய ஆவணங்களை கொள்ளை அடித்துச்சென்றதாக புகார்கள் எழுந்தன. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை என்றும் தகவல்கள் வெளியாகின.   இந்த சம்பவங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டுமின்றி, இன்னொரு 'பெரிய புள்ளி' ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக டெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் நேற்...
கோகுல்ராஜ் கொலை வழக்கு: ப.பா.மோகன் பராக்… பிறழ் சாட்சிகள் ‘கிலி!’ சுவாதியிடம் மீண்டும் விசாரிக்க முடிவு!!#Gokulraj #day15

கோகுல்ராஜ் கொலை வழக்கு: ப.பா.மோகன் பராக்… பிறழ் சாட்சிகள் ‘கிலி!’ சுவாதியிடம் மீண்டும் விசாரிக்க முடிவு!!#Gokulraj #day15

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அந்தர் பல்டி அடித்த சுவாதி, அவருடைய தாயார் உள்ளிட்ட முக்கிய சாட்சிகள் சிலரிடம் மறு விசாரணை நடத்த சிபிசிஐடி தரப்பு முடிவு செய்திருப்பது, யுவராஜ் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.   பொறியியல் பட்டதாரி: சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் (23), கடந்த 24.6.2015ம் தேதியன்று, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் பி.இ. படித்தபோது, தன்னுடன் படித்து வந்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதியுடன் கோகுல்ராஜ் நெருக்கமாக பழகி வந்தார்.   தலை துண்டிக்கப்பட்ட நிலையில்...   கல்லூரி படிப்பு முடிந்த பிறகும்கூட சில வேளைகளில் அவர்கள் சந்தித்து வந்துள்ளனர். அப்படி கோகுல்ராஜ், 23.6.2015ம் தேதி சுவாதியைச் சந்திக்க ...
தலித் வாக்காளர்கள்தான் டார்கெட்! நாமக்கல்லில் திமுக பரபர… அதிமுக கொர்ர்…#ParliamentElection

தலித் வாக்காளர்கள்தான் டார்கெட்! நாமக்கல்லில் திமுக பரபர… அதிமுக கொர்ர்…#ParliamentElection

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  பதினாறாவது மக்களவையின் ஆயுள் காலம் 2019, மே மாதத்துடன் முடிவு பெறுகிறது. மார்ச் முதல் வாரத்தில், பதினேழாவது மக்களவை தேர்தல் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா இல்லாமல் அதிமுகவும், கருணாநிதி இல்லாமல் திமுகவும் சந்திக்கும் முதல் பொதுத்தேர்தல் இது என்பதால், தமிழக தேர்தல் களம் முன்னெப்போதையும் விட சூட்டைக் கிளப்பும்.   திமுக வேகம் ஆளும் அதிமுகவைக் காட்டிலும் திமுக தரப்பு, மக்களவை தேர்தல் பணிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரொம்பவே வேகம் காட்டி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம், மாவட்டந்தோறும் நிர்வாகிகள் கருத்துக்கேட்பு கூட்டம், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் வரை நடத்தி முடித்துவிட்டது.   தேர்தல் நெருக்கத்தில் மக்களைச் சந்திப்பது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது எல்லாம் காலங்காலமாக இருந்து வரும் நடைமுறைதான் என...
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: சாட்சிகள் விசாரணை ஜன. 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு!#Gokulraj #Day14

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: சாட்சிகள் விசாரணை ஜன. 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு!#Gokulraj #Day14

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் மாற்றப்பட்டுள்ள நிலையில், சாட்சிகள் விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளிவைத்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று (5.1.2019) உத்தரவிட்டுள்ளது.   ஆணவப்படுகொலை சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்ராவின் மகன் கோகுல்ராஜ் (23). பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் பி.இ. படிப்பை நிறைவு செய்திருந்தார்.   கடந்த 23.6.2015ம் தேதியன்று காலை வீட்டில் இருந்து பரமத்தி வேலூரைச் சேர்ந்த தனது நெருக்கமான தோழியான சுவாதியைக் காணச் சென்றிருந்தார். ஆனால் மறுநாள் மாலையில் (24.6.2015ம் தேதி) நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.   கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியுடன் கோகுல்ராஜ் நெருங்கிப் பழகி வந்...
பூவனம்: காற்றில் மிதக்கும் வானம் (கவிதை)- விமர்சனம்!

பூவனம்: காற்றில் மிதக்கும் வானம் (கவிதை)- விமர்சனம்!

இலக்கியம், திண்டுக்கல், புத்தகம், முக்கிய செய்திகள்
(பூவனம்)   தமிழ்ச்சிற்றிதழ்கள் உலகில் தனக்கென்று தனித்த இடத்தை தக்க வைத்திருக்கும் கவிஞர் பெ.அறிவுடைநம்பியின் நான்காவது படைப்பாக அண்மையில் வெளிவந்திருக்கிறது, 'காற்றில் மிதக்கும் வானம்'. கவிதை நூல். 'விழியில் ததும்பும் நீர்', 'நீரில் ஆடும் நிலா', 'மழையில் நனைந்த மின்னல்' ஆகியவை இவருடைய முந்தைய படைப்புகள்.   கவிதை நூலுக்கு இவர் இடும் தலைப்பே ரசனையானது. ஆனால், காற்றில் வானம் மிதக்குமா? என்பது கவிஞனுக்கேயுரிய முரண். பூட்டுக்கு பெயர் பெற்ற திண்டுக்கல்காரர். எனினும் அவர், கற்பனை வளத்திற்கும், கவி புனையவும் ஒருபோதும் பூட்டிட்டுக் கொண்டதில்லை. அதனால்தான், கூட்டுறவுத்துறையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, கவி உலகில் தும்பியாய் பறந்து கொண்டிருக்கிறார்.   படைப்பு நோக்கில் சொல்ல வேண்டுமானால் கவி-ஞர் பெ.அறிவுடைநம்பியிடம் எப்போதுமே ஓர் எள்ளல்தனம் இருக்கும். குறுங்கவிதைகளை 'நற...
துணைவேந்தரை ஏமாற்றுகிறதா பிரைடு நிர்வாகம்? குழப்பத்தின் உச்சத்தில் பெரியார் பல்கலை!!

துணைவேந்தரை ஏமாற்றுகிறதா பிரைடு நிர்வாகம்? குழப்பத்தின் உச்சத்தில் பெரியார் பல்கலை!!

கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  தொலைநிலைக் கல்வித்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, தேர்வுக்கு அனுப்பும் வரை புத்தகங்கள் வழங்கப்படாமல் இருக்கும் விவரமே, நாங்கள் சொல்லித்தான் தெரியும் என்றும், பிரைடு நிர்வாகம் துணை வேந்தரிடம் முக்கிய தகவல்களை மறைப்பதாகவும் படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.   பெரியார் பல்கலை சேலம் பெரியார் பல்கலையில் 'பிரைடு' என்ற பெயரில் தொலைநிலைக் கல்வி மையம் இயங்கி வருகிறது. தொலைதூரக் கல்வித் திட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதற்காக, தமிழகம் முழுவதும் 110 தனியார் படிப்பு மையங்களுக்கு பல்கலை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.   படிப்பு மையம் மட்டுமின்றி ஆன்லைன் வழியாகவும் மாணவர்கள் நேரடியாக சேரவும் அனுமதிக்கப்படுகிறது. தற்போது தொலைநிலைக் கல்வித்திட்டத்தில் 25 ஆயிரத்தக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.   பாடப்புத்தகங்கள் இது ஒருபுறம் இருக்க...
ஆணவக்கொலை: ஆடுபுலி ஆட்டம் இனி ஆரம்பம்! வருகிறார் ப.பா.மோகன்…! கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருப்பம்!!#Gokulraj

ஆணவக்கொலை: ஆடுபுலி ஆட்டம் இனி ஆரம்பம்! வருகிறார் ப.பா.மோகன்…! கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருப்பம்!!#Gokulraj

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் திடீரென்று அரசுத்தரப்பு வழக்கறிஞராக பவானி. பா.மோகனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது, இந்த வழக்கில் பரபரப்பு திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.   ஆணவக்கொலை: சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23). திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்தார். 2015, ஜூன் 23ம் தேதியன்று காலை, உடன் படித்து வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த தோழி சுவாதியைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.   மறுநாளான 24.6.2015ம் தேதியன்று, கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அவர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியை காதலிப்ப...